இலங்கை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய 2 முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், சிம்பாப்வே அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவருமான முன்னாள் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் மூவர் பஸ் சாரதிகளாக கடமையாற்றி வருகின்றனர்.
அவுஸ்திரேலியாவின் மெல்பன் நகரில் இந்த மூன்று வீரர்களும் பஸ் சாரதிகளாக கடமையாற்றி வருவதாக 9 நியூஸ் தொலைக்காட்சி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய சுராஜ் ரந்தீவ், சிந்தன ஜயசிங்க மற்றும் சிம்பாப்வே தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய வெடின்டன் மிவயேன்கா ஆகிய மூன்று வீரர்களே இவ்வாறு பஸ் சாரதிகளாக கடமையாற்றி வருகின்றனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சிந்தன ஜயசிங்க, 5, இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், அவர் இறுதியாக 2009ம் ஆண்டே தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.
சுராஜ் ரந்தீவ் 12 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும், 31 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும், 7 இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.
சுராஜ் ரந்தீவ், 2016ம் ஆண்டே இலங்கை தேசிய கிரிக்கெட் அணியை இறுதியாக பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.
சிம்பாப்வே தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய வெடின்டன் மிவயேன்கா, ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும், மூன்று ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் கலந்துக்கொண்டுள்ளார்.
வெடின்டன் மிவயேன்கா, 2004ம் ஆண்டே இறுதியாக தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.









