ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய அனைத்து கட்சிகளும் புதிய தாராளமய பொருளாதாரக் கட்டமைப்பில் பயணிப்பதாக கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டொக்டர்.ஜீ.வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (18) ‘லங்காதீப’ சிங்கள பத்திரிகைக்கு வழங்கியிருந்த நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்,
தொடர்ந்து இப்பாதையில் நாம் பயணிக்க வேண்டுமா என சிந்திக்க வேண்டும். ஒரு நோய்க்கு பரிந்துரைக்கும் மருந்துகள் சில நேரம் தவறாகலாம். தொடர்ந்து அந்த மருந்தையே அளவுக்கு அதிகமாக உட்கொள்வது நல்லதல்ல. புதிய தாராளமயமும் அவ்வாறுதான்.


