Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka

Unbiased, Unstoppable

  • முகப்பு
  • செய்திகள்
  • கொவிட்-19
  • உலகம்
  • ஆடுகளம்
  • கட்டுரைகள்
  • සිංහල
  • English

ஏப்ரல் 05 முதல் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய்!

10/03/2021 Leave a Comment

எதிர்வரும் ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நாட் சம்பளம் வழங்குவதற்கான வர்த்தமானி இன்று (10) வெளியிடப்பட்டுள்ளது. 

சம்பள நிர்ணய சபையில் மேற்கொள்ளப்;பட்ட தீர்மானத்திற்கு அமைய, குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் 900 ரூபாவாகவும், வரவு செலவு திட்டக் கொடுப்பனவாக 100 ரூபாவாகவும் சேர்த்து நாளாந்த சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொழில் அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Filed Under: செய்திகள்

அமைச்சர் ஜொனீ எனது கட்டிடத்தை பலாத்காரமாக பிடித்துக் கொண்டிருக்கிறார். – கொட்டவெஹெர MOH எதிரப்பு – கூரையிலிருந்து கீழே விழுந்து வைத்தியசாலையில்

10/03/2021 Leave a Comment

தனக்கு சொந்தமான கட்டிடத்தை பலவந்தமாக கைப்பற்றி அதில் பொதுஜன பெரமுன அலுவலகமொன்றை அமைச்சர் ஜோன்ஸ்ரன் பர்னாந்து பேணிவருவதாக கொட்டவெஹெர சுகாதார மருத்து உத்தியோகத்தர் குற்றஞ் சாட்டுகிறார்.

அந்த மருத்துவரைக் கைதுசெய்யுமாறு அமைச்சின் ஆலோசனைப்படி ஒருவர் பொலீசில் பொய்யான முறைப்பாடு செய்துள்ளதாகவும் அதனால் பொலீசார் தன்னைக் கைதுசெய்ய தயாராகி வருவதாகவும் கூறி அந்த மருத்துவர் கட்டிடத்தின் கூரைமீது ஏறி எதிர்ப்பினைத் தெரிவித்தார். அவ்வேளையில் கூரையிலிருந்து வழுக்கி விழுந்தமையால் காயமுற்ற சகாதார மருத்துவ உத்தியோகத்தர் முதலில் நிக்கவெரட்டிய வைத்தியசாலைக்கும் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் பொது வைத்தியசாலைக்கும் அனுப்பப்பட்டுள்ளார்.

Filed Under: செய்திகள்

கலாவாவியின் “ரேவத்த” மன்சார வேலிக்கு பலி – 68 நாட்களில் 61 யானைகளும் 24 ஆட்களும் மரணம்

10/03/2021 Leave a Comment

2021  ஆம் ஆண்டின் சனவரி 01 ஆந் திகதி தொடக்கம் நேற்றைய (09) தினம் வரை  கழிந்த 68 நாட்களில் 61 யானைகள் மரணமடைந்துள்ளதோடு  இந்த காலப்பகுதிக்குள் மனிதனுக்கும் யானைகளுக்கும் இடையிலான மோதல்கள் காரணமாக 21 ஆட்களின் மரணமும் இடம்பெற்றுள்ளது.  இந்த காலப்பகுதியில் மிகஅதிகமாக யானைகளின் மரணம் பொலநறுவை வனசீவராசிகள் வலயத்திற்குள்ளேயே இடம்பெற்றுள்ளதோடு இந்த வலயத்தில் 17 யானைகள் இறந்துள்ளன. கடந்த 2020 ஆம் ஆண்டில் 322 யானைகள் மரணமடைந்துள்ளதோடு அவ்வருடத்தில் யானைகளுக்கும் மனிதனுக்கும் இடையிலான மோதல் காரணமாக ஆட்கள் 113 பேர் இறந்துள்ளனர்.  

அதேவேளையில் கலாவாவி மற்றும் பலலு வெவ ஒதுக்கத்தில் “ரேவத்த” எனப்படுகின்ற பிரபல்யமான யானை கெக்கிராவ, அலியாவெட்டுனுவெவ பிரதேசத்தின் சோளச் சேனையொன்றில் இழுக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் மோதியதால் நேற்று முன்தினம் (08)  இரவு மரணமடைந்திருந்தமையைக் கண்டுபிடித்ததாக வனசீவராசி உத்தியோகத்தர்கள்  கூறினார்கள்.  

இந்த யானையின் பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் அதே இடத்தில் வைத்து வனசீவராசிகள் கால்நடை வைத்தியரின் தலைமையில் நடாத்தப்பட்டதோடு  அந்த யானை ஏறக்குறைய 50 – 55 வயது கொண்டதாகவும் கலாவாவி மற்றும் பலலுவெவ யானைக்கூட்டத்தின் வயதுமுதிர்ந்த யானை எனவும்    வனசீவராசி உத்தியோகத்தர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இந்த யானை இதற்கு முன்னர்  எந்தவோர் ஆளையும் தாக்கியமையோ அல்லது காணிகளில் புகுந்து  பயிர்களுக்கு சேதம் விளைவித்தமையோ பதிவாகவில்லை என வனசீவராசி உத்தியோகத்தர்கள் கூறுகிறார்கள். 

சுமார் 50 வருடகாலமாக இந்த யானை கல்கிரியாகம, புப்போகம, கலா பலலுவெவ போன்ற பிரதேசங்களில் சஞ்சரித்துள்ளதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.  அநுராதபுரம் பண்டுலுகம வனசீவராசிகள் அலுவலகத்தின் கால்நடை வைத்தியர்  சந்தன ஜயசிங்கவை உள்ளிட்ட குழுவினர் திடீர் மரண பரிசோதனையை நடத்தினார்கள்.

இந்த யானையின் மரணம் சம்பந்தமாக தற்போது சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலா பலலுவெவவிற்கு பெருமிதம் தந்த யானையாகவும் அடிக்கடி பலரை பாதுகாத்த விலங்கெனவும் “ரேவத்த” பிரபல்யம் அடைந்திருந்ததோடு கலாவெவவை ஒரு தேசிய சரணாலயமாக  பிரகடனஞ்செய்தபோதிலும்  உரிய பாதுகாப்பு இன்மை காரணமாக காட்டு விலங்குகள் கிராமங்களுக்குள் புகுவதால் மிகவும் மனிதாபிமானமற்றவகையில் இறப்பதாகவும் சுற்றாடலியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Filed Under: செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா பரவல்… ஈராக்கில் மீண்டும் ஊரடங்கு…

10/03/2021 Leave a Comment

மேற்காசிய நாடான ஈராக்கில் கடந்த 3 மாத காலமாக கொரோனா பரவல் மந்த நிலையில் பரவியது. இதனால் மக்கள் அங்கு இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையி, பிப்ரவரி மாத இறுதியில் இருந்து கொரோன வைரஸ் அடுத்த கட்ட ஆட்டத்தை தொடங்கியுள்ளது. 

குறிப்பாக கடந்த ஒரு வார காலமாக அங்கு தினசரி பாதிப்பு எண்ணிக்கை சராசரியாக 4 ஆயிரத்துக்கு மேல் உள்ளது. இதனால் ஈராக் நாட்டில் அடுத்த இரண்டு வார காலத்துக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அந்நாட்டு சுகாதார துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில்,”மார்ச் 9-ஆம் தேதி முதல்  மார்ச் 22-ஆம் தேதி வரை அடுத்த 2 வாரங்களுக்கு பொதுமுடக்கம் (முழு ஊரடங்கு) நடைமுறையில் இருக்கும்.வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடும் கட்டுப்பாடுடன் முழு ஊரடங்கு கடைபிடிக்கபடும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.  

Filed Under: உலகம், கொவிட்-19 செய்திகள்

சீமானின் முகமூடி கிழிந்தது… வே.பிரபாகரன் படத்தை நீக்கியதற்கான காரணம் இதுதான்…

10/03/2021 Leave a Comment

தமிழ்… தமிழர்… பிரபாகரன் கடவுள் என்று தொடர்ந்து மேடைகளில் கொந்தளித்துக்கொண்டிருந்த தமிழ்நாட்டின் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்,  தொடர்ந்தும் தனது பிரச்சாரத்துக்கு பயன்படுத்தி வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் படத்தை தற்போது நீக்கியுள்ளார். 

மேடை பதாகையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படங்களை வைத்திருந்தால் அதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பமாட்டார்கள் என்பதால் தான் நீக்கியதாக சீமான் தெரிவித்தார்.

மார்ச் 7ம் திகதி சென்னையில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டம் மேடையில் வைக்கப்பட்டிருந்த பதாகையில் பிரபாகரன் படம் நீக்கப்பட்டிருந்தது.

அதேபோல், நாம் தமிழர் கட்சியின் சமூக வலைதள பக்கங்களிலும் பிரபாகரன் படங்கள் பயன்படுத்துவது தவிர்க்கப்பட்டது.

அவர் இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

என்னுடைய கடவுச்சீட்டு இல்லை, என்னால் எந்த நாட்டிற்கும் போக முடியாது. LTTE-ஐ சீமானை வைத்து தான் மீண்டும் கட்டமைக்கிறார்கள் என புகார் அளித்து என்னை முடித்துவிட்டார்கள்.

பிரபாகரனின் படங்களை யூடியூபில் போட்டால் அது முடக்கப்படுகிறது, வாட்ஸ்-அப், பேஸ்புக்கில் போட்டால் அந்த பக்கத்தை முடக்குகிறார்கள். இத்தனை நெருக்கடிகளை நான் எதிர்கொண்டு ஓடுகிறேன்.” என்றார்.

இதுகுறித்து சமூக வலைத்தளங்களிலும் சீமானின் இச்செயல் குறித்து கேலிப்பேச்சுக்கள் பகிரப்பட்டு வருகின்றன. ”தலைவரிடம் இருந்து இம்முறை தேர்தலுக்கு பணம் வராததால் சீமான் தலைவர் படத்தை நீக்கிவிட்டார்.” போன்ற நையாண்டிப் பதிவுகளும் வெளிவந்தவண்ணம் உள்ளன. 

Filed Under: செய்திகள்

விமல் வீரவன்ச மீது குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு…

10/03/2021 Leave a Comment

மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இன்று (10) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் விமல் வீரவன்ச மீது முறைப்பாடொன்றை செய்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சஹரானையும் தன்னையும் தொடர்புபடுத்தி, அமைச்சர் விமல் வீரவன்ச வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாக ரிஷாட் பதியுதீன் குற்றம் சாட்டியுள்ளார்.

அதன்படி அவரிடம் விசாரணை செய்து, உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு சி.ஐ.டியினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மையில் வெளிவந்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலும், தனக்கும் இந்த தாக்குதல் சம்பவத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் ரிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் தனது அரசியல் இருப்புக்காக இவ்வாறு அப்பட்டமான பொய்யை கூறும் விமலுக்கு எதிராக சட்டத்தரணி ஊடாக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தயாராகி வருவதாகவும் ரிஷாட் பதியுதீன் கூறினார்

Filed Under: செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை திரிபுபடுத்தப்பட்டுள்ளது – நாரம்பனாவே ஆனந்த தேரர்

10/03/2021 Leave a Comment


உயிர்த்த ஞாயிறு ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் தாக்குதல் பற்றி உலகத்திற்கு ஒரு தவறான காட்சியை கொண்டுசெல்வதாக அஸ்கிரி பீடத்தின் பிரதிப் பதிவாளர் சங்கைக்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரர் கூறுகிறார்.

இது சம்பந்தமாக மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களைச்சேர்ந்த மகாநாயக்க தேரர்களின் அபிப்பிராயத்தை ஏற்கெனவே ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
பொது பலசேனா அமைப்பின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரரிடம் பிரதிப் பதிவாளரான தேரர் இதன் மூலமாக நாட்டின் பௌத்த அமைப்புகள் இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இந்த அறிக்கை சம்பந்தமாக கருத்து தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த அறிக்கை மிகவும் முக்கியமான விடயங்களை உள்ளடக்கியதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அண்மையில் கிரிபாவயில் இடம்பெற்ற “கம சமங்க பிலிசந்தர” நிகழ்ச்சியில் இந்த அறிக்கையில் உள்ள விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதாக கூறினார்.

Filed Under: செய்திகள்

சீனி வரி மோசடி பந்துலமீது சுமத்தப்படுகிறது…

10/03/2021 Leave a Comment

சீனிவரியைக் குறைத்ததன் அநுகூலம் இரண்டு பாரியளவிலான சீனி இறக்குமதியாளர்களை சென்றடைந்தமை பற்றி பாராளுமன்றத்தின் நிதி பற்றிய குழுவினால்  கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலாக நிதி அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையொன்றில் வரிக் குறைப்பின் அநுகூலத்தை பாவனையாளருக்கு வழங்கவேண்டிய பொறுப்பு வர்த்தக அமைச்சிடமே  நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.  

இறக்குமதி செய்யப்படுகின்ற சீனியின் அளவு மற்றும் தரையிறக்கப்படுகின்ற விலையைத் தீர்மானிப்பதில் மாத்திரமே நிதி அமைச்சினால் இடையீடுசெய்ய  இயலுமென்பதை சுட்டிக்காட்டுகின்ற அறிக்கை அவற்றை நியாயமானவகையில் பகிர்ந்தளிப்பதும்  மக்களால் தாக்குப்பிடிக்கக்கூடிய சில்லறை விலையை தீர்மானித்து பேணிவருதலும் நிதி அமைச்சின் விடயப்பரப்பிற்குள் வருவதில்லை எனவும் அது வர்த்தக அமைச்சினதும் அதன்கீழ் உள்ள பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினதும் அலுவலாகுமெனவும்  தனது முடிவில்  தெரிவித்துள்ளது.   

அத்துடன் சீனி வரியைக் குறைத்தல் தொடர்பான தீர்மானத்தின் அநுகூலம்  எதிர்பார்த்த வேகத்திலும் அளவிலும் பாவனையாளருக்கு கிடைக்காமல் போனமைக்கான காரணம் தனியுரிமை சந்தைக் கட்டமைப்பு மற்றும் உச்ச சில்லறை விலைக் கட்டுப்பாட்டின்போது பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் வினைத்திறமையீனமே என அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 வர்த்தக அமைச்சிற்கு பொறுப்பாக அமைச்சர் பந்துல குணவர்தன இருப்பதோடு பாவனையாளர்  அலுவல்கள் அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டீ.எம்.எஸ். திசாநாயக்க ஆவார். 

Filed Under: செய்திகள்

அரசாங்கத்திற்குள் மோதல் தீவிரம்… ஈஸ்டர் தாக்குதல் குறித்து கசிகிறது பல தகவல்கள்… மகிந்தரும் மாட்டிக்கொண்டார்.

10/03/2021 Leave a Comment

அரசாங்கத்திற்கும் முரண்பாடுகள் தொடந்துகொண்டிருப்பதுடன், அது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகார்த்தில் மேலும் சூடுபிடித்துள்ளது. இதனால், உயிர்த்த ஞாயிறு குறித்த பல தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களை காப்பாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக அரசாங்கத்தின் கூட்டு கட்சியான தேசிய சுதந்திர முன்னணி பகிரங்கமாகவே அறிவித்துள்ளதிலிருந்து இதை நன்கு அறிய முடிகிறது. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியக்குழு உறுப்பினர் பிமல் ரத்நாயக்க,

“தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கான ஒரு கருவியாக ராஜபக்ஷவினர் ஈஸ்டர் தாக்குதல்களை பயன்படுத்திக்கொண்டனர். 

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதிதாக எதுவும் செய்யவில்லை. 60,000 பக்க அறிக்கையின் 20,000 பக்கங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. முக்கிய குற்றவாளிகளை அறிக்கை வெளிகொண்டுவரவில்லை.

உளவுத்துறை தீவிரவாத அமைப்புகளுக்கு பணம் கொடுத்தது என்ற உண்மையை பல ஆண்டுகளுக்கு முன்பு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டார். பணம் கொடுத்த விவகாரம் குறித்து பிரதமர் மஹிந்தவிடம் விசாரணை இடம்பெறவில்லை” என்று தெரிவித்தார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து அரசாங்கம் முறையான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தாததனால் சிங்கள மக்கள் மத்தியிலும் அரசாங்கம் குறித்து விமர்சனங்கள் எழும்புவதுடன், பிக்குமார்களும் தொடந்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Filed Under: செய்திகள்

“கம சமங்க பிலிசந்தர” ஊருடனான உரையாடலில் பெறுபேறு கிடைத்துள்ளது. நக்கிள்ஸ் ஒதுக்கத்தில் பயிர்ச்செய்கைக்கு வாய்ப்பு

09/03/2021 Leave a Comment

நக்கிள்ஸ் ஒதுக்கத்தைச் சார்ந்துள்ள மீமுறே கிராமவாசிகளுக்கு காடு பேணல் திணைக்களத்தின் மேற்பார்வையின்கீழ் நக்கிள்ஸ் ஒதுக்கத்தில் தெரிவுசெய்யப்பட்ட இடங்களில் ஏலக்காய் செய்கைக்காக அனுமதி வழங்க தீர்மானித்ததாக சிறிய பெருந்தோட்டச் செய்கை சார்ந்த கைத்தொழில்கள் மற்றும்
ஏற்றுமதி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திரு. ஜானக வக்கும்புற கூறகிறார்.

ஏலக்காய் செய்கை பெரும்பாலும் உயர் மலைப் பிரதேசங்களிலேயே இடம்பெறுகின்றது. ஏலக்காய் செய்கையின் மறைவில் மேற்கொள்ளப்படுகின்ற சுற்றாடல் அழிவு அதிகரித்தமையாலேயே இன்றளவில் ஒதுக்கப் பிரதேசங்களில் ஏலக்காய் செய்கை தடைசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மீமுறேவாசிகளுக்கும் மேற்சொல்லப்பட்ட அனுமதி வழங்கப்பட்டிராமையால் ஒதுக்கங்களில் ஏலக்காய் செய்கையில் ஈடுபட இயலாதுள்ளதாக அண்மையில் “கம சமங்க பிலிசந்தர” நிகழ்ச்சியில் சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அறிவித்து நிவாரணங்களை கோரியிருந்தார்கள்.

அது பற்றி விசாரித்தறிந்து அறிக்கையொன்றை வழங்குமாறு சனாதிபதி அறிவித்தமைக்கு அமைவாகவே தான்; மீமுறே கிராமத்திற்குச் சென்றதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புற கூறுகிறார். மீமுறே சுற்றுப்புறத்தில் அந்த கிராமவாசிகள் இதற்கு முன்னர் ஏலக்காய் செய்கை பண்ணிய மற்றும் அறுவடை செய்த தற்போது நக்கிள்ஸ் ஒதுக்கத்திற்குரிய காடு பேணல் திணைக்களத்தினால் நிருவகிக்கப்படுகின்ற ஒதுக்கங்களுக்குள் பிரவேசித்து ஏலக்காய்; அறுவடையைப் பெறவும் வனாந்தரங்களுக்கு சேதமேற்படாதவகையில் ஏலக்காய் செய்கையை ஒதுக்கங்களில் மேற்கொள்ளவும் அனுமதி வழங்க
தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காடு பேணல் திணைக்களம் ஊடாக செய்கைக்கு அவசியமான ஏலக்காய் கன்றுகள் வழங்கப்பட்டு செய்கைக்கான ஒதுக்கங்களுக்குள் பிரவேசிக்கின்ற மீமுறே மக்களின் அடையாளத்தை உறுதிசெய்துகொள்ளவும் காடு பேணல் திணைக்களம் வேலைத்திட்டமொன்றை வகுக்குமெனவும் இந்த அனுமதி மீமுறே மக்களுக்கேயன்றி வேறு பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் ஏலக்காய் செய்கைக்காக ஒதுக்கங்களில் பிரவேசிப்பதற்கான அனுமதியாக அமையமாட்டாதெனவும் இராஜாங்க அமைச்சர் மேலும்
தெரிவித்தார்.

Filed Under: செய்திகள்

  • « Previous Page
  • 1
  • …
  • 583
  • 584
  • 585
  • 586
  • 587
  • …
  • 605
  • Next Page »

Recent Posts

  • மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பேருந்துடன் மோதிய சொகுசு பேருந்தின் சாரதி கைது!
  • மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பேருந்துடன் மோதிய சொகுசு பேருந்தின் சாரதி கைது!
  • சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திடுவதிலிருந்து எதிர்க்கட்சியின் சில கட்சிகள் விலகல்!
  • ரணில் – மைத்ரி காலத்தில் மறைக்கப்பட்ட குற்றச்சாட்டுப் பட்டியலை அம்பலப்படுத்தினார் பிமல் ரத்நாயக்க!
  • தலதாவின் கருத்து முரண்பாடுகள் மற்றும் ஷிரந்தியின் மருத்துவ நிலை குறித்த புதிய உண்மைகள்!

Recent Comments

  • Harani on பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு…
  • Aagash on செவ்வந்தியை கைது செய்த ரொஹான் ஒலுகலவிற்கு தொலைபேசியில் ஜனாதிபதி பாராட்டு…
  • P.GNANAPRAGASOM on குட்டித் தேர்தலை இப்போதே நடத்த வேண்டாம் – பயத்தில் பதறிய ரஞ்சித் மத்தும பண்டார
  • Thamil Selvan on பாடசாலை மாணவர்களுக்கு அஸ்வெசும திட்டத்தின் கீழ் 6000 ரூபா – அரசாங்கம் அறிவிப்பு
  • SARINIGAR on அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

English செய்தித்தாள்கள்

  • Sri Lanka Mirror
  • Daily Mirror
  • Lanka News Web
  • Lanka Business Online

பிற வலைத்தளங்கள்

  • Unions Lnaka
  • Left Library
  • Left Magazine
  • SYU Sri Lanka

தமிழ் செய்தித்தாள்

  • Virakesari
  • Thinakkural
  • Tamil Mirror
  • New Uthayan
  • Vidivelli
  • Ada Derana – Tamil

வீடியோ

  • வீடியோ
  • A5News Youtube Channel
  • JVP Newsroom

© Copyright 2002 - 2021 Lanka Truth - Most Reliable Latest News from Sri Lanka. All Rights Reserved.