சீனிவரியைக் குறைத்ததன் அநுகூலம் இரண்டு பாரியளவிலான சீனி இறக்குமதியாளர்களை சென்றடைந்தமை பற்றி பாராளுமன்றத்தின் நிதி பற்றிய குழுவினால் கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலாக நிதி அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையொன்றில் வரிக் குறைப்பின் அநுகூலத்தை பாவனையாளருக்கு வழங்கவேண்டிய பொறுப்பு வர்த்தக அமைச்சிடமே நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படுகின்ற சீனியின் அளவு மற்றும் தரையிறக்கப்படுகின்ற விலையைத் தீர்மானிப்பதில் மாத்திரமே நிதி அமைச்சினால் இடையீடுசெய்ய இயலுமென்பதை சுட்டிக்காட்டுகின்ற அறிக்கை அவற்றை நியாயமானவகையில் பகிர்ந்தளிப்பதும் மக்களால் தாக்குப்பிடிக்கக்கூடிய சில்லறை விலையை தீர்மானித்து பேணிவருதலும் நிதி அமைச்சின் விடயப்பரப்பிற்குள் வருவதில்லை எனவும் அது வர்த்தக அமைச்சினதும் அதன்கீழ் உள்ள பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினதும் அலுவலாகுமெனவும் தனது முடிவில் தெரிவித்துள்ளது.
அத்துடன் சீனி வரியைக் குறைத்தல் தொடர்பான தீர்மானத்தின் அநுகூலம் எதிர்பார்த்த வேகத்திலும் அளவிலும் பாவனையாளருக்கு கிடைக்காமல் போனமைக்கான காரணம் தனியுரிமை சந்தைக் கட்டமைப்பு மற்றும் உச்ச சில்லறை விலைக் கட்டுப்பாட்டின்போது பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் வினைத்திறமையீனமே என அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வர்த்தக அமைச்சிற்கு பொறுப்பாக அமைச்சர் பந்துல குணவர்தன இருப்பதோடு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டீ.எம்.எஸ். திசாநாயக்க ஆவார்.










