P2P க்கு கிடைத்த ஆதரவு என்பது தமிழ் சமூகத்தில் நீண்டகாலத்தின் பின்னர் ஏற்பட்ட எழுச்சி – இரா.சாணக்கியன்

P2P 01 - 17.02.2021

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்திற்கு கிடைத்த ஆதரவு என்பது தமிழ் சமூகத்தில் நீடகாலத்தின் பின்னர் ஏற்பட்ட எழுச்சி ஆகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். 

 தற்போது ஒரு தேர்தல் நடந்தால் வடக்கு கிழக்கல் அரசோடு இருக்கின்ற எவரும் தெரிவு செய்யப்படக் கூடிய நிலைமை இருக்காது என்றே நினைக்கின்றேன் எனவும் குறிப்பிட்டார்.   

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்…

“இந்தப் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டமானது உலகம் பூராகவும் பார்க்க வேண்டும். எமது மக்களின் பிரச்சினைகள் உற்றுநோக்கப்பட வேண்டும் என்பதற்காகவே செய்திருந்தோம்.

இந்தப் போராட்டமானது தமிழ் மக்களினதும், தமிழ்பேசும் மக்களினதும் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதற்கான போராட்டமாகவே நடத்தியிருந்தோம். இதனை எவரும் திசைதிருப்பக்கூடாது.” என்றார்.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்