நாட்டின் எந்தப் பகுதியிலும் தற்போது வெள்ள அபாயம் இல்லை – நீர்ப்பாசன திணைக்களம்

batti flood 12.01.2024

நாட்டில் மழைவீழ்ச்சி குறைவடைந்துள்ள நிலையில், நாட்டின் எந்தவொரு பகுதியிலும் தற்போது வெள்ள அபாயம் எதுவும் இல்லை என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவான அதிகூடிய மழைவீழ்ச்சி களு கங்கை மற்றும் மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பதிவாகியுள்ளதாக, நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் பேரிடர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

அப்பகுதிகளில் சுமார் 20 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும், மேல், வடமேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் நேற்று மழை பெய்த போதிலும், அங்கு பதிவான மழைவீழ்ச்சி குறைந்தளவிலேயே காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் 10 மில்லிமீற்றருக்கும் குறைவான மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

மழைவீழ்ச்சி குறைவடைந்துள்ளதால், நாட்டின் ஆறுகளின் நீர்மட்டம் வேகமாக அதிகரிப்பது தடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தற்போதைய நிலையில் நாட்டின் எந்தப் பகுதியிலும் வெள்ள அபாயம் ஏற்படவில்லை எனவும் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்