நக்கிள்ஸ் ஒதுக்கத்தைச் சார்ந்துள்ள மீமுறே கிராமவாசிகளுக்கு காடு பேணல் திணைக்களத்தின் மேற்பார்வையின்கீழ் நக்கிள்ஸ் ஒதுக்கத்தில் தெரிவுசெய்யப்பட்ட இடங்களில் ஏலக்காய் செய்கைக்காக அனுமதி வழங்க தீர்மானித்ததாக சிறிய பெருந்தோட்டச் செய்கை சார்ந்த கைத்தொழில்கள் மற்றும்
ஏற்றுமதி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திரு. ஜானக வக்கும்புற கூறகிறார்.
ஏலக்காய் செய்கை பெரும்பாலும் உயர் மலைப் பிரதேசங்களிலேயே இடம்பெறுகின்றது. ஏலக்காய் செய்கையின் மறைவில் மேற்கொள்ளப்படுகின்ற சுற்றாடல் அழிவு அதிகரித்தமையாலேயே இன்றளவில் ஒதுக்கப் பிரதேசங்களில் ஏலக்காய் செய்கை தடைசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மீமுறேவாசிகளுக்கும் மேற்சொல்லப்பட்ட அனுமதி வழங்கப்பட்டிராமையால் ஒதுக்கங்களில் ஏலக்காய் செய்கையில் ஈடுபட இயலாதுள்ளதாக அண்மையில் “கம சமங்க பிலிசந்தர” நிகழ்ச்சியில் சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அறிவித்து நிவாரணங்களை கோரியிருந்தார்கள்.
அது பற்றி விசாரித்தறிந்து அறிக்கையொன்றை வழங்குமாறு சனாதிபதி அறிவித்தமைக்கு அமைவாகவே தான்; மீமுறே கிராமத்திற்குச் சென்றதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புற கூறுகிறார். மீமுறே சுற்றுப்புறத்தில் அந்த கிராமவாசிகள் இதற்கு முன்னர் ஏலக்காய் செய்கை பண்ணிய மற்றும் அறுவடை செய்த தற்போது நக்கிள்ஸ் ஒதுக்கத்திற்குரிய காடு பேணல் திணைக்களத்தினால் நிருவகிக்கப்படுகின்ற ஒதுக்கங்களுக்குள் பிரவேசித்து ஏலக்காய்; அறுவடையைப் பெறவும் வனாந்தரங்களுக்கு சேதமேற்படாதவகையில் ஏலக்காய் செய்கையை ஒதுக்கங்களில் மேற்கொள்ளவும் அனுமதி வழங்க
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காடு பேணல் திணைக்களம் ஊடாக செய்கைக்கு அவசியமான ஏலக்காய் கன்றுகள் வழங்கப்பட்டு செய்கைக்கான ஒதுக்கங்களுக்குள் பிரவேசிக்கின்ற மீமுறே மக்களின் அடையாளத்தை உறுதிசெய்துகொள்ளவும் காடு பேணல் திணைக்களம் வேலைத்திட்டமொன்றை வகுக்குமெனவும் இந்த அனுமதி மீமுறே மக்களுக்கேயன்றி வேறு பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் ஏலக்காய் செய்கைக்காக ஒதுக்கங்களில் பிரவேசிப்பதற்கான அனுமதியாக அமையமாட்டாதெனவும் இராஜாங்க அமைச்சர் மேலும்
தெரிவித்தார்.










