யுத்தத்துக்கு மத்தியில் ஷிரந்தி நடத்திய நிதி மோசடி அம்பலம்!

image_2026-10-14_085950395

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற சிறிது காலத்திலேயே, ஷிரந்தி ராஜபக்ச பல்வேறு அமைப்புகளை உருவாக்கி நிதி திரட்டத் தொடங்கியிருந்தமை நீதிமன்றத்தில் அம்பலமாகியுள்ளது.

அரசுக்குச் சொந்தமான தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து முறையற்ற வகையில் ‘சிரிலிய’ கணக்குக்கு நிதி திரட்டியமை தொடர்பாக, கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பல முக்கிய தகவல்கள் வெளியாகின.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், அரசுத் தரப்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இந்தத் தகவல்களை நீதிமன்றத்தில் முன்வைத்தார்.

2006ஆம் ஆண்டு ‘ஷிரந்தி நவோதய’ என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் அது ‘சிரிலிய சவிய’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ‘கார்ல்டன் சுவ உதானய’ என்ற மற்றுமொரு அமைப்பும் உருவாக்கப்பட்டிருந்தது. அதன் உத்தியோகபூர்வ முகவரியாக ஜனாதிபதி செயலகத்தின் முகவரியும், அரச இலச்சினை பொறிக்கப்பட்ட கடிதத் தலைப்புகளும் பயன்படுத்தப்பட்டு நிதி திரட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சி.டி. ஸ்கேன் இயந்திரமொன்றை அன்பளிப்பாக வழங்குவதற்காக நிதி திரட்டுவதாகக் குறிப்பிட்டு, தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், லொத்தர் சபை மற்றும் செலான் வங்கி ஆகியவற்றுக்குக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

பின்னர், ‘கார்ல்டன் சுவ உதானய’ அமைப்பின் வங்கிக் கணக்கு செயலற்ற நிலையில் இருப்பதாகக் கூறி, அந்த நிதியை ‘சிரிலிய’ கணக்கில் வைப்பிலிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து 10 மில்லியன் ரூபா (ஒரு கோடி ரூபா) ‘சிரிலிய’ கணக்கில் வைப்பிலிடப்பட்டமை தொடர்பிலேயே இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்