பத்தேகம துப்பாக்கிச் சூடு: உதவிய சந்தேகநபர் கைது!

Army-Arrested-2021.07.04 (1)

காலி – பத்தேகம பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஆண் ஒருவரும் இரு பெண்களும் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த செப்டெம்பர் 27ஆம் திகதி இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், நேற்று (04) அம்பலாங்கொடை பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 48 மணிநேர தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்துவதற்கு பொலிஸார் அனுமதி பெற்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்