கொழும்பு மாநாகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் நாளாந்தம் 500 டொன் அளவில் குப்பை சேர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது பண்டிகை காலம் என்றபடியால், மேலதிகமாக 100 டொன் குப்பைகள் அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி இரவு, காலி முகத்திடல் மைதானத்தில் ஒன்று கூடுபவர்கள் விட்டுச் செல்லும் குப்பைகளை அகற்ற சுமார் 150 தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படவுள்ளதாக மாநகர சபை ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார்.
2










