“பொருட்களின் விலையை ஏற்றாதே, மக்களின் வயிற்றில் அடிக்காதே”, பொருட்களின் விலை விண்ணை நோக்கி பிள்ளைகள் பட்டினினையை நோக்கி”, “உலக சந்தையில் குறைவு சலுகையை மக்களுக்கு வழங்கு”, வாழ்க்கை செலவைக் குறை, மக்களுக்கு நிவாரணம் வழங்கு”, அரசே எரிபொருள், விவசாய கிருமிநாசினிகளின் விலைகளை குறை, நிவாரணம் கொடு” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியவாறு நேற்று (28) சம்மாந்துறையில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியிலேயே இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான விலையேற்றத்தை கண்டித்து, மக்கள் விடுதலை முன்னணியின் சம்மாந்துறைத் தொகுதியின் பிரதான அமைப்பாளர் ஏ.எஸ்.எம்.புஹாரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்கள் விடுதலை முன்னணியின் திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ, மாவட்ட அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.










