Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka

Unbiased, Unstoppable

  • முகப்பு
  • செய்திகள்
  • கொவிட்-19
  • உலகம்
  • ஆடுகளம்
  • கட்டுரைகள்
  • සිංහල
  • English

இராணுவத்தை பலப்படுத்துகிறது சீனா – இராணுவத்துக்கான பட்ஜெட்டை 6.8 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

07/03/2021 Leave a Comment

சீனா தனது இராணுவத்துக்கான பட்ஜெட்டை 6.8 சதவீதமாக உயர்த்தியுள்ளது. அதாவது நடப்பாண்டில்  இராணுவத்துக்கான நிதி 250 பில்லியன் டொலர்.


உலகிலேயே இராணுவத்துக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. 20 லட்சம் வீரர்களை கொண்ட பாரிய இராணுவ கட்டமைப்பாக சீனா காணப்படுகின்றது. கடந்த சில ஆண்டுகளாக சீனா தனது இராணுவத்தில் பல முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றது.அதாவது வெளிநாடுகளுக்கு இடையே செல்வாக்கை அதிகரிக்கும் வகையில் கடற்படை மற்றும் விமானப் படையை விரிவாக்கம் செய்துள்ளது. குறிப்பாக கடற்படையின் போர்க்கப்பல் மற்றும் புதிய வகை நீர்மூழ்கி கப்பல்கள் எனபன இணைக்கப்பட்டுள்ளன

Filed Under: உலகம்

2025 இற்கு கோட்டா இல்லையாம்

06/03/2021 Leave a Comment

2025 ஆம் ஆண்டில் நடாத்தப்படுகின்ற சனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என சனாதிபதி கோட்டாயப ராஜபக்ஸ கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அரசாங்கத்துடன் தொடர்புடைய 10 சிறிய கட்சிகளுடன் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்போது சனாதிபதி இது பற்றிக் குறிப்பிட்டார்.

நாளுக்கு நாள் வேகமாக மக்களின் வெறுப்பிற்கு இலக்காகி வருகின்ற அரசாங்கத்தை மீண்டும் வெற்றிப்பாதையில் ஆற்றுப்படுத்துவதற்காக இந்த பேச்சுவார்த்தையின்போது அரசாங்கத்தின்; சிறிய கட்சிகளின் பிரதிநிதிகள் மூலமாக சனாதிபதிக்கு உபாயமுறைத் திட்டமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கட்சிக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை கோட்டாபய ராஜபக்ஸ பொறுப்பேற்கவேண்டுமெனவும் தொடர்ச்சியாக சிறிய கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தொடர்புகளை பேணிவந்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு 2025 சனாதிபதி தேர்தலை இலக்காகக்கொண்டு பிரச்சார பொறியமைப்பில் இப்போதிருந்தே பிரவேசிக்க வேண்டுமெனவும் அவர்கள் முன்மொழிந்துள்ளனர். அதன்போது சனாhதிபதியவர்களை சமூகத்தில் உயர்த்திவைக்கின்ற பொறுப்பினை 10 சிறிய கட்சிகளும் ஈடேற்றுவதாக அவர்கள் உறுதிமொழி பகன்றுள்ளார்கள்.

எனினும் அதற்கான தீர்;வாக சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அடுத்த சனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என கூறியுள்ளார். அடுத்த சனாதிபதி தேர்தலில் சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வேட்பாளரொருவரையே முன்வைக்க வேண்டுமெனவும் அந்த வேட்பாளருக்கு அவசியமான சிங்கள வாக்குகளை தாம் சேகரித்துக் கொடுப்பதாகவும் சனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரருடன் தொலைபேசி உரையாடலொன்றை நடாத்திய சனாதிபதி தான் மீண்டும் சனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லையெனக் கூறியுள்ளார்.

Filed Under: செய்திகள்

ஆபத்தான இடமாக பதுளை மருத்துவமனை! தடுப்பூசி போட்டவர்கள் உட்பட 31 பேருக்கு கொரோனா

05/03/2021 Leave a Comment

பதுளை மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப்பிரிவில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து புற்றுநோய் சிகிச்சைப்பிரிவை தற்காலிகமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு மருத்துவர், மருத்துவமனை ஊழியர், 29 நோயாளிகள் என 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மார்ச் 2 ஆம் அங்கு பணியாற்றிய ஒரு செவிலியருக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதை அடுத்து, மற்றொரு செவிலியர் மற்றும் இரண்டு பணியாளர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக பி.சி.ஆர் தகவல்கள் நேற்று உறுதிப்படுத்தின.

இதையடுத்து குறித்த வைத்தியசாலையில் மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மேலும் பதுளை மருத்துவமனையின் அதிகாரிகள் புற்றுநோய் சிகிச்சை பிரிவை தற்காலிகமாக மூட முடிவு செய்துள்ளனர்.
இதேவேளை வைரஸால் பாதிக்கப்பட்ட அனைத்து மருத்துவமனை ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Filed Under: கொவிட்-19 செய்திகள், செய்திகள்

சுகாதாரத் தொண்டர்களின் போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கிறது…

05/03/2021 Leave a Comment

வடக்கு மாகாணச் சுகாதாரத் தொண்டர்கள் அம்மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாகத் தொடர்ந்து 04.03.2021 வியாழக்கிழமை நான்காவது நாளாகவும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2019 ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநர் எடுத்த முயற்சியின் பயனாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தொண்டர்களாகப் பணியாற்றிய சுகாதாரப் பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் முகமாக அவர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளது எனத் தெரிவித்துப் பாதிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், நிரந்தர நியமனக்கடிதம் பெற்ற சுகாதாரப் பணியாளர்கள் 454 பேர் இடைநிறுத்தப்பட்ட நிரந்தர நியமனத்தை மீளப்பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்து இக்கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

Filed Under: செய்திகள்

இலங்கைத் தேசமானது உண்மையான சுதந்திரத்தையும், தேசிய இனங்களுக்கான சுயநிர்ணய உரிமையையும் எவ்வாறு பெற முடியும்? – மார்க்சிச லெனினிசக் கட்சி காட்டும் பாதை.

05/03/2021 Leave a Comment

இலங்கையின் விடுதலையையும் தேசிய இனங்களுக்கான சுயநிர்ணய உரிமையையும் பெறுவதற்கான மார்க்கம் எதுவென்பதை மார்க்சிச லெனினிசக் கட்சி செய்திக் குறிப்பொன்றின் மூலம் தெளிவுப்படுத்தியுள்ளது. அக்கட்சி இலங்கையின் உண்மையான சுதந்திரத்தையும், தேசிய சிறுபாண்மை இனங்களுக்கான சுயநிர்ணய உரிமையையும் பெறுவது எவ்வாறு எனத் தெரிவித்த செய்திக் குறிப்பில் குறிப்பிட்ட விடயங்கள் அரசியல் தெளிவுடன் இயைந்த மிகவும் வரவேற்கக்கூடியவையாக உள்ளன.

அவ்விடயங்கள் கீழ்வருமாறு அமைந்துள்ளன.

‘சுபீட்சத்தின் நோக்கு’ என்பது வெறும் பெயர்ப்பலகையாகவே விளங்குவதாலேயே இன்று அந்நிய வல்லரசுகளின் ஆடுகளமாக இலங்கை மாற்றமடைந்துள்ளது.

மக்கள் நீண்டகாலமாக முன்வைக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை, தொல்லியல் மற்றும் வன வளம் என்றும் பெயர்களில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்புக்களை நிறுத்துதல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் நிலங்களை விடுவித்தல் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி ஆகிய நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வை வழங்க வேண்டும். இதேவேளை ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் மத்தியில் தீர்வுக்கான பொதுக் கோரிக்கைகளை முன்வைக்காது நாடாளுமன்ற, மாகாண சபை, பிரதேச சபை ஆகியவற்றின் ஆசனங்களுக்கான வாக்குவங்கி அரசியலையே தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் அரசியல் தரப்புகள் முன்வைத்து வருகின்றன. பெரும் அழிவுகளையும் துன்பங்களையும் அனுபவித்து, இன்றும் முழுமையாக மீண்டுவரமுடியாது தவிக்கின்ற தமிழ் மக்களை ஐ.நா தீர்வு தரும், ஐரோப்பிய ஒன்றியம் தலையிடும், அமெரிக்கா அதற்கு உதவும், இந்தியாவே எமக்கு இரங்கவேண்டும் எனத் தொடர்ச்சியாகப் பிழையான வழிகாட்டல்கள் மூலம் தமது இருப்பைப் பாதுகாத்துவரும் எமது தமிழ்த் தலைவர்கள் தமது எசமானர்களை நோக்கி நீங்களே வந்து வடக்கு, கிழக்கில் நிலைகொள்ளுங்கள் என்று கேட்கும் துரோகத்தன அரசியலுக்குச் செல்லத் தயாராகவிருப்பது விசனத்திற்குரியதாகும். இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட எந்த வல்லரசும் இலங்கையில் கால் ஊன்றவும், வளங்களைச் சுரண்டவும், ஆதிக்கம் செலுத்தவும் வேண்டாமென்னும் குரல் தெற்கிலும், வடக்கிலும், மேற்கிலும், கிழக்கிலும், மலையகத்திலும் ஓங்கி ஒலிக்கும்போதே இலங்கைக்குரிய விடுதலையும், சுதந்திரமும், தேசிய இனங்களுக்கான சுயநிர்ணய உரிமையும் கிடைக்க முடியும்.

மார்க்சிச லெனினிசக் கட்சியின் மேற்கண்டவாறான கருத்துக்களை நாட்டு மக்கள் அனைவரும் ஏற்றுகொள்ள முன்வர வேண்டும். 

Filed Under: செய்திகள்

இரணைதீவிற்குள் கொழும்பு ஊடகவியலாளர்கள் நுழைய கடற்படை தடை!

05/03/2021 Leave a Comment

மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ மற்றும் கொழும்பின் ஆங்கில ஊடக ஊடகவியலாளர்களை இரணைதீவிற்குள் நுழைய கடற்படையினர் தடை விதித்துள்ளனர்.

கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை கிளிநொச்சி – இரணைதீவில் புதைக்க அரசாங்கம் முயன்று வரும் நிலையில், அது தொடர்பில் ஆராய இன்று (5) காலை குறித்த குழுவினர் இரணைமாதா நகரை சென்றடைந்தனர்.
எனினும் அங்கிருந்து இரணைதீவிற்கு நுழைய கடற்படையினர் அனுமதி மறுத்து, அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் முறையிட்ட போது, ‘அது பற்றி தனக்கு தெரியாது என்றும் ஆராய்வேன் என்றும்’ தெரிவித்துள்ளார். மாவட்ட செயலாளர், ‘தான் கூட்டம் ஒன்றில் இருப்பதாகவும், இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிட்டதாகவும்’ தெரிவித்தார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அப்பகுதி மக்களை மட்டுமே அங்கு செல்ல அனுமதிப்போம் என கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நன்றி : உதயன் 

Filed Under: செய்திகள்

வரட்சியான வானிலை மார்ச் 6ஆம் திகதியிலிருந்து மாற்றமடையும்

05/03/2021 Leave a Comment

 நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலை மார்ச் 6ஆம் திகதியிலிருந்து மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும்,

“கிழக்கு கரையோரப் பிரதேசங்களில் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.” என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Filed Under: செய்திகள்

21 மாவட்டங்களில் கொவிட் தோற்றாளர்கள் – நேற்று பதிவாகியது

05/03/2021 Leave a Comment

கொவிட் – 19 தொற்றுக்குள்ளானவர்கள் நேற்றைய தினம் (04) 21 மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொவிட் – 19 தொற்றுக்குள்ளான 384 பேரில், பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளனர்.

இரத்தினபுரியில் 64 பேரும், கண்டியில் 35 பேரும், கம்பஹாவில் 21 பேரும், பதுளையில் 19 பேரும், அனுராதபுரத்தில் 18 பேரும், நுவரெலியாவில் 13 பேரும், அம்பாறையில் 13 பேரும் நேற்றைய தினம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி மற்றும்  மட்டக்களப்பில் 12 பேர் வீதமும், மாத்தறை மற்றும் யாழ்ப்பாணத்தில் 11 பேர் வீதமும், கேகாலையில் 10 பேரும் பதிவாகியுள்ளனர்.

ஹம்பந்தோட்டையிலிருந்து 06 பேரும், குருநாகல், மன்னார், மொனராகலை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இருந்து தலா 05 பேரும் மற்றும் மாத்தளையிலிருந்து 04 பேரும், களுத்துறையிலிருந்து 03 பேரும் மற்றும் பொலன்னறுவையை சேர்ந்த ஒருவரும் நேற்றைய தினம் நாட்டில் பதிவான தொற்றாளர்களில் உள்ளடங்குகின்றனர்.

மேலும் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 33 பேரும் நேற்றைய தினம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Filed Under: கொவிட்-19 செய்திகள், செய்திகள்

05/03/2021 Leave a Comment

https://lankatruth.com/ta/?p=562

Filed Under: Uncategorized

ஒரே நாளில் 38 பேர் சுட்டுக்கொலை – துப்பாக்கியை நீட்டுகிறது மியன்மார் இராணுவம்

05/03/2021 Leave a Comment

மியன்மார் இராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடிவரும் போராட்டக்காரர்கள் மீது மியன்மார் இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டுப் பிரயோகத்தில் ஒரே நாளில் 38 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை (03) இச்சம்பவம் நடந்துள்ளதுடன், இதுகுறித்த அதிர்ச்சிகரமான காணொளிகளும் வெளிவந்துள்ளன.

இராணுவத்தினர் இறப்பர் குண்டுகளுடன் சேர்த்து உண்மையான குண்டுகளையும் பயன்படுத்தினர் என்று இச்சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் கூறுகின்றனர். 

Filed Under: உலகம்

  • « Previous Page
  • 1
  • …
  • 588
  • 589
  • 590
  • 591
  • 592
  • …
  • 608
  • Next Page »

Recent Posts

  • பிள்ளையான் உள்ளிட்ட இருவரும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்!
  • யோஷித, கரநாபொடைக்கு எதிரான ஊழல் வழக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு!
  • சிராந்தி ராஜபக்ச எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்!
  • நாமல் ராஜபக்ச மீண்டும் விளக்கமறியலில்!
  • ‘கஜ்ஜாவின்’ மகன் வெளிநாட்டுத் தயாரிப்பு துப்பாக்கியுடன் கைது!

Recent Comments

  • Harani on பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு…
  • Aagash on செவ்வந்தியை கைது செய்த ரொஹான் ஒலுகலவிற்கு தொலைபேசியில் ஜனாதிபதி பாராட்டு…
  • P.GNANAPRAGASOM on குட்டித் தேர்தலை இப்போதே நடத்த வேண்டாம் – பயத்தில் பதறிய ரஞ்சித் மத்தும பண்டார
  • Thamil Selvan on பாடசாலை மாணவர்களுக்கு அஸ்வெசும திட்டத்தின் கீழ் 6000 ரூபா – அரசாங்கம் அறிவிப்பு
  • SARINIGAR on அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

English செய்தித்தாள்கள்

  • Sri Lanka Mirror
  • Daily Mirror
  • Lanka News Web
  • Lanka Business Online

பிற வலைத்தளங்கள்

  • Unions Lnaka
  • Left Library
  • Left Magazine
  • SYU Sri Lanka

தமிழ் செய்தித்தாள்

  • Virakesari
  • Thinakkural
  • Tamil Mirror
  • New Uthayan
  • Vidivelli
  • Ada Derana – Tamil

வீடியோ

  • வீடியோ
  • A5News Youtube Channel
  • JVP Newsroom

© Copyright 2002 - 2021 Lanka Truth - Most Reliable Latest News from Sri Lanka. All Rights Reserved.