Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka

Unbiased, Unstoppable

  • முகப்பு
  • செய்திகள்
  • கொவிட்-19
  • உலகம்
  • ஆடுகளம்
  • கட்டுரைகள்
  • සිංහල
  • English

போதைப்பொருள் கடத்தலுக்காக நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐவரை மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்தார்

13/08/2026 Leave a Comment

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், யாழ்ப்பாணம் கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 8 பேருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்த நிலையில், அவர்களில் 5 பேர் ஜனாதிபதிக்கான அதிகாரங்களைப் பயன்படுத்தி விடுதலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் நந்தன வீரரத்ன இந்தத் தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, பொலிஸாரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்ட அந்த 8 பேரில் 5 பேர் இந்தியப் பிரஜைகள் என்றும், அந்த ஐந்து பேரும் விடுதலை செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Filed Under: முதன்மை செய்திகள்

22 இலட்சம் பேர் தொடர்பான புதிய தகவல்

13/08/2026 Leave a Comment

அரசாங்கத்தினால் தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள நீதித்துறை மறுசீரமைப்புகள் தொடர்பில் சமூகத்தின் கவனம் மேலும் அதிகரித்துள்ளது.

இந்த மறுசீரமைப்புகள் அத்தியாவசியமானவை என சமூக ஊடகங்களில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் பங்கேற்ற சுமார் 80 சதவீதமானோர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் ஆய்வாளர்கள், 2023ஆம் ஆண்டு நிறைவடையும் போது நீதித்துறை அமைப்பில் சுமார் 11 இலட்சம் வழக்குகள் தேங்கியிருந்ததாக தெரிவிக்கின்றனர்.

இதன் மூலம், வழக்குத் தொடர்ந்த தரப்பு மற்றும் பிரதிவாதித் தரப்பு என இரு தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பத்தில் ஒரு பங்கினரான சுமார் 22 இலட்சம் பேர் தொடர்பான வழக்குகள் நீதித்துறை அமைப்பில் தேங்கியுள்ள நிலை காணப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Filed Under: செய்திகள்

ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு

13/08/2026 Leave a Comment

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு ஆகஸ்ட் 12ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த வெற்றிகரமான கலந்துரையாடலின்போது, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டன.

இதன்போது முன்வைக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் கவனத்தில் எடுத்த ஜனாதிபதி, அது தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் நீதித்துறை அமைப்பின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் திட்டமிட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

நீதியை நிலைநாட்டும் செயல்முறை நீதிமன்றத்துடன் மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, விசாரணை, வழக்குத் தொடருதல் மற்றும் நீதிமன்றம் ஆகிய அனைத்து பிரிவுகளும் ஒருங்கிணைந்த செயல்முறையின் பகுதிகள் என தெரிவித்தார். அதன்படி, இந்த செயல்முறையை வலுப்படுத்துவதற்காக சட்டமா அதிபர் திணைக்களம், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு, இலங்கை பொலிஸ் மற்றும் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் மனித வளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் சேவைகளை மாவட்ட மட்டத்திற்கு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், பொதுமக்களுக்கு வசதியாக மேன்முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகளை மாகாண மட்டத்தில் முன்னெடுப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மக்களின் நீதிமன்ற நடவடிக்கைகளை இலகுபடுத்தும் வகையில் மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், நீதிமன்றங்களுக்கு தேவையான பௌதிக வசதிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எனவே, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான தீர்மானம் தனிநபர் ஒருவரையோ அல்லது குழுவொன்றையோ இலக்காகக் கொண்டு எடுக்கப்பட்டதல்ல என்றும், நாட்டின் பொதுநலனை கருத்திற்கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானம் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இந்தத் திருத்தம் ஒட்டுமொத்த நீதித்துறை அமைப்பிலும் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான விரிவான சீர்திருத்தங்களின் ஒரு பகுதி மட்டுமே என்றும், அது தனது தனிப்பட்ட கருத்தோ அல்லது அரசாங்கத்தின் தனிப்பட்ட கருத்தோ அல்ல என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது போன்ற விடயங்களுக்கு கொள்கை ரீதியான எதிர்ப்பு எதுவும் இல்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். எனினும், இந்தத் தீர்மானம் தொடர்பில் மேலும் பரிசீலித்து, ஒரு பொதுவான இணக்கப்பாட்டை எட்டுவது பொருத்தமானது என அவர்கள் முன்மொழிந்தனர்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய உள்ளிட்ட அதன் சிரேஷ்ட பிரதிநிதிகள் பலரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

இந்த விவகாரத்தின் பின்னணி தொடர்பாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்னதாகவும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது குறித்து தனது கவலைகளை ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தது.

Filed Under: முதன்மை செய்திகள்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

12/08/2026 Leave a Comment


​இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (11) முற்பகல் பாலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.


​இதன்போது அண்மைக்காலமாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் வளர்ச்சியடைந்துள்ள இராஜதந்திர மற்றும் கலாச்சார உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. அத்துடன், இந்தியாவின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்தும், இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் ஏற்பட்டுள்ள நேர்மறையான மாற்றங்கள் குறித்தும் இதன்போது விசேடமாகக் கவனம் செலுத்தப்பட்டது.


​மேலும், தொழில்நுட்பத் துறை மற்றும் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கான பயிற்சிகளை வழங்குதல் போன்ற துறைகளில் இலங்கைக்கு வழங்கப்படும் ஒத்துழைப்புகள் குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.


​இந்நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் பிரிவின் முதல் செயலாளர் டாக்டர் ராம்பாபு செல்லப்பா (Dr. Rambabu Chellappa) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் வெளிநாட்டுப் பிரிவின் கல்பனா மதுபாஷினியும் கலந்துகொண்டனர்.

Filed Under: முதன்மை செய்திகள்

மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் வழங்கிய சிறை அதிகாரி கைது

12/08/2026 Leave a Comment

பொரளை மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் வழங்கி வந்ததாக சந்தேகிக்கப்படும் சிறைச்சாலை காவலர் ஒருவர், சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான 100 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 20 கிராம் ஹெரோயினுடன் கல்கிசை பிரிவு குற்ற விசாரணைப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளை, வைத்தியர் வீதியில் வசிக்கும் 32 வயதுடைய நபர் ஒருவர் முதலில் இந்த போதைப்பொருள் தொகையுடன் கல்கிசை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, மெகசின் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் நபர் ஒருவர் WhatsApp தொலைபேசி அழைப்பின் மூலம் ஒரு இடம் தொடர்பான தகவல்களை வழங்கியதாகவும், அதன்படி அந்த இடத்திலிருந்து போதைப்பொருள் பொதியை பெற்றுக்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த போதைப்பொருள் பொதியை பொரளை, வனாத வீதியில் மற்றுமொரு நபரிடம் ஒப்படைக்க வேண்டியிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, சந்தேகநபரிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், கல்கிசை பிரிவு குற்ற விசாரணைப் பணியகத்தின் பொறுப்பதிகாரியின் தலைமையில் குறித்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அப்போது, சிறைச்சாலை விளையாட்டு உடையில் வந்த ஒருவர் சந்தேகநபருக்கு அருகில் வந்து போதைப்பொருள் அடங்கிய பொதியை பெற்றுக்கொள்ள முயன்றுள்ளார். இதன்போது அப்பகுதியில் மறைந்திருந்து கண்காணித்துக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சிறைச்சாலை காவலர் கடந்த ஜனவரி மாதம் மெகசின் சிறைச்சாலையில் பணியில் இணைந்தவர் எனவும், அதற்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் பணியாற்றியவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பிரிவு குற்ற விசாரணைப் பணியகம் மேற்கொண்டு வருகிறது.

Filed Under: முதன்மை செய்திகள்

971 பேர் தயார் நிலையில்

12/08/2026 Leave a Comment

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவை மேலும் சுயாதீனமாகவும் வலுப்படுத்தப்பட்ட வகையிலும் செயல்படுத்துவதற்காக, 971 பேரைக் கொண்ட தனியான பணியாளர் குழுவை ஆட்சேர்ப்பு செய்து, 2027 ஜனவரி மாதம் முதல் 23 மாவட்டங்களில் அலுவலகங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “ON AIR POLITICS” கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், இலங்கை 2004ஆம் ஆண்டு கைச்சாத்திட்ட ஐக்கிய நாடுகளின் ஊழல் எதிர்ப்பு உடன்படிக்கைக்கு அமைவாக, அதற்கு இணையான சட்டங்கள் 2023ஆம் ஆண்டு இலங்கையில் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் அதிக அதிகாரங்களுடன் நிறுவப்பட்டுள்ள இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிகள் மற்றும் அதிகாரங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு முக்கியமான பல தகவல்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

மேலும், தான் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய காலத்திலும், நீதி கோரி நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பழைய வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கி நடவடிக்கை எடுத்ததாகவும் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Filed Under: முதன்மை செய்திகள்

கட்சி – எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு ஒன்றிணைந்து செயல்படுகிறது

12/08/2026 Leave a Comment

இலங்கை நாடாளுமன்றத்தில் செயல்பட்டு வரும் பொது மனுக்கள் குழுவுக்கு பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர்பில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கூட்டாக செயல்பட்டு தீர்வுகளை வழங்கி வருவதாக, அக்குழுவின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான காமினி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் தங்களுக்கு ஏற்பட்ட அநீதிகள் மற்றும் குறைகள் தொடர்பான மனுக்களை நேரடியாக இந்த நாடாளுமன்றக் குழுவிடம் முன்வைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 9ஆம் திகதி வெளியான சிலுமின பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில், பொது மனுக்கள் குழுவின் செயல்பாடுகள், அதன் அதிகாரங்கள் மற்றும் பொதுமக்கள் தங்களுடைய பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு பெற்றுக்கொள்ள முடியும் என்பது தொடர்பில் அவர் விரிவாக விளக்கியுள்ளார்.

ஜனநாயக ஆட்சியில் மக்களின் இறையாண்மை அதிகாரம் செயல்படுத்தப்படும் பிரதான நிறுவனமாக நாடாளுமன்றம் விளங்குகிறது. நாடாளுமன்றத்தில் உள்ள பல்வேறு குழுக்களில், பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் முறைப்பாடுகளை நேரடியாக முன்வைக்கக்கூடிய விசேட அமைப்பாக பொது மனுக்கள் குழு விளங்குவதாக காமினி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனமொன்றினால், அரச அதிகாரியொருவரால் அல்லது உள்ளூராட்சி நிறுவனமொன்றினால் அநீதி இழைக்கப்பட்டதாக ஒருவர் கருதினாலோ அல்லது தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக உணர்ந்தாலோ, அது தொடர்பில் முறைப்பாடு செய்யக்கூடிய முக்கிய நாடாளுமன்ற பொறிமுறையாக இந்தக் குழு செயல்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

10ஆவது நாடாளுமன்றத்தில் பொது மனுக்கள் குழு 29 உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இதில் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் தங்களது மனுக்களை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஊடாக சபாநாயகரிடம் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் அந்த மனுக்கள் குழுவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, ஏற்பட்டுள்ள அநீதி தொடர்பில் பரிந்துரைகள் வழங்கப்படுவதாக அவர் விளக்கியுள்ளார்.

இந்த நாடாளுமன்ற பொறிமுறையை முறையாக வலுப்படுத்தும் பணியை ஆரம்பித்துள்ளதாகவும், அதற்காக ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கூட்டாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொது மனுக்கள் குழுவுக்கு அரச அதிகாரிகளை குழுவின் முன்னிலையில் அழைப்பதற்கும், அரச ஆவணங்கள் மற்றும் கோப்புகளை பரிசீலிப்பதற்கும், மனுவுடன் தொடர்புடைய இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்வதற்கும் அதிகாரம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

10ஆவது நாடாளுமன்றத்தில் பொது மனுக்கள் குழுவின் செயல்பாடுகள் முன்னைய காலத்தைவிட அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னர் வாரத்திற்கு ஒரு நாள் அல்லது மாதத்திற்கு இரண்டு நாட்கள் மாத்திரமே குழு கூடியதாகவும், தற்போது ஒவ்வொரு நாடாளுமன்ற வாரத்திலும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் குழு கட்டாயமாகக் கூடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

2025ஆம் ஆண்டு முதல் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில் நாடாளுமன்றம் கூடிய 157 நாட்களில், பொது மனுக்கள் குழு 60 நாட்கள் கூடியதாகவும், அந்தக் காலப்பகுதியில் 392 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அவற்றுக்கான பரிந்துரைகள் மூன்று அறிக்கைகள் ஊடாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னர் குழு வழங்கிய பரிந்துரைகள் சில அரச அதிகாரிகள் அல்லது அமைச்சுக்களால் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்ததாகக் கூறப்படும் விமர்சனத்துக்கும் தற்போது புதிய நடைமுறை மூலம் தீர்வு காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், நிலையியற் கட்டளை 125(5) இன் கீழ் சபாநாயகருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் மூலம், சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் பரிந்துரைகள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை கோரப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 6 முதல் 8 வாரங்களுக்குள் நாடாளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரச துறையினால் ஏற்பட்ட அநீதி, அடிப்படை உரிமை மீறல் அல்லது அநியாயமான பழிவாங்கல் தொடர்பில் எந்தவொரு குடிமகனும் மனுவொன்றைத் தயாரிக்க முடியும்.

அந்த மனுவில் ஏற்பட்ட அநீதி தொடர்பான முழுமையான விபரங்களையும், தாம் எதிர்பார்க்கும் நிவாரணத்தையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். பின்னர், தமது பிரதேசத்தைச் சேர்ந்த அல்லது தமக்குத் தெரிந்த எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர் ஊடாகவும் சபாநாயகரிடம் அந்த மனுவை சமர்ப்பிக்க வேண்டும்.

சபாநாயகரின் அனுமதியைத் தொடர்ந்து, நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலின் 6ஆவது விடயமான “பொது மனுக்களை சமர்ப்பித்தல்” என்ற நடைமுறையின் கீழ் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் அந்த மனுவை சபையில் சமர்ப்பிப்பார். அதன் பின்னரே அந்த மனு அதிகாரப்பூர்வமாக பொது மனுக்கள் குழுவிடம் அனுப்பப்படும்.

மனு கிடைத்த பின்னர், முதலில் சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளரிடம் இருந்து மனு தொடர்பான அறிக்கை கோரப்படும். அந்த அறிக்கை கிடைத்த பின்னர், அது மனுதாரருக்கு அனுப்பப்பட்டு அவரது கருத்துகளும் பெறப்படும்.

அதன்பின்னர் அமைச்சின் செயலாளர், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் மனுதாரர் ஆகியோர் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும்.

நீதிமன்ற விசாரணையைப் போன்ற முறையில் சாட்சியங்கள் பெறப்பட்டு, மனுதாரருக்கு தனது தரப்பை விளக்குவதற்கும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேள்விகளை எழுப்புவதற்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

மனுதாரர், சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் ஒழுக்காற்று அதிகாரம் கொண்ட அரச நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் பரிசீலித்து நியாயமான பரிந்துரையை வழங்குவதே குழுவின் நோக்கம் என காமினி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

“உங்களுக்கு அநீதி ஏற்பட்டிருந்தால் அதை பொறுத்துக்கொண்டு இருக்க வேண்டாம். நாடாளுமன்றத்தில் உங்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பொறிமுறையைப் பயன்படுத்துங்கள். நியாயமான காரணம் இருந்தால் உங்களுக்கு நிவாரணம் வழங்க பொது மனுக்கள் குழு கடமைப்பட்டுள்ளது. அது உங்கள் உரிமை. உங்களுக்குக் கிடைத்துள்ள அந்த உரிமையை அதிகபட்சமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என அவர் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.

உதித குணவர்தன

Filed Under: முதன்மை செய்திகள்

சஜித் – சாமருக்கு இடையிலான அரசியல் மோதல் தீவிரம்

12/08/2026 Leave a Comment

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அண்மையில் வெளியிட்டு வரும் கருத்துகள் தொடர்பாக அரசியல் விமர்சகர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.

குறிப்பாக, அரசாங்கம் முன்வைத்துள்ள நீதித்துறை மறுசீரமைப்பு நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்டு கருத்து வெளியிட்டுள்ள சஜித் பிரேமதாச, நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதன் மூலம் விவசாய மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு முன்னர் ஆளும் தரப்பைச் சேர்ந்த சாமர சம்பத் தசநாயக்கவும் இதேபோன்ற கேள்வியை முன்வைத்திருந்தார். ஊழல்வாதிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் வெலிமட உருளைக்கிழங்கு விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படுமா? என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில், சஜித் பிரேமதாச உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜூலை 4ஆம் திகதி நடத்திய கூட்டம், அதன் பின்னர் ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் மற்றும் தற்போதைய நிலைமை தொடர்பான விடயங்கள் ஆகியவை தற்போது அரசியல் விவாதமாக மாறியுள்ளன.

Filed Under: செய்திகள்

கொலம்பியாவில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம் – உயிரிழப்பு 132 ஆக உயர்வு

11/08/2026 Leave a Comment

லத்தீன் அமெரிக்க நாடான கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று (10) ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நிலநடுக்கத்தின் மையப்பகுதி கொலம்பியாவின் சோகோ (Chocó) பிராந்தியத்தில் உள்ள சான் ஜோசே டெல் பால்மார் பகுதியில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் தலைநகர் பொகோட்டா உட்பட பல பகுதிகளில் உணரப்பட்டதுடன், காலி, பெரெய்ரா, குயிப்டோ மற்றும் மணிசாலெஸ் நகரங்களிலும் கணிசமான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக, கோப்பி உற்பத்திக்கு பிரசித்தி பெற்ற பெரெய்ரா நகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நிலநடுக்கத்தால் 1,600க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன், குறைந்தது 61 கட்டிடங்கள் முழுமையாக இடிந்து விழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களைத் தேடும் மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் தாக்கத்தைத் தொடர்ந்து கொலம்பியா அரசாங்கம் அவசரகால நிலையை அறிவித்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என்பதால், அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படும் எண்ணிக்கைகள் அடிப்படையில் நிலைமை தொடர்ந்து புதுப்பிக்கப்படும்.

Filed Under: உலகம், செய்திகள்

ஹொலிவுட் நடிகை ரோஸமண்ட் பைக் – பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு

11/08/2026 Leave a Comment

புகழ்பெற்ற ஹொலிவுட் நடிகை ரோஸமண்ட் பைக் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பு கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

பல தசாப்தங்களாக இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் திட்டம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ரோஸமண்ட் பைக் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

ரோஸமண்ட் பைக் பிரபல நடிகை மட்டுமன்றி, மைன்ஸ் அட்வைசரி குரூப் (Mines Advisory Group – MAG) அமைப்பின் சர்வதேச தூதுவராகவும் செயற்பட்டு வருகிறார்.

பிரதமரை சந்திப்பதற்கு முன்னதாக, வடக்கில் உள்ள மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படும் விதத்தை ரோஸமண்ட் பைக் நேரில் பார்வையிட்டார்.

கண்ணிவெடிகளை அகற்றும் ஆபத்தான பணிகளில் ஈடுபட்டுள்ள சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களைச் சேர்ந்த பணியாளர்களையும் அவர் சந்தித்து, அவர்களுடன் அன்பாக உரையாடினார்.

கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சேவை இதன்போது பாராட்டப்பட்டது.

மேலும், கண்ணிவெடி விபத்துகள் அதிகம் இடம்பெற்ற பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் நடத்தப்பட்ட கண்ணிவெடி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் ரோஸமண்ட் பைக் கலந்துகொண்டார்.

90 சதவீதத்துக்கும் அதிகமான கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன

இலங்கையில் கண்ணிவெடிகள் இருப்பதாக அடையாளம் காணப்பட்ட நிலப்பரப்பில் 90 சதவீதத்துக்கும் அதிகமான பகுதி தற்போது முழுமையாக கண்ணிவெடிகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், போரினால் இடம்பெயர்ந்திருந்த சுமார் 10 இலட்சம் மக்களுக்கு தங்களது சொந்தக் கிராமங்களில் மீண்டும் குடியேறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள கண்ணிவெடி அபாயப் பகுதிகள் தற்போது சுமார் 20.8 சதுர கிலோமீற்றர் என்ற அளவுக்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீதமுள்ள பகுதிகளிலும் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்கி, அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் இலங்கையை முழுமையாக கண்ணிவெடிகளற்ற நாடாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ரோஸமண்ட் பைக் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் கண்ணிவெடி அச்சுறுத்தலில் இருந்து முழுமையாக விடுபடும் உலகின் முன்னணி நாடுகளில் இலங்கையும் ஒன்றாக இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணிவெடி அச்சுறுத்தல் முற்றாக நீங்கிய பின்னர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விவசாயம், சுற்றுலாத்துறை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை விரைவாக அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Filed Under: செய்திகள்

  • 1
  • 2
  • 3
  • …
  • 567
  • Next Page »

Recent Posts

  • போதைப்பொருள் கடத்தலுக்காக நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐவரை மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்தார்
  • 22 இலட்சம் பேர் தொடர்பான புதிய தகவல்
  • ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு
  • இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு
  • மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் வழங்கிய சிறை அதிகாரி கைது

Recent Comments

  • Harani on பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு…
  • Aagash on செவ்வந்தியை கைது செய்த ரொஹான் ஒலுகலவிற்கு தொலைபேசியில் ஜனாதிபதி பாராட்டு…
  • P.GNANAPRAGASOM on குட்டித் தேர்தலை இப்போதே நடத்த வேண்டாம் – பயத்தில் பதறிய ரஞ்சித் மத்தும பண்டார
  • Thamil Selvan on பாடசாலை மாணவர்களுக்கு அஸ்வெசும திட்டத்தின் கீழ் 6000 ரூபா – அரசாங்கம் அறிவிப்பு
  • SARINIGAR on அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

English செய்தித்தாள்கள்

  • Sri Lanka Mirror
  • Daily Mirror
  • Lanka News Web
  • Lanka Business Online

பிற வலைத்தளங்கள்

  • Unions Lnaka
  • Left Library
  • Left Magazine
  • SYU Sri Lanka

தமிழ் செய்தித்தாள்

  • Virakesari
  • Thinakkural
  • Tamil Mirror
  • New Uthayan
  • Vidivelli
  • Ada Derana – Tamil

வீடியோ

  • வீடியோ
  • A5News Youtube Channel
  • JVP Newsroom

© Copyright 2002 - 2021 Lanka Truth - Most Reliable Latest News from Sri Lanka. All Rights Reserved.