மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ராஜபக்ஷ குடும்பத்தினர் ஆட்சியிலிருந்த காலத்தில் மேற்கொண்ட சட்டவிரோதமான மற்றும் ஒழுக்கநெறிக்கு மாறான செயற்பாடுகளின் விளைவுகளை, நீதிமன்ற தீர்ப்புகள் முழுமையாக வெளிவருவதற்கு முன்னரே அவர்கள் அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர்.
மகிந்த ராஜபக்ஷ மற்றும் சிறந்தி ராஜபக்ஷ ஆகியோர் தற்போது இரு வேறு நாடுகளில் வாழ்ந்து வரும் அதேவேளை, நாமல், ரோஹித மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலும் எவ்வித தொடர்புகளும் இல்லை என்பது கடந்த காலங்களில் வெளிச்சத்திற்கு வந்தது.
இதனிடையே, பசில் ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் மகிந்த ராஜபக்ஷவிடமிருந்து முற்றாகப் பிரிந்து தனிமைப்பட்டுள்ளனர். சமல் ராஜபக்ஷவின் மகனான ஷமீந்திர ராஜபக்ஷ நாட்டிலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். இலங்கையை திவாலாக்கியமைக்கு இந்த ராஜபக்ஷ குடும்பத்தினரே பொறுப்புக்கூற வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர்கள் ஒவ்வொருவரும் நிதி மற்றும் ஏனைய குற்றங்களை இழைத்தமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், இவர்கள் தற்போது இயற்கையின் தண்டனையை அனுபவித்து வருவதாக பல்வேறு சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், தகுதியற்ற பெண் மாணவி ஒருவரை பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்காக நாமல் ராஜபக்ஷ தனது அரசியல் குடும்ப அதிகாரத்தைப் பயன்படுத்தி அனுப்பிய கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.











