ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து எந்தவிதமான கருத்துகளையும் தான் வெளியிடப்போவதில்லையென மைத்திரிப்பால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினசரி ஆங்கில செய்தித்தாள் ஒன்றிலேயே இவ்வாறு செய்தி வெளியாகியுள்ளது.
அச்செய்தியில் , “எவருக்கும் விரும்பியதைக் கூற இயலும். ஆனால், முன்னாள் ஜனாதிபதிமீது ஈஸ்டர் தாக்குத்தல் ஆணைக்குழு அறிக்கை சுமத்தியுள்ள குற்றசாட்டு தொடர்பில் இந்நேரம் எந்த பதிலையும் வழங்கமுடியாது.” எனக்கூறியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2019 ஏப்ரல் 21 மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு பின்னால் இருக்கும் இரகசியம் என்ன என்பதுபற்றி அறிவதற்காக அந்நேரம் ஜனாதிபதியாக மைத்திரிப்பால சிறிசேனவினால் இதுகுறித்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
கடந்த தினத்தில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, மைத்திரிப்பால சிறிசேன தாக்குதலை தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லையென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


