இன்றும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக வர்த்தமானியில் அறிவிப்பு… இரண்டு ஆண்டுகளில் 114 காடுகள் மூலம் 65,000 ஹெக்டேர் பாதுகாப்பு!

Aggra Falls 2026.09.26 (1)

நாட்டின் பல மாவட்டங்களில் பரந்துள்ள 9,538.68 ஹெக்டேர் (சுமார் 23,570 ஏக்கர்) பரப்பளவைக் கொண்ட 20 காடுகளைப் பாதுகாக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட வனப்பகுதிகளாக வர்த்தமானியில் அறிவிக்கும் நிகழ்வு இன்று (26) நுவரெலியா மூன்ப்ளைன்ஸ் (சந்ததென்ன) வனவியல் நிறுவனத்தில் நடைபெற்றது.

சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக படபெந்திகே மற்றும் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயகொடி ஆகியோரின் பங்கேற்புடன் இந்நிகழ்வு நடைபெற்றது. இதன் மூலம் நுவரெலியா, கேகாலை, அம்பாறை, பதுளை, வவுனியா மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள பல காடுகளின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படுகிறது.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் கடந்த 02 ஆண்டுகளில் மட்டும் 114 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்கப்பட்ட மொத்த வனப்பரப்பு 65,000 ஹெக்டேரை (160,618 ஏக்கர்) விட அதிகமாகும்.

இன்று பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட 20 காடுகள்:

  1. நுவரெலியா எல்ஜின் காடு – 1,419.45 ஹெக்டேர்
  2. கேகாலை பலல்கல காடு – 73.22 ஹெக்டேர்
  3. கேகாலை பதலேகல காடு – 27.30 ஹெக்டேர்
  4. கேகாலை ரஹலகல காடு – 157.77 ஹெக்டேர்
  5. அம்பாறை லஹுகல சாஸ்திரவெல அலியாகந்த கண்டல் மிச்சிர காடு – 101.07 ஹெக்டேர்
  6. அம்பாறை லஹுகல செங்கமுவ காடு – 758.20 ஹெக்டேர்
  7. பதுளை மஹியங்கனை மூபலான காடு – 29.79 ஹெக்டேர்
  8. பதுளை மஹியங்கனை ஹீரஸ்ஸகல காடு – 168.09 ஹெக்டேர்
  9. வவுனியா கருங்காலிகுளம் 02 காடு – 2,537.40 ஹெக்டேர்
  10. வவுனியா நெடுங்கேணி சமலன்குளம் 02 காடு – 580.28 ஹெக்டேர்
  11. வவுனியா நெடுங்கேணி பெரியகட்டிகுளம் 02 காடு – 1,301.07 ஹெக்டேர்
  12. வவுனியா நெடுங்கேணி பெரியமடு 02 காடு – 800.86 ஹெக்டேர்
  13. வவுனியா நெடுங்கேணி புளியங்குளம் 02 காடு – 135.51 ஹெக்டேர்
  14. வவுனியா நெடுங்கேணி புதுக்குளம் 02 காடு – 186.97 ஹெக்டேர்
  15. 15.வவுனியா நெடுங்கேணி வன்னிவிளாங்குளம் 02 காடு – 922.49 ஹெக்டேர்
  16. அனுராதபுரம் தம்புத்தேகம ஹபரவத்த காடு – 43.99 ஹெக்டேர்
  17. அனுராதபுரம் தம்புத்தேகம கந்துலேகம காடு – 46.32 ஹெக்டேர்
  18. அனுராதபுரம் தம்புத்தேகம மதவச்சிய காடு – 40.78 ஹெக்டேர்
  19. அனுராதபுரம் தம்புத்தேகம முஸ்னவ காடு – 17.84 ஹெக்டேர்
  20. அனுராதபுரம் தம்புத்தேகම நேகம காடு – 190.28 ஹெக்டேர்

இந்த நடவடிக்கை தற்போதைய சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்கு மட்டுமன்றி, எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை மற்றும் பாதுகாப்பிற்காகச் செய்யப்படும் நீண்டகால முதலீடாகும் என சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக படபெந்திகே இங்கு குறிப்பிட்டார்.

அத்துடன், இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், வனப்பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் தனது மனமார்ந்த நன்றியையும் கௌரவத்தையும் தெரிவித்துக் கொண்ட அவர், நாட்டின் வனவளத்தை எதிர்காலத்திற்காகப் பாதுகாக்கும் பொறுப்பைத் தொடர்ந்து நிறைவேற்றுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்