முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவும் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

Rohitha Bogollagama 2026.10.07 (1)

முன்னாள் அமைச்சரான ரோஹித போகொல்லாகம லஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

லஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாகவே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு இலங்கை முதலீட்டுச் சபையினால் லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்ட முதலீட்டு ஊக்குவிப்பு கண்காட்சியொன்றில் பங்கேற்று, ஹோட்டல் கட்டணங்கள் மற்றும் கண்காட்சி செலவுகளுக்காக 15 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகையை பொக்கிஷக விதிமுறைகளுக்கு முரணான வகையில் செலுத்துமாறு முதலீட்டுச் சபையின் தலைவரைத் தூண்டியதன் மூலம் லஞ்சச் சட்டத்தின் கீழ் ‘ஊழல்’ புரிந்துள்ளதாக குற்றம்சாட்டியே லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்