வடக்கு மாகாணச் சுகாதாரத் தொண்டர்கள் அம்மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாகத் தொடர்ந்து 04.03.2021 வியாழக்கிழமை நான்காவது நாளாகவும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2019 ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநர் எடுத்த முயற்சியின் பயனாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தொண்டர்களாகப் பணியாற்றிய சுகாதாரப் பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் முகமாக அவர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளது எனத் தெரிவித்துப் பாதிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், நிரந்தர நியமனக்கடிதம் பெற்ற சுகாதாரப் பணியாளர்கள் 454 பேர் இடைநிறுத்தப்பட்ட நிரந்தர நியமனத்தை மீளப்பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்து இக்கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.










