அரசாங்கத்தின் இரு பதவிகளுக்கான சம்பளத்தைப் பெற்று 22 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவரது தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சுகீஸ்வர பண்டாரவை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (30) மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி சந்தேக நபரான சுகீஸ்வர பண்டார எதிர்வரும் 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
3










