காவன்திஸ்ஸ யானைக்குத் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஆறு பேரில் ஒருவரான, எஹட்டுவெவ பிரதேச செயலகத்தின் திறன் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஆர்.எம்.எஸ்.டி. ரத்நாயக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டுக் கட்சி) யின் பலமிக்க செயற்பாட்டாளர் என்பது தெரியவந்துள்ளது.
அவர் கல்கமுவ கூட்டுறவுச் சங்கத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும், எஹட்டுவெவ ஹுனுகல்லேவ பகுதியில் மொட்டுக் கட்சியின் அமைப்பாளராகவும் செயற்பட்டு வருகிறார்.
யானையைக் கொன்ற சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து 12 போர் ரகத் துப்பாக்கி ஒன்றும், அதற்குப் பயன்படுத்தப்படும் 24 தோட்டாக்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர் ‘டயானா’ என்ற பெண் யானையைச் சுட்டுக் கொன்றதும் இந்தத் திறன் மேம்பாட்டு உத்தியோகத்தர்தான் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.










