Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka
Unbiased, Unstoppable
ஜனாதிபதி தோ்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கு இரண்டு நாட்களுக்கு குறைவான காலத்தில் அரச ஊழியர்களினதும் முப்படை அங்கத்தவர்களினதும் சம்பளத்தை அதிகரிப்பதாக ரணில் விக்கிரமசிங்க கூறினாலும் கடந்த ஜுலை 08 ஆம் திகதி நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன அவ்வாறான ஒன்றை செய்ய முடியாதென தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கிறார்.
அவர் இதனை தரவுகளை ஆதாரமாகக் கொண்டு விளக்கியுள்ளார். அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவால் உயர்த்தினால் மேலதிகமாக 14,000 கோடி ரூபா அவசியமெனவும் அதனை 20,000 ரூபாவால் அதிகரித்தால் மேலதிகமாக 28,000 கோடி ரூபா அவசியம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் சம்பளத்தை 10,000 ரூபாவால் அதிகரிப்பதாயின் குறைந்த பட்சம் வற் வரியை 21% வரையேனும் அதிகரிக்க வேண்டி நேரிடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.