வெளிநாட்டிலிருந்து நேற்று (05) இரவு நாட்டிற்கு வருகை தந்த, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் அக்டோபர் 13ஆம் திகதி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகுமாறு பொலிஸார் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்றுக்கு அமைவாகவே அவரை இவ்வாறு ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த செப்டம்பர் 24ஆம் திகதி குறித்த விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அதில் பங்கேற்காது மருத்துவ சிகிச்சை பெறவென கடந்த செப்டம்பர் 16ஆம் திகதி ஷிரந்தி ராஜபக்ஷ சிங்கப்பூர் சென்றிருந்தார்.
எவ்வாறாயினும், தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி ஷிரந்தி ராஜபக்ஷவினால் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (05) எதிர்பார்ப்பு பிணை மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.















