யாழ்ப்பான மாநகரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் பேருந்துகள் தரித்து செல்ல வேண்டும் – யாழ். மாநகர சபை அறிவிப்பு

Jaffna _bus stand 01 - 02.03.2021

 யாழ்ப்பான மாநகரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் பேருந்துகள் தரித்து செல்ல வேண்டுமென யாழ். மாநகர சபையினால் அறிவித்தல் வழங்கப்பட்டது.

தனியார் பேருந்து சேவைகள் அதனை கருத்தில் கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பிடத்தில் தமது சேவையை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அரச பேருந்து சேவையினர் தமது மாகாண பணிப்பாளர் அல்லது பொறுப்பதிகாரியின் கட்டளைக்கு அமையவே தம்மால் செயல்பட முடியும் என தெரிவித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதன்போது யாழ்ப்பாண மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் மாநகர ஆணையாளர் ஜெயசீலன் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருக்கு இடையிலும் அரசு பேருந்து சேவை சாரதிகள் ஊழியர்களுக்கு இடையிலும் பேருந்து நிலையத்தில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

குறித்த பகுதிக்கு வருகை தந்த யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் போலீசார் உள்ளிட்டோர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும் அரச பேருந்து சேவைகளில் ஈடுபடுகிறவர்கள் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பிடத்தில் தமது சேவையினை மேற்கொள்ள முடியாது எனவும் அங்கே எரிபொருள் நிரப்பு நிலையம் போன்ற வசதிகள் இல்லை எனவும் தெரிவித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதன் காரணமாக அரசு பேருந்து சேவைகள் சில நிமிடங்கள் ஸ்தம்பிதம் அடைந்தன.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்