கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படும் சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.ஆதம்பாவின் ஜனாஸாவை 18ஆம் திகதி வரை தகனம் செய்யாமல் வைத்திருக்க வேண்டும் என்று கல்முனை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆதம்பாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறி, வைத்தியசாலை நிர்வாகம் ஜனாஸாவை குடும்பத்தாரிடம் வழங்க மறுப்புத் தெரிவித்திருந்தது. அவ்வாறிருக்க வாய்ப்பில்லை, மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி குடும்பத்தார் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்தே மேற்கண்டவாறு கல்முனை மேல் நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
