சிறிலிய கணக்குகள் முடக்கப்பட்டதால் 03 நோயாளிகள் உயிரிழப்பு – சிரந்தி ராஜபக்ஷ வாக்குமூலம்!

Shiranthi Rajapaksha 2026.09.20 (1)

கொழும்பு: ‘சிறிலிய சவிய’ அமைப்பின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டமையினால், அவ்வமைப்பின் நிதி உதவியைப் பெற்று வந்த மூன்று நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் மனைவி சிரந்தி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு (FCID) வாக்குமூலம் அளித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலிய சவிய அமைப்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாகவே அவர் இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். குறித்த அமைப்பு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடைகள் மூலமே இயங்கி வந்ததாகவும், இதற்காக அரசாங்கத்தின் நிதியோ அல்லது சொத்துக்களோ பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் அங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வங்கியின் கணினி அமைப்பில் தேசிய அடையாள அட்டை இலக்கங்களை உள்ளிடும்போது தவறு மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும், காசோலைகளில் கையொப்பமிட்டவர்கள் போலி நபர்கள் அல்லர் எனவும், தற்போதும் அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்களே எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்