வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களால் 2026 ஆம் ஆண்டின் முதல் 09 மாதங்களில் மொத்தம் 6.86 பில்லியன் அமெரிக்க டொலர் பணம் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டின் முதல் 09 மாதங்களுடன் ஒப்பிடுகையில், இது 1.05 பில்லியன் டொலர் அதிகரிப்பாகும். கடந்த ஆண்டு குறித்த காலப்பகுதியில் 5.81 பில்லியன் டொலர்களே கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், கடந்த செப்டம்பர் மாதத்தில் மாத்திரம் 734.4 மில்லியன் டொலர் பணம் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்துகிறது.
கடந்த 2025 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் வெளிநாட்டு வாழ் இலங்கையர்களால் நாட்டுக்கு அனுப்பப்பட்ட வெளிநாட்டுப் பரிமாற்றங்களின் அளவு 695.7 மில்லியன் டொலாராக இருந்தது. அதற்கமைய, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு செப்டம்பரில் 38.7 மில்லியன் டொலர் அதிகளவில் கிடைக்கப்பெற்றுள்ளது.










