ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் நேற்று (31) மரண தண்டனை விதித்துள்ளது.
போதுமான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும் தாக்குதலைத் தடுக்கத் தவறியதுடன், குற்றவியல் பொறுப்பை புறக்கணித்தமை, கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகளில் அவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர்.
இந்த வழக்கில் 2022ஆம் ஆண்டு இருவரும் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீட்டைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மீள் விசாரணை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
7










