நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: 06 பேருக்கு எதிரான விசாரணை வரும் 15 ஆம் திகதி ஆரம்பம்!

Court-2024.06.24-1

கொழும்பு: நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள 06 பேருக்கு எதிரான வழக்கு விசாரணையை எதிர்வரும் அக்டோபர் 15 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு நீதிமன்றம் திகதி குறித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்காகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே என்பவரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

மகிந்த பத்திரண, அசாங்க நவரத்ன, திலித் ஜயவீர, விமல் வீரவன்ச, சுகீஸ்வர பண்டார மற்றும் உதய பிரபாத் கம்மன்பில ஆகியோரே இந்த வழக்கில் பிரதிவாதிகளாகக் பெயரிடப்பட்டுள்ளனர்.

மூன்று பேரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை இம்மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் කරුණු சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பம் இம்மாதம் 23 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்