Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka

Unbiased, Unstoppable

  • முகப்பு
  • செய்திகள்
  • கொவிட்-19
  • உலகம்
  • ஆடுகளம்
  • கட்டுரைகள்
  • සිංහල
  • English

சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கு இன்று முதல் 25 வரை கற்றல் விடுமுறை

17/02/2021 Leave a Comment

2020 டிசம்பர் மாதம் இடம்பெறவிருந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை, 2021 மார்ச் 1 முதல் 11 வரை நடைபெறவுள்ளதுடன் சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பெப்ரவரி இன்று (17) முதல் பெப்ரவரி 25 வரை கற்றல் விடுமுறை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாகாண, வலய மற்றும் பிரதேச கல்வி அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அதிபர்களுக்கும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா ஆலோசனை வழங்கியுள்ளார்.


அத்துடன் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சை அனுமதி அட்டை வழங்கும் போது அவர்களது கற்றல் விடுமுறைக்கு தடையாக இருக்கக் கூடாது என்றும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Filed Under: செய்திகள்

PCR க்கு பொது உதவியை நாடும் பேராதனைப் பொறியியற் பீட மாணவர்கள்

17/02/2021 Leave a Comment

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியற் பீட மாணவர்களுக்கான மக்கள் நன்கொடையை நிறுவுவதற்கு குறித்த பீடத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த பீடத்தில் முதற் பிரிவில் 08 மாணவர்கள் இதுவரையில் கொரோனா தொற்றுடையவர்கள் என்று அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்பில் இருந்த 36 மாணவர்களும் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 310 மாணவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர்.

Filed Under: கொவிட்-19 செய்திகள், செய்திகள்

12 மில்லியன் டொலர் தருகிறோம் – மூன்று தீவுகளையும் எமக்கு தாருங்கள்

17/02/2021 Leave a Comment

வடக்கு மாகாணங்களில் உள்ள டெல்ப், நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய மூன்று தீவுகளில் மேற்கொள்ளப்படவிருக்கும் மின்சக்தி உற்பத்தி திட்டத்தை தம்மிடம் வழங்குமாறு இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் சட்டரீதியாகக் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக தாம் 12 மில்லியன் டொலர் (228 கோடி ரூபாய்) தருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இத்திட்டமானது அமைச்சரவை தீர்மானத்துடன் கடந்த தினத்தில்  சீன நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டிருத்தது. இந்தியாவுக்கு அண்மையில் சீனா இவ்வாறு வேலைகளை செய்வது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று இந்தியா குறிப்பிட்டிருந்தது. இந்தியாவின் இக்கருத்துக்கு வடக்கு அரசியல் கட்சிகளும் ஆதரவளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Filed Under: செய்திகள்

பாக்கிஸ்தான் பிரதமரின் இலங்கை நாடாளுமன்ற உரை இரத்து – இந்தியாவுடனான உறவில் பாதிப்பு ஏற்படுமாம்…

17/02/2021 Leave a Comment


பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை நாடாளுமன்ற உரை இரத்துச்செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் பாக்கிஸ்தான் பிரதமரை உரையாற்றுவதற்கு அனுமதிப்பது இந்தியாவுடனான உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என இலங்கை அரசாங்கத்தின் சிலர் கருதியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை நாடாளுமன்ற உரையில் பாக்கிஸ்தான் பிரதமர் காஸ்மீர் விவகாரத்தை எழுப்பக்கூடும் என இந்தியா கருதலாம் என இலங்கை அரசாங்கத்தின் ஒரு தரப்பினர் கருதியுள்ளனர்.

Filed Under: செய்திகள்

காலத்தை வென்றவர்கள் : புரூனோ நினைவு நாள்….

17/02/2021 Leave a Comment

ஜியார்டனோ புரூனோ ஒருஇத்தாலிய தத்துவ அறிஞர், அறிவியலாளர், கவிஞர். தெற்கு இத்தாலியில் நோலா எனும் நகரில் 1548 ஆம் ஆண்டில் பிறந்தார். அவரது இயற்பெயர் ஃபிலிப்போ. பின்னர் நேபிள்ஸ் நகரம் சென்றபோது, தமது 17 ஆவதுவயதில் அவர் வைத்துக் கொண்ட பெயரே ஜியார்டனோ.

அவரது சுதந்திர சிந்தனைகளால் பலரும் அவரை கிளர்ச்சிக்காரராகவே பார்த்தனர். பல நாடுகள், நகரங்கள் என அவரது கல்வியும் பயணமும் தொடர்ந்தது. மதரீதியான சிந்தனையிலிருந்து விஞ்ஞான ரீதியான சிந்தனைகளில் முழு மூச்சாக இறங்கினார். 

‘‘இந்த உலகம் உருண்டையானது; பூமி சுற்றுவதால்தான் இரவு பகல் ஏற்படுகிறது; சூரியன்தான் சூரிய மண்டலத்தின் மையம்; சூரியனை மையமாக வைத்தே பூமி சுழன்று கொண்டிருக்கிறது; விண்வெளியில் இரவில் தெரியும் விண்மீன் களைப் போன்றே சூரியனும்ஒரு விண்மீன். எல்லா விண் மீன்களுக்கும் பூமி போல கோள்கள் உண்டு. இந்த பிரபஞ்சம் எல்லையற்றது’’ என்றபலவகையான வானவியல் கருத்துக்களை உலகத்தின் கண்முன்னே முதன் முதலில்பகிர்ந்த விஞ்ஞானி ஜியார் டனோ புரூனோ.

அதற்காக அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு 1600 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 இல் ரோம்நகர் கிறிஸ்தவ மதச்சபை அவரை உயிருடன்எரித்துக் கொன்றது. அவரின் அர்ப்பணிப்பு என்பது அறிவியல் உலகில் மகத்தானது. இறையியல் கொள்கைக்கும் இயற்கை தத்துவவாதிகளுக்கும் துளிர்விட்ட சுதந்திரதாகத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலால்வெடித்த தீமூட்டல் இது என நவீன அறிவியல்முன்னோடிகளால் கணிக்கப்படுகிறது.

நன்றி : தீக்கதிர் 

Filed Under: கட்டுரைகள்

எங்களை பட்டதாரி நியமனங்களுக்குள் உள்வாங்கு

17/02/2021 Leave a Comment

யாழ்ப்பாண சித்த மருத்துவ பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டப் பேரணி

யாழ்ப்பாணத்தில் சித்த மருத்துவ பட்டதாரிகளினால் நேற்றைய தினம் (16) ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள மாணவர்களை பட்டதாரி நியமனங்களுக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த ஆர்பாட்டம் பேரணி இடம்பெற்றது.

ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்ட சித்த மருத்துவ பட்டதாரி மாணவர்கள், தங்களுடைய கோரிக்கைகளை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பார்ட்டப் பேரணி சித்தமருத்துவ பீடத்திலிருந்து சித்த மருத்துவ வைத்தியசாலை வரை இடம்பெற்றிருந்தது

Filed Under: செய்திகள்

உலகளவில் கொவிட் – 19 மரணங்கள் 10 சதவீதத்தால் வீழ்ச்சி!

17/02/2021 Leave a Comment

கடந்த வாரத்தினுள் உலகம் முழுவதிலும் பதிவாகும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 10 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதுடன், புதிதாக பதிவாகும் தொற்றாளர்கள் எண்ணிக்கை 16 சதவீதத்தினால் குறைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதானி டெட்ரோஸ் எட்னம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையி்ல், ஆபிரிக்கா மற்றும் மேற்கு பசுபிக் பிராந்தியத்தில் தொற்றாளர்கள் பதிவாவது 20 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது என்றார்.

அவ்வாறே, தென்கிழக்காசிய வலயத்தில் தொற்றாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை 13 சதவீதத்தினாலும் அமெரிக்க வலயத்தில் தொற்றாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை 16 சதவீதத்தினாலும் குறைவடைந்துள்ளது.

கடந்த வாரத்தினுள் ஐரோப்பிய வலயத்தினுள் தொற்றாளர்கள் பதிவாகும் தொகை 16 சதவீதத்தினாலும் குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதானி, கிழக்கு மத்திய தரைகடல் பிராந்தியத்தினால் தொற்றாளர்கள் பதிவாகும் தொகை 7 சதவீத அதிகரிப்பை காட்டுவதாகும் தெரிவித்தார்

Filed Under: கொவிட்-19 செய்திகள், செய்திகள்

சாய்ந்தமருதில் ஜனாஸா எரிக்கத் தடை – கல்முனை மேல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

17/02/2021 Leave a Comment

கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படும் சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.ஆதம்பாவின் ஜனாஸாவை 18ஆம் திகதி வரை தகனம் செய்யாமல் வைத்திருக்க வேண்டும் என்று கல்முனை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆதம்பாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறி, வைத்தியசாலை நிர்வாகம் ஜனாஸாவை குடும்பத்தாரிடம் வழங்க மறுப்புத் தெரிவித்திருந்தது. அவ்வாறிருக்க வாய்ப்பில்லை, மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி குடும்பத்தார் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்தே மேற்கண்டவாறு கல்முனை மேல் நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Filed Under: செய்திகள்

வீதி விபத்துக்களால் உயிரிழப்பவர்கள் நாளுக்கு இத்தனை பேரா?

17/02/2021 Leave a Comment

வீதிவிபத்துக்களால் நாளொன்றுக்கு 10 – 11 பேர் வரை உயிரிழப்பதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

வீதி விபத்துக்களில் மேலும் நாளொன்றுக்கு 40 பேர் வரை காயமடைகின்றனர். வீதி விபத்துக்களினால் ஏற்படும் இழப்புகளைத் தவிர்த்துக்கொள்ள பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Filed Under: செய்திகள்

சீனாவின் காலனித்துவ ஆட்சிக்குள் இலங்கை – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

17/02/2021 Leave a Comment

வெளியுறவுக் கொள்கை குறித்து தெளிவில்லாத ஆட்சியாளர்கள் இலங்கையை சீனாவின் காலனித்துவ நாடாக மாற்றிவிட்டனர் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

விஜயகுமாரதுங்கவின் 33 ஆவது நினைவு தினத்தின் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுககையில்…

“தற்போது நாட்டிற்கு இளம் தலைமுறை அவசியமாகிறது. கற்ற, ஒழுக்கமுள்ள, அரசியலை வியாபாரமாக மாற்றாத, மக்களையும் நாட்டையும் நேசிக்கும், தமது முயற்சியில் நாட்டை கட்டியெழுப்பும் புதிய அரசியல் தலைமுறைக்கு நாட்டை கொடுக்கவேண்டிய காலகட்டம் வந்துள்ளது. ஆனால் இன்று நாடு மிக மோசமான நிலையில் உள்ளது.” என்றார்.

Filed Under: செய்திகள்

  • « Previous Page
  • 1
  • …
  • 583
  • 584
  • 585
  • 586
  • 587
  • …
  • 590
  • Next Page »

Recent Posts

  • சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியைச் சந்தித்தனர்
  • நாட்டை விட்டுத் தப்பிய சிரந்திக்கு என்ன நடந்தது?
  • பெர்லின் சிவப்பாகிறது!
  • புகையிரதப் பயணிகள் புகையிரதத் திணைக்களத்திற்குச் செலுத்திய நன்றிக்கடன்… வேலைநிறுத்த நாளில் இலவசமாகப் பயணித்தவர்கள் இன்று இரண்டு பயணச்சீட்டுகளைப் பெறுகின்றனர்…
  • விமல் வீரவன்சவை உடனடியாகக் கைது செய்யுமாறு உத்தரவு

Recent Comments

  • Harani on பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு…
  • Aagash on செவ்வந்தியை கைது செய்த ரொஹான் ஒலுகலவிற்கு தொலைபேசியில் ஜனாதிபதி பாராட்டு…
  • P.GNANAPRAGASOM on குட்டித் தேர்தலை இப்போதே நடத்த வேண்டாம் – பயத்தில் பதறிய ரஞ்சித் மத்தும பண்டார
  • Thamil Selvan on பாடசாலை மாணவர்களுக்கு அஸ்வெசும திட்டத்தின் கீழ் 6000 ரூபா – அரசாங்கம் அறிவிப்பு
  • SARINIGAR on அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

English செய்தித்தாள்கள்

  • Sri Lanka Mirror
  • Daily Mirror
  • Lanka News Web
  • Lanka Business Online

பிற வலைத்தளங்கள்

  • Unions Lnaka
  • Left Library
  • Left Magazine
  • SYU Sri Lanka

தமிழ் செய்தித்தாள்

  • Virakesari
  • Thinakkural
  • Tamil Mirror
  • New Uthayan
  • Vidivelli
  • Ada Derana – Tamil

வீடியோ

  • வீடியோ
  • A5News Youtube Channel
  • JVP Newsroom

© Copyright 2002 - 2021 Lanka Truth - Most Reliable Latest News from Sri Lanka. All Rights Reserved.