சமகி ஜன பலவேகயவின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நயன வாசலதிலக நாடாளுமன்றத்தைப் புறக்கணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளாரா என்பது தொடர்பில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அவர் இதுவரையில் மூன்று மாத காலப் பகுதி வீதம் நாடாளுமன்றத்திற்கு வருகை தராதிருக்கும் நடைமுறையொன்றைப் பின்பற்றி வருகின்றார். நாடாளுமன்ற உறுப்பினருக்கான அனைத்து சிறப்புரிமைகளையும் பாதுகாத்துக் கொண்டு இவ்வாறு செயற்படுவது தொடர்பில் நயன வாசலதிலகவுக்கு எதிராக அதே கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
நேற்று (25) நடைபெற்ற தீர்மானமிக்க வாக்கெடுப்பில் கலந்துகொண்டு எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வாக்களிப்பதற்கும் அவர் வருகை தந்திருக்கவில்லை.








