முன்னாள் ஜனாதிபதியின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ, கைது செய்யப்படுவதற்கு முன்னதாகவே தமக்கு முன்பிணை வழங்குமாறு கோரி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
தமது சட்டத்தரணிகள் ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இம்மனுவில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் உள்ளிட்ட சிலர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வருகை தரும் போது தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் முன்பிணையை வழங்குமாறு அந்த மனுவின் ஊடாக கோரப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
6










