மாகாண சபை தேர்தலை இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் நடாத்துவதற்கு எதிர்ப்பார்க்கப்பட்டுள்ள நிலையில், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் நாளை (02) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இடம்பெறவுள்ளது.
மாகாணசபை தேர்தலானது விகிதாசார முறைமையின் அடிப்படையில் நடாத்தப்பட வேண்டுமாயின் அதற்கான திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும், அவ்வாறு இல்லையெனில் கலப்பு முறைமையில் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
1










