பாரதத்தின் தமிழ்நாடு பாரினுக்கு அளித்த சிவப்பு மனிதன் அவர்களை நினைவு கூர்வோம்!

T.Pandian 02.03.2021

ஆசிரியர், வழக்கறிஞர் ஆகிய இரு தொழில் நிலைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட திரு. தா.பாண்டியன் அவர்கள் இந்திய கம்யூனிச இயக்கத்தின் தமிழ்நாடு மாநில கிளைச் செயலாளராகக் கடமையாற்றியதோடு இரு தடவைகள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.


அண்மையில் சிறுநீரகக் கோளாறு காரணமாக சென்னை, ராஜீவ் காந்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தோழர் பாண்டியன் அவர்கள் சிகிச்சை பயனளிக்காத நிலையில் கலமான செய்தியறிந்து நாமெல்லாம் கலங்கிக் கண்ணீர் வடித்தோம்.
இறந்திருக்கும்போது அவருக்கு வயது 84. அவருடைய அரசியலை ஏற்றுக்கொள்ளாத தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களே புடம்போட்ட தங்கமாக வாழ்ந்த பொதுவுடமைத் தோழர் தா.பாண்டியன் என இரங்கல் தெரிவிக்கும் அளவுக்கு வாழ்ந்து மறைந்த பெருந்தகையாளர் தோழர் பாண்டியன் ஆவார்.
அன்னாரின் இம்மறைவின்போது, இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் அவரால் விட்டுச் செல்லப்பட்டுள்ள இரு மலையான கருத்துக்கள் சிந்திக்க வேண்டியவையாக விளங்குகின்றன. 

இலங்கை யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற இரு தரப்பினரும் தமது பொது எதிரிகளான ஏகாதிபத்திய முதலாளித்துவ சக்திகளை இணங்கண்டு அச்சக்திகளுக்கு எதிராகப் போராடுவதே இலங்கை இனப்பிரச்சினைக்கு சாவுமணி அடிக்குமெனவும், சிங்கள மக்களுக்குள் இருக்கும் இடதுசாரிகள் உழைப்பாளர், அரசு என்னும் வாய்ப்பாட்டை இடைநிறுத்தி அம்மக்களுக்குள் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக உடனடியாகப் போராட்டத்தில் ஈடுபடவேண்டுமென்பதுவுமே இன்னாரின் சிந்தனையைத் தட்டியெழுப்பக்கூடியவையான இரு கருத்துக்களுமாகும். 

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்