ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினரும், பிரதி செயலாளராகவும், ஐக்கிய தொழிலாளர் சங்கத்தின் தலைவராக செயல்பட்டவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான அசோக் அபேசிங்க, சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் வகித்த அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகியுள்ளார்.
அவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு செயலாளராகவும் செயற்பட்டார்.
முன்னாள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் தொகுதியின் பிரதான அமைப்பாளராகவும் நீண்ட காலமாக செயற்பட்டு வந்தார்.
இதற்கு முன்னர் யாப்பஹுவ தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அமைப்பாளராக செயற்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயரத்ன ஹேரத்தும் கட்சியிலிருந்து விலகியிருந்தார்.
3










