தேர்தலுக்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்முடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கை மீறப்பட்டுள்ளதுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மீது நீதிமன்ற வழக்கு சுமத்தி மேலும் கட்சியின் செயற்பாட்டை மழுங்கடிப்பு செய்யும் முயற்சிகளை மேற்கொள்வதாக அக்கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாஸ தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தங்களது கட்சியை இரண்டாகப் பிளவுபடுத்தி புதிய கட்சி தொடங்கினார் என்றும் தேர்தலுக்கு முன் வழங்கிய வாக்குறுதிகளை மீறி, கட்சியை மீண்டும் சரிவுக்கு இட்டுச் செல்லவும் வழிவகுக்கிறார் எனவும், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், தேசிய பட்டியல், இதர பதவிகள் விடயத்தில், வாக்குறுதிகளில் நிறைவேற்றாமல் தான்தோன்றித் தனமாக செயற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
1










