வெளியுறவுக் கொள்கை குறித்து தெளிவில்லாத ஆட்சியாளர்கள் இலங்கையை சீனாவின் காலனித்துவ நாடாக மாற்றிவிட்டனர் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
விஜயகுமாரதுங்கவின் 33 ஆவது நினைவு தினத்தின் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுககையில்…
“தற்போது நாட்டிற்கு இளம் தலைமுறை அவசியமாகிறது. கற்ற, ஒழுக்கமுள்ள, அரசியலை வியாபாரமாக மாற்றாத, மக்களையும் நாட்டையும் நேசிக்கும், தமது முயற்சியில் நாட்டை கட்டியெழுப்பும் புதிய அரசியல் தலைமுறைக்கு நாட்டை கொடுக்கவேண்டிய காலகட்டம் வந்துள்ளது. ஆனால் இன்று நாடு மிக மோசமான நிலையில் உள்ளது.” என்றார்.
0










