கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு நாமலிடம் வாக்குமூலம் பதிவு!

Namal Janakee 2026.09.24 (1)

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவிடம் லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாட்டதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துள்ளது.

கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டமை தொடர்பான விசாரணைக்காகவே இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள 4.3 ஏக்கர் காணியை கிரிஷ் நிறுவனத்திற்கு பெற்றுக்கொள்வதற்கும், அதற்குரிய அனுமதிகளை விரைவுபடுத்தி வழங்குவதற்கும் ஆதரவளித்தமைக்காக, மூன்று சந்தர்ப்பங்களில் முன்னாள் ஜனாதிபதியின் மகனான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் ரூபாய் லஞ்சப் பணம் வழங்கப்பட்டதாகவும், அவர் அந்த லஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்டதாகவும் கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன மீதும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்