2013 ஆம் அண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதிக்குள் இந்நாட்டின் 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் தகவல்கள் வெளியாகின.
அதற்கிணங்க 2013 தொடக்கம் 2017 வரையான காலப்பகுதிக்குள் 93 பாடசாலைகள் மூடப்பட்டுள்தொடு 2018 ஆம் அண்டில் மாத்திரம் மூடப்பட்ட பாடசாலைகளின் எண்ணிக்கை 101 ஆகும். மாணவர்கள் இல்லாமை, நாட்டில் நிலவிய சூழ்நிலை மற்றும் பிறகாரணங்களின்பேரில் இவ்விதமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் கூறுகின்றன.
மாணவர் எணணிக்கை 200 இற்கு குறைவான 5,161 பாடசாலைகள் இந்நாட்டில் காணப்படுவதோடு அந்த பெரும்பாலான பாடசாலைகளின் தரம் பற்றிய பல சிக்கல்கள் தோன்றியுள்ளதெனவும் இந்த நிலைமை பற்றி விசாரித்தறிவதற்கான ஆய்வொன்றுமேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் இதற்கு சம்பந்தப்பட்ட வளப்கிர்வாளர்களை சுயேட்சை அடிப்படையில் பங்கேற்கச் செய்விக்குமாறும் குழு கல்விச் செயலாளர் பேராசியர் கபில பெரெராவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
அதே வேளையில் கடந்த அரசாங்க காலத்தில் அமுலாக்கிய ‘ அருகில் உள்ள பாடசாலை மிகச்சிறந்த பாடசாலை’ கருத்திட்டத்திற்காக 64,930 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்ததோடு (2016 – 2020 காலப்பகுதிக்காக) 2018 ஆம் ஆண்டு திசெம்பர் 31 ஆந் திகதியளவில்அந்த பணத்தொகையில் 31,234,77 ரூபா செலவிடப்பட்டிருந்ததெனவும் மேற்படி கருத்திட்டத்தின்கீழ் ஒருசில சந்தர்ப்பங்களில்அவசியப்பாடுகள் உரியவகையில் இனங்காணப்படாமல் பாடசலைகளுக்கு வளங்கள் வழங்கப்பட்டிருந்ததெனவும் குழுவில் வெளியாகியது.
இதற்கு மேலதிகமாக புதிய பாடசாலையொன்றை நிறுவுவதற்காக குறைந்தபட்சம் 02 ஏக்கர் காணி அவசியமாகியபோதிலும் இந்த இடவசதியற்ற 200 இற்கு குறைவான மாணவர்கள் உள்ள ஏறக்குறைய 25 பாடசாலைகள் நிக்கவெரட்டிய கல்வி வலயத்தில் மாத்திரம் காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின.


