களணிதிஸ்ஸ செயலிழந்து 18 மாதங்கள் … நட்டம் 25 பில்லியனுக்கு மேல்…

image_2021-03-01_214544

களணிதிஸ்ஸ இணைந்த சுழற்சி மின்நிலையம் செயலிழந்து தற்போது பதினெட்டு மாதங்களுக்கு மேல் கழிந்துள்ளபோதிலும்  இற்றைவரை அதனை இயல்புநிலைக்கு கொண்டுவர இயலாதுள்ளதெனவும் இன்றளவில் அரசாங்கத்திற்கு இருபத்தைந்து பில்லியன் ரூபாவுக்கு அதிகமான நட்டம் நேர்ந்துள்ளதெனவும் இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன்  ஜயலால் குறிப்பிடுகிறார். 

2019 ஓகத்து மாதத்தில் மின்நிலையப் பணிகள்  அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக நிறுத்தப்பட்டதெனவும்  அது அவ்வருடத்தின் ஒற்றோபர்   மாதத்தில் மீண்டும் இயக்கப்படத் திட்டமிடப்பட்டிருந்ததெனவும் செயலாளர் கூறினார்.  

பராமரிப்புப் பணிகளின்கீழ் பிற்பாக்கி இயந்திரத்தின்  சுழலி (Rotor) இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்படத் திட்டமிடப்பட்டிருந்ததோடு பின்னர் அதனை துபாய்க்கு அனுப்பிவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும்  அதன் பின்னர் துபாயில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுசென்று ஏற்புடைய திருத்தவேலைகளை  மேற்கொண்டு இலங்கைக்கு கொண்டுவந்து அதன் சமநிலை பற்றி   பரீட்சித்துப் பார்க்காமல்  அவசரஅவசரமாக  பொருத்த நடவடிக்கை மேற்கொண்டமையால் அது பெருமளவில் சேதமடைந்துள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார்.

அதற்கிணங்க சுழலிப் பகுதிக்கும் இரண்டு பெயாரிங் (உராய்தல் தடுப்பு) பகுதிகளுக்கும் சேதமேற்பட்டமையால் இற்றவைரை மின்நிலையத்தை இயக்க இயலாமல் போயுள்ளதெனவும் அவர் குறிப்பிடுகிறார்.  

இந்த பிறப்பாக்கி இயந்திரத்தை இந்நாட்டுக்கு கொண்டுவருவதிலிருந்து  மிகவும் அவசரஅவசரமாகவே செயலாற்றப்பட்டதெனவும்  அதன் காரணமாக மின்சார சபைக்கு மிகப்பெரிய செலவு ஏற்கப்படவேண்டிய நிலையேற்பட்டதெனவும்  திரு. ரஞ்சன் ஜயலால் சுட்டிக்காட்டினார்.

வருடமொன்றுக்கு நாட்டுக்கு 36,000 கிகாவொற் மணித்தியாலத்திற்கு அதிகமான மின்சாரம் அவசியமாகின்றதெனவும்  அதில் 1,084 கிகாவொற் மணித்தியாலங்கள் இந்த மின்நிலையம் மூலமாக உற்பத்தி செய்யப்படுகின்றதெனவும் அவர் குறிப்பிட்டார்.   

இந்த மின்நிலையம் ஊடாக மின்சால அலகொன்று ரூபா 18.00 இற்கும் 20.00 இற்கும் இடையிலான செலவில் உற்பத்திசெய்ய இயலுமெனவும்  மின்நிலையம் செயலிழந்தமையால் நாடு இழந்த மின்சாரத்தின் அளவினை தனியார்துறையினரிடமிருந்து கொள்வனவுசெய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் பொதுச்செயலாளர் குறிப்பிடுகிறார். 

அதற்காக மின்சார அலகொன்றுக்கு ரூபா 35.00 இற்கு மேலாக செலவிடப்படுகின்றதெனவும் இதனால் ஒவ்வொரு மின்சார அலகிற்காகவும் அரசாங்கம் ரூபா 15.00 மேற்பட்ட  தொகையின செவிலவேண்டி நேரிட்டுள்ளதெனவும் அவர் கூறினார். 

பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையத்தின் துணை உற்பத்தியாக கிடைக்கின்ற நெப்தாவே களணிதிஸ்ஸ இணைந்த சுழற்சி மின்நிலையத்திற்காக பாவிக்கப்பட்டதெனவும்  அற்காக ஒரு லீற்றர் நெப்தாவுக்காக மின்சார சபை  74 ரூபாவினை வழங்கியதெனவும் இலங்கை மின்சார ஓழியர் சங்கத்தின் செயலாளர் திரு. ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார். 

எனினும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்றளவில் தனியார்துறைக்கு ஒரு லீற்றர் நெப்டாவை ரூபா 30 இற்கே வழங்குகின்றதெனவும்  இதனால் நெப்தா சந்தைப்படுத்திலின்போதும்  அரசாங்கத்திற்கு பாரிய நட்டம் ஏற்படுகின்றதெனவும் அவர் குறிப்பிட்டார். 

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்