அரசாங்கத்திற்கும் முரண்பாடுகள் தொடந்துகொண்டிருப்பதுடன், அது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகார்த்தில் மேலும் சூடுபிடித்துள்ளது. இதனால், உயிர்த்த ஞாயிறு குறித்த பல தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களை காப்பாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக அரசாங்கத்தின் கூட்டு கட்சியான தேசிய சுதந்திர முன்னணி பகிரங்கமாகவே அறிவித்துள்ளதிலிருந்து இதை நன்கு அறிய முடிகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியக்குழு உறுப்பினர் பிமல் ரத்நாயக்க,
“தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கான ஒரு கருவியாக ராஜபக்ஷவினர் ஈஸ்டர் தாக்குதல்களை பயன்படுத்திக்கொண்டனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதிதாக எதுவும் செய்யவில்லை. 60,000 பக்க அறிக்கையின் 20,000 பக்கங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. முக்கிய குற்றவாளிகளை அறிக்கை வெளிகொண்டுவரவில்லை.
உளவுத்துறை தீவிரவாத அமைப்புகளுக்கு பணம் கொடுத்தது என்ற உண்மையை பல ஆண்டுகளுக்கு முன்பு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டார். பணம் கொடுத்த விவகாரம் குறித்து பிரதமர் மஹிந்தவிடம் விசாரணை இடம்பெறவில்லை” என்று தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து அரசாங்கம் முறையான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தாததனால் சிங்கள மக்கள் மத்தியிலும் அரசாங்கம் குறித்து விமர்சனங்கள் எழும்புவதுடன், பிக்குமார்களும் தொடந்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.










