Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka

Unbiased, Unstoppable

  • முகப்பு
  • செய்திகள்
  • கொவிட்-19
  • உலகம்
  • ஆடுகளம்
  • கட்டுரைகள்
  • සිංහල
  • English

எங்களை பட்டதாரி நியமனங்களுக்குள் உள்வாங்கு

17/02/2021 Leave a Comment

யாழ்ப்பாண சித்த மருத்துவ பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டப் பேரணி

யாழ்ப்பாணத்தில் சித்த மருத்துவ பட்டதாரிகளினால் நேற்றைய தினம் (16) ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள மாணவர்களை பட்டதாரி நியமனங்களுக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த ஆர்பாட்டம் பேரணி இடம்பெற்றது.

ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்ட சித்த மருத்துவ பட்டதாரி மாணவர்கள், தங்களுடைய கோரிக்கைகளை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பார்ட்டப் பேரணி சித்தமருத்துவ பீடத்திலிருந்து சித்த மருத்துவ வைத்தியசாலை வரை இடம்பெற்றிருந்தது

Filed Under: செய்திகள்

உலகளவில் கொவிட் – 19 மரணங்கள் 10 சதவீதத்தால் வீழ்ச்சி!

17/02/2021 Leave a Comment

கடந்த வாரத்தினுள் உலகம் முழுவதிலும் பதிவாகும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 10 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதுடன், புதிதாக பதிவாகும் தொற்றாளர்கள் எண்ணிக்கை 16 சதவீதத்தினால் குறைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதானி டெட்ரோஸ் எட்னம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையி்ல், ஆபிரிக்கா மற்றும் மேற்கு பசுபிக் பிராந்தியத்தில் தொற்றாளர்கள் பதிவாவது 20 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது என்றார்.

அவ்வாறே, தென்கிழக்காசிய வலயத்தில் தொற்றாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை 13 சதவீதத்தினாலும் அமெரிக்க வலயத்தில் தொற்றாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை 16 சதவீதத்தினாலும் குறைவடைந்துள்ளது.

கடந்த வாரத்தினுள் ஐரோப்பிய வலயத்தினுள் தொற்றாளர்கள் பதிவாகும் தொகை 16 சதவீதத்தினாலும் குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதானி, கிழக்கு மத்திய தரைகடல் பிராந்தியத்தினால் தொற்றாளர்கள் பதிவாகும் தொகை 7 சதவீத அதிகரிப்பை காட்டுவதாகும் தெரிவித்தார்

Filed Under: கொவிட்-19 செய்திகள், செய்திகள்

சாய்ந்தமருதில் ஜனாஸா எரிக்கத் தடை – கல்முனை மேல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

17/02/2021 Leave a Comment

கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படும் சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.ஆதம்பாவின் ஜனாஸாவை 18ஆம் திகதி வரை தகனம் செய்யாமல் வைத்திருக்க வேண்டும் என்று கல்முனை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆதம்பாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறி, வைத்தியசாலை நிர்வாகம் ஜனாஸாவை குடும்பத்தாரிடம் வழங்க மறுப்புத் தெரிவித்திருந்தது. அவ்வாறிருக்க வாய்ப்பில்லை, மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி குடும்பத்தார் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்தே மேற்கண்டவாறு கல்முனை மேல் நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Filed Under: செய்திகள்

வீதி விபத்துக்களால் உயிரிழப்பவர்கள் நாளுக்கு இத்தனை பேரா?

17/02/2021 Leave a Comment

வீதிவிபத்துக்களால் நாளொன்றுக்கு 10 – 11 பேர் வரை உயிரிழப்பதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

வீதி விபத்துக்களில் மேலும் நாளொன்றுக்கு 40 பேர் வரை காயமடைகின்றனர். வீதி விபத்துக்களினால் ஏற்படும் இழப்புகளைத் தவிர்த்துக்கொள்ள பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Filed Under: செய்திகள்

சீனாவின் காலனித்துவ ஆட்சிக்குள் இலங்கை – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

17/02/2021 Leave a Comment

வெளியுறவுக் கொள்கை குறித்து தெளிவில்லாத ஆட்சியாளர்கள் இலங்கையை சீனாவின் காலனித்துவ நாடாக மாற்றிவிட்டனர் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

விஜயகுமாரதுங்கவின் 33 ஆவது நினைவு தினத்தின் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுககையில்…

“தற்போது நாட்டிற்கு இளம் தலைமுறை அவசியமாகிறது. கற்ற, ஒழுக்கமுள்ள, அரசியலை வியாபாரமாக மாற்றாத, மக்களையும் நாட்டையும் நேசிக்கும், தமது முயற்சியில் நாட்டை கட்டியெழுப்பும் புதிய அரசியல் தலைமுறைக்கு நாட்டை கொடுக்கவேண்டிய காலகட்டம் வந்துள்ளது. ஆனால் இன்று நாடு மிக மோசமான நிலையில் உள்ளது.” என்றார்.

Filed Under: செய்திகள்

17/02/2021 Leave a Comment

https://lankatruth.com/ta/?p=157

Filed Under: Uncategorized

கூட்டு உடன்படிக்கை நிறைவுக்கு வந்த பின்னரே 1000 ரூபா – உதய கம்மன்பில

16/02/2021 Leave a Comment

தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும், தொழில் சங்கங்களுக்கும் இடையில் 2019 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கூட்டு உடன்படிக்கை நிறைவுக்கு வந்த பின்னரே, தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள நிர்ணய சபையின் ஊடாக அதிகரிக்கப்பட்ட நாளாந்த 1000 ரூபா சம்பள அதிகரிப்பு எப்போது நடைமுறைக்கு வரும்? என்று ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

2019 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட இந்த கூட்டு உடன்படிக்கை இம்மாதம் நடுப்பகுதியில் நிறைவடைகின்றது. இதனை தொடர்ந்து தொழில் அமைச்சரினால் சம்பளம் தொடர்பிலான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று  இணைப் பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில மேலும் கூறினார்.

Filed Under: செய்திகள்

திரிபடைந்த பிரித்தானிய புது கொரோனா வைரஸ் கொழும்பிற்குள் நுழைந்தது…

16/02/2021 Leave a Comment

வேகமாகப் பரவக்கூடிய திரிப்படைந்த பிரித்தானிய கொரோனா வைரஸ் தொற்றுடைய நபர் கொழும்பு ஹெவலொக் சிட்டியில் அடையாளங்காணப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவருடன் தொடர்பில் இருந்த முதலாம் நபர் மற்றும் இரண்டாம் நபர் குறித்து தெரிய வந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் குறித்த வைரஸானது பியகம, அவிசாவளை மற்றும் வவுனியாவில் அடையாளம் காணப்பட்டிருந்தது. குறித்த வைரஸானது மிக வேகமாக சில வாரங்களுக்குள் முழு நாட்டிற்கும் பரவக்கூடிய அபாயம் இருப்பதாக சுகாதார பிரிவு அச்சுறுத்தல் விடுத்துள்ளது.

Filed Under: கொவிட்-19 செய்திகள், செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை நேற்று அமைச்சரவைக்கு வரவில்லை

16/02/2021 Leave a Comment

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை நேற்று (15) அமைச்சரவை கூடியபோது சமர்ப்பிக்கப்படவில்லை.

பெப்ரவரி 01 ஆம் திகதி குறித்த அறிக்கை ஆணைக்குழுவின் அங்கத்தவராகிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது. அந்நேரம் அரசாங்கம் இதுபற்றிய முடிவினை எடுப்பதற்காக அமைச்சரவை கூட்டப்படும் என்றது.

அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டப் பின்னர் மூன்று தடவைகள் அமைச்சரவை கூட்டடங்கள் கூட்டப்பட்டன. அதிலொன்றிலும் இந்த அறிக்கை குறித்து பேசப்படவில்லை.

நேற்று அமைச்சரவை கூட்டத்தின்போது ஜனாதிபதி அவர்கள் “ஆணைக்குழுவின் அறிக்கை நிறைய பக்கங்களைக் கொண்டுள்ளதால் அதனைப் பிரதி எடுப்பதற்கு இன்னும் கால அவகாசம் எடுக்கும்” எனக் கூறியிருந்தார். 

எதிர்வரும் ஏப்ரல் மாதத்துடன் ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகின்றன.

Filed Under: செய்திகள்

புதிய வைரஸிடம் இருந்து தப்பித்துக்கொள்ள இரண்டு முகக்கவசங்கள் அணிய வேண்டுமாம்…

16/02/2021 Leave a Comment

வேகமாக மக்களிடம் பரவக்கூடிய கொரோனா வைரஸான பிரித்தானிய திரிபிடம் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக இரண்டு முகக்கவசங்களை அணியுமாறு சுகாதாரப்பிரிவு பரிந்துரைத்துள்ளதாக ‘டெய்லி மிரர்’ செய்தித்தாள் கூறுகிறது.


கொரோனா பிரித்தானிய திரிபிடம் இருந்து தப்பிப்பதற்கு உலக நாடுகளில் Surgical Mask அணிந்து, அதற்கு மேலாக துணியாலான முகக்கவசத்தை அணிவதாகவும், அதனை இலங்கை மக்களும் கடைபிடிக்குமாறும் சுகாதார பிரிவு கூறியுள்ளது.

Filed Under: கொவிட்-19 செய்திகள், செய்திகள்

  • « Previous Page
  • 1
  • …
  • 586
  • 587
  • 588
  • 589
  • 590
  • …
  • 592
  • Next Page »

Recent Posts

  • மின் கட்டண நிவாரணத்திற்காக மேலும் 17,213 மில்லியன் ரூபா – மேலதிக மதிப்பீட்டிற்கு நாடாளுமன்றம் அனுமதி!
  • இலங்கையின் பொருளாதாரம் குறித்து சர்வதேச நாணய நிதியம் மிக முக்கியமான கருத்து!
  • நாமல் ராஜபக்ஷவுக்கு இன்றைக்கும் பிணை இல்லை!
  • வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் டொலரைத் தாண்டியது!
  • சுகீஸ்வர பண்டார மீண்டும் விளக்கமறியலில்!

Recent Comments

  • Harani on பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு…
  • Aagash on செவ்வந்தியை கைது செய்த ரொஹான் ஒலுகலவிற்கு தொலைபேசியில் ஜனாதிபதி பாராட்டு…
  • P.GNANAPRAGASOM on குட்டித் தேர்தலை இப்போதே நடத்த வேண்டாம் – பயத்தில் பதறிய ரஞ்சித் மத்தும பண்டார
  • Thamil Selvan on பாடசாலை மாணவர்களுக்கு அஸ்வெசும திட்டத்தின் கீழ் 6000 ரூபா – அரசாங்கம் அறிவிப்பு
  • SARINIGAR on அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

English செய்தித்தாள்கள்

  • Sri Lanka Mirror
  • Daily Mirror
  • Lanka News Web
  • Lanka Business Online

பிற வலைத்தளங்கள்

  • Unions Lnaka
  • Left Library
  • Left Magazine
  • SYU Sri Lanka

தமிழ் செய்தித்தாள்

  • Virakesari
  • Thinakkural
  • Tamil Mirror
  • New Uthayan
  • Vidivelli
  • Ada Derana – Tamil

வீடியோ

  • வீடியோ
  • A5News Youtube Channel
  • JVP Newsroom

© Copyright 2002 - 2021 Lanka Truth - Most Reliable Latest News from Sri Lanka. All Rights Reserved.