Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka

Unbiased, Unstoppable

  • முகப்பு
  • செய்திகள்
  • கொவிட்-19
  • உலகம்
  • ஆடுகளம்
  • கட்டுரைகள்
  • සිංහල
  • English

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் – மொஹமட் சகீல் ஆகியோர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

03/03/2021 Leave a Comment

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் புத்தளம் மத்ரசா பாடசாலையின் அதிபர் மொஹமட் சகீல் ஆகியோர் எதிர்வரும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கோட்டை நீதவான் நீதிமன்றில் குறித்த சந்தேகநபர்கள் இன்று முற்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்ட பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணியமை மற்றும் புத்தளம் பிரதேசத்தில் மத்ரஸா பாடசாலையொன்றினுள் தீவிரவாதம் கற்பித்தமை ஆகிய குற்றசாட்டுக்களின் கீழ் குறித்த இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிரிஏ மற்றும் ஐசிசிபிஆர் சட்டத்தின் கீழ் ஹிஸ்புல்லாவுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டியதாக மதரஸா பாடசாலை அதிபர் ஷகீலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

Filed Under: செய்திகள்

தடுப்பூசி பெற்றுக்கொண்டாலும் முகக்கவசம் அணிவது கட்டாயமே…

03/03/2021 Leave a Comment

இலங்கையில் கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டாலும் பொதுமக்கள் கண்டிப்பாக சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென்று தேசிய தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

தொற்றுநோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டாலும் சுகாதார பழக்கவழக்கங்களை மறந்துவிடுவது கடுமையான குற்றமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

Filed Under: கொவிட்-19 செய்திகள், செய்திகள்

பொத்துவில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தடை உத்தரவு!

03/03/2021 Leave a Comment

P2P மக்கள் பேரெழுச்சி இயக்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளபொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான சுழற்சி முறையிலான அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் பொலீசார் நீதிமன்ற தடை உத்தரவுகளை பெற்று வருகின்றனர்.

இன்று காலை p2p மக்கள் பேரெழுச்சி இயக்கத்தினால் அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் தொடங்கி அகிம்சை வழியிலா சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை தடுத்து நிறுத்திய பொத்துவில் பொலீசார் உண்ணாவிரதப் போராட்டத்தில் கட்டப்பட இருந்த பதகைகளை கைப்பற்றியதுடன் பதாகைகளையும், போராட்ட காரர்களை ஏற்றிச் சென்றதாக கூறி பொத்துவில் பொலீசார் வாகனம் ஒன்றைக் கைப்பற்றி பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

இதேவேளை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு இன்று காலை பொத்துவில் பொலீசார் நீதிமன்ற தடை உத்தரவை வழங்கி உள்ளனர்.

இதேநேரம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் மட்டக்களப்பில் இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில்
இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர்களின் ஒருவரான எஸ்.சிவயோகநாதன் ஆரம்பித்து வைத்தார்.

இந்த சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் சர்வமத தலைவர்கள்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள்,மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன்,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் உட்பட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது ஆலய முன்றிலில் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பமானதுடன் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்திற்கு பலக்கலைக்கழக மாணவர்கள்,சிவில்சமூக செயற்பாட்டாளர்கள் ஆதரவினை வழங்கிவருகின்றனர்.
மதத்தலைவர்களின் ஆசியுரையுடன் ஆரம்பமான இந்த போராட்டத்திற்கு அனைவரையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

வடகிழக்கில் தமிழ் மக்களுக்கு நடைபெற்ற அநீதிகளுக்கு உள்ளக ரீதியாக எந்தவித நீதியும் கிடைக்கப்போவதில்லையெனவும் சர்வதேச நீதிமன்றில் இலங்கை நிறுத்தப்பட்டு தமக்கான நீதியைப்பெற்றுக்கொடுக்க சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

இன்று தமிழ் மக்கள் வடகிழக்கில் அடக்குமுறைகளுக்கு உள்ளாகிவருவதாகவும் ஐநா மனித உரிமை பேரவையின் கூட்டம் நிறைவுபெற்றதன் பின்னர் இந்த நாட்டில் மேலும் நெருக்கடிகளை எதிர்நோக்கும் நிலையுள்ளதாகவும் அதன் காரணமாக ஐநா மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்ந்து முடிவினை எடுக்கவேண்டும் எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

Filed Under: செய்திகள்

“ராஜபக்ஸ” என்ற ஒருவரால் ஈஸ்டர் ஞாயிறு அறிக்கை மாற்றப்பட்டுள்ளது! ஞானசார தேரர் தமிழர்கள் மீது கரிசனம்; அந்தர்பல்டி அடிக்கும் தேரர்

03/03/2021 Leave a Comment

ஈஸ்டர் ஞாயிறு அறிக்கை முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது என்றும், இது ஒரு சதி என்றும் பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறுகிறார்.

“இந்த அறிக்கை ராஜபக்ஷ அரசாங்கத்தைச் சேர்ந்த ஒருவரின் சதித்திட்டத்தால் மாற்றப்பட்டதாகவும்,
அது கோட்டாபய ராஜபக்ஷ அல்லது மஹிந்த ராஜபக்ஷவை குறிப்பிடவில்லை என்றும் அவர் கூறினார்.
எனினும் ராஜபக்ஸ என்ற பெயரைக்கொண்டவரே இதற்கு காரணம். இது புதல்வர்களா அல்லது மற்றவர்களா என்பதை காலம் வரும்போது கூறுவோம்.
அவரது ஆசை 2025இல் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதே.” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Filed Under: Uncategorized

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளுக்கும் 20வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்காக சில அரசியல் கட்சிகளின் ஆதரவு பெறப்பட்டமைக்கும் தொடர்புள்ளதா? மல்கம் ரஞ்சித்

03/03/2021 Leave a Comment

ஏப்பிரல் 21 ம் திகதிக்குள் வெளிப்படையான பொறிமுறை மூலம் உயிர்த்தஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படாவிட்டால் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கறுப்புக்கொடியை ஏற்றுமாறு நாங்கள் வேண்டுகோள் விடுப்போம் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளை மேற்கொண்டிருந்த ஆணைக்குழுவின் அறிக்கையின் ஒரு தொகுதி மாத்திரமே தனக்கு கிடைத்துள்ளது என தெரிவித்துள்ள அவர் ஏனைய தொகுதிகளை பெறுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.


ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாக வைத்து சிஐடியினரும் டீஐடியினரும் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித் இது இடம்பெறாவிட்டால் கத்தோலிக்க திருச்சபையுடன் தொடர்புபட்ட சர்வதேச அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளுக்கும் 20வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்காக சில அரசியல் கட்சிகளின் ஆதரவு பெறப்பட்டமைக்கும் தொடர்புள்ளதா எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.


பொதுபல சேனாவை தடை செய்யவேண்டும் என ஆணைக்குழு விடுத்துள்ள பரிந்துரைகள் போன்றவற்றினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் திசைதிருப்பப்படலாம் என குறிப்பிட்டுள்ள மல்கம் ரஞ்சித் உண்மையான கத்தோலிக்கர் என்ற அடிப்படையில் உயிர்த்தஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும் என்பதே தனது ஒரேயொரு நோக்கம் என குறிப்பிட்டுள்ளதுடன் பௌத்த அமைப்புகளை தடை செய்யவேண்டும் என்பது போன்ற பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.


கத்தோலிக்க மக்கள் எப்போதும் பௌத்தமக்களுடன் ஐக்கியமாகவாழ்கின்றனர்,குண்டுவெடிப்பு இடம்பெற்றவேளை கத்தோலிக்க மக்களிற்கு பௌத்தர்கள் பெரும் உதவிகளை வழங்கினார்கள் இதன்காரணமாக கத்தோலிக்கர்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையில் மோதலிற்கான சூழ்நிலை உருவாக்கப்படக்கூடாது எனவும் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

முன்கூட்டியே எச்சரிக்கைகள் கிடைத்த போதிலும் தங்களுடைய சுயநலத்திற்காக குண்டுவெடிப்புகளை தடுக்க தவறியவர்கள் தற்போது அரசியல் கட்சிகள் என்ற போர்வையில் தப்ப முயல்கின்றனர் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு சேவையாற்றுவதற்காக உயர் பதவிகளை வகிப்பதாக கூறிக்கொண்டு மக்களிற்கு ஆபததுள்ளது என தெரிந்திருந்தும் நடவடிக்கைகள் எடுக்காதாவர்கள் விளைவுகளை எதிர்கொள்வார்கள் எனவும் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.


குண்டுவெடிப்பிற்கான சூழ்நிலை முன்னைய அரசாங்கத்தினாலேயே உருவாக்கப்பட்டது,என தெரிவித்துள்ள கர்தினால் முன்னைய ஜனாதிபதி பிரதமர் அதிகாரிகளே இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை விசாரணைகளிற்கு தற்போதைய ஜனாதிபதி பிரதமர் அமைச்சரவையே காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி : தினக்குரல் 

Filed Under: செய்திகள்

இரணைதீவில் உடல்களை அடக்கம் செய்வதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு…

03/03/2021 Leave a Comment

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை கிளிநொச்சி – இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

30 வருடகால கடும் யுத்தத்திற்கு பின்பு, மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் தாம் இங்கு மீண்டும் குடியேறியுள்ளதாகவும், இதுவரையில் இங்கு கொரோனா தொற்று ஏற்படவில்லையெனவும் தெரிவித்து அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு எதிராக இன்று (03) உள்ளூர் மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இரணைதீவில் இதுவரையில் 165 குடும்பங்கள் வசித்து வருவதுடன், அரசாங்கத்தின் இத்தீர்மானத்திற்கு எதிராக தாங்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்திடம் மனுவொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயத்தைச் சுட்டிக்காட்டிய  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாக எம்.ஏ. சுமந்திரன் “இது தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவுகளை முறிக்க அரசாங்கம் மேற்கொள்ளும் சதி.” என்றும் தெரிவித்துள்ளார்.  

Filed Under: செய்திகள்

கறுப்பு ஞாயிறுக்கு தேசிய மக்கள் சக்தி பூரண ஒத்துழைப்பு…

03/03/2021 Leave a Comment

ஏப்ரல் 07 ஆம் திகதி மேற்கொள்ளப்படவிருக்கும் கறுப்பு ஞாயிறு தினத்திற்கு தேசிய மக்கள் சக்தி பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.

அவர்களது அறிக்கை இதோ…

“உயிர்த்த ஞாயிறு கண்ணீருக்கு நீதி கிடைக்க வேண்டும்! கறுப்பு ஞாயிறுக்கு ஒத்துழைப்பு நல்குவோம்!

2019 ஏப்பிறல் 21 ஆந் திகதியை இலங்கைவாசிகளான எம்மால் ஒருபோதுமே மறந்துவிட இயலாது. கிறிஸ்தவ அடியார்கள் கிறிஸ்துவின் உயிர்ப்பினை கொண்டாடுகின்ற அந்த உன்னதமான தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் காரணமாக முந்நூறுக்கு கிட்டிய அப்பாவிகள் உயிரிழந்தார்கள். மேலும் ஐநூறுக்கு மேற்பட்ட குழுவினர் காயமடைந்ததோடு ஒருசிலர் சதாகால ஊனமுற்றவர்களாகினர். இந்த நிந்திக்கத்தக்க தாக்குதல் கிறிஸ்தவ பக்தர்களிடையே மாத்திரமன்றி ஒட்டுமொத்த தேசத்திலும் தோற்றுவித்த கண்ணீரின் எடை கொஞ்சநஞ்சமல்ல.

இதனை அப்போது நிலவிய அரசாங்கத்தினதும் அரச அதிகாரிகளினதும் கவனயீனம் இல்லாதிருந்தால் தடுக்கக்கூடியதாக அமைந்திருக்குமென்பது தற்போது எவருக்குமே இரகசியமன்று. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டும்பொருட்டு அப்போது நிலவிய அரசாங்கமும் அந்த தாக்குதலின் வேதனைமீது ஏறி அரியாசனம் வந்த நிகழ்கால அரசாங்கமும் அதற்காக புரிந்த ஒரே கருமமாக அமைந்தது உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழுவாகும்.

உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தற்போது வெளியாகிவிட்டது. எனினும் ஆணைக்குழுக்களையும் ஆணைக்குழு அறிக்கைகளையும் மூடிமறைப்பதனால் அதன் தவறாளிகளையும் சூத்திரதாரிகளையும் அரசியல் அதிகாரத்திற்காக தீவிரவாதத்தை பாவித்தவர்களும் ஒளிந்து மறைந்து காணாமல்போகச்செய்விக்கின்ற வரலாற்றுச் சூழமைவுக்குள் இந்த தருணத்திலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் ஈடேறமாட்டாதென்பது பொதுவான அபிப்பிராயமாக மாறியுள்ளது. அத்துடன் உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழு அறிக்கையும் மேலும் புதிர்களை உருவாக்குமேயொழிய புதிர்களைத் தீர்க்கமாட்டாதென்பதும் பல்வேறு தரப்பினர்களிடமிருந்தும் எழுகின்ற விசனமாகும்.

நீதிக்காக குரல் கொடுக்கவேண்டியது பொதுவான மானிட உரிமையாகும். மேற்படி சூழமைவில் சம்பந்தப்பட்ட தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இலங்கை கத்தோலிக்க பேரவை 2021 மார்ச்சு 07 ஆந் திகதியை கறுப்பு ஞாயிற்றுத் தினமாக்கி நீதியை வேண்டி நிற்கின்றது. தேசிய மக்கள் சக்தி என்றவகையில் அதற்கு எங்களின் பூரண ஒத்துழைப்பினை தெரிவித்துக்கொள்வதோடு மேலும் தாமதிக்காமல் இதன் பின்னால் மறைந்துள்ள சூத்திரதாரிகளையும் தவறாளிகளையும் வெளிக்கொணர்ந்து சிந்திய கண்ணீருக்கும் இரத்தத்திற்கும் நீதியை ஈடேற்றுமாறு அரசாங்கத்திற்கும் சம்பந்தப்பட்ட சட்டப் பிரிவுகளுக்கும் அழுத்தம் கொடுக்கிறோம்.”

Filed Under: செய்திகள்

பிரான்ஸ் நாட்டு முன்னாள் ஜனாதிபதி சிறையில்…

03/03/2021 Leave a Comment

ஊழல் மோசடி குற்றச்சாட்டு வழக்கில் நீதிமன்றத்தினால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் கார்கோரிக்கு 3 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு உதவிய மேலும் இருவருக்கும் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Filed Under: உலகம்

இரத்தினபுரியில் கொரோனா தொற்று அதிகரிப்பு… மொத்த எண்ணிக்கை 2,500 ஐ கடந்துள்ளது…

03/03/2021 Leave a Comment

நேற்றைய தினம் (02) இலங்கையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 318 பேரில் அநேகமானோர் இரத்தினபுரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

இவ்வாறு 72 பேர் அடையாளங்காணப்பட்டதுடன், இரத்தினபுரி மாவட்டத்தில் இதுவரையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,526 ஆக உயர்வடைந்துள்ளது. 

Filed Under: கொவிட்-19 செய்திகள், செய்திகள்

2013 – 2018 காலப்பகுதியில் 194 பாடசாலைகள் மூடப்பட்டுவிட்டன.

03/03/2021 Leave a Comment

2013 ஆம் அண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதிக்குள் இந்நாட்டின் 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் தகவல்கள் வெளியாகின.

அதற்கிணங்க 2013 தொடக்கம் 2017 வரையான காலப்பகுதிக்குள் 93 பாடசாலைகள் மூடப்பட்டுள்தொடு 2018 ஆம் அண்டில் மாத்திரம் மூடப்பட்ட பாடசாலைகளின் எண்ணிக்கை 101 ஆகும். மாணவர்கள் இல்லாமை, நாட்டில் நிலவிய சூழ்நிலை மற்றும் பிறகாரணங்களின்பேரில் இவ்விதமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் கூறுகின்றன.
மாணவர் எணணிக்கை 200 இற்கு குறைவான 5,161 பாடசாலைகள் இந்நாட்டில் காணப்படுவதோடு அந்த பெரும்பாலான பாடசாலைகளின் தரம் பற்றிய பல சிக்கல்கள் தோன்றியுள்ளதெனவும் இந்த நிலைமை பற்றி விசாரித்தறிவதற்கான ஆய்வொன்றுமேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் இதற்கு சம்பந்தப்பட்ட வளப்கிர்வாளர்களை சுயேட்சை அடிப்படையில் பங்கேற்கச் செய்விக்குமாறும் குழு கல்விச் செயலாளர் பேராசியர் கபில பெரெராவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

அதே வேளையில் கடந்த அரசாங்க காலத்தில் அமுலாக்கிய ‘ அருகில் உள்ள பாடசாலை மிகச்சிறந்த பாடசாலை’ கருத்திட்டத்திற்காக 64,930 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்ததோடு (2016 – 2020 காலப்பகுதிக்காக) 2018 ஆம் ஆண்டு திசெம்பர் 31 ஆந் திகதியளவில்அந்த பணத்தொகையில் 31,234,77 ரூபா செலவிடப்பட்டிருந்ததெனவும் மேற்படி கருத்திட்டத்தின்கீழ் ஒருசில சந்தர்ப்பங்களில்அவசியப்பாடுகள் உரியவகையில் இனங்காணப்படாமல் பாடசலைகளுக்கு வளங்கள் வழங்கப்பட்டிருந்ததெனவும் குழுவில் வெளியாகியது.
இதற்கு மேலதிகமாக புதிய பாடசாலையொன்றை நிறுவுவதற்காக குறைந்தபட்சம் 02 ஏக்கர் காணி அவசியமாகியபோதிலும் இந்த இடவசதியற்ற 200 இற்கு குறைவான மாணவர்கள் உள்ள ஏறக்குறைய 25 பாடசாலைகள் நிக்கவெரட்டிய கல்வி வலயத்தில் மாத்திரம் காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின.

Filed Under: செய்திகள்

  • « Previous Page
  • 1
  • …
  • 587
  • 588
  • 589
  • 590
  • 591
  • …
  • 603
  • Next Page »

Recent Posts

  • வழக்கு முடியும் வரை ரோஹித போகொல்லாகம விளக்கமறியலில்!
  • ஷிரந்தி ராஜபக்ஷ விளக்கமறியலில்!
  • ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
  • முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவும் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!
  • சுகீஸ்வர பண்டார மீண்டும் விளக்கமறியலில்!

Recent Comments

  • Harani on பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு…
  • Aagash on செவ்வந்தியை கைது செய்த ரொஹான் ஒலுகலவிற்கு தொலைபேசியில் ஜனாதிபதி பாராட்டு…
  • P.GNANAPRAGASOM on குட்டித் தேர்தலை இப்போதே நடத்த வேண்டாம் – பயத்தில் பதறிய ரஞ்சித் மத்தும பண்டார
  • Thamil Selvan on பாடசாலை மாணவர்களுக்கு அஸ்வெசும திட்டத்தின் கீழ் 6000 ரூபா – அரசாங்கம் அறிவிப்பு
  • SARINIGAR on அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

English செய்தித்தாள்கள்

  • Sri Lanka Mirror
  • Daily Mirror
  • Lanka News Web
  • Lanka Business Online

பிற வலைத்தளங்கள்

  • Unions Lnaka
  • Left Library
  • Left Magazine
  • SYU Sri Lanka

தமிழ் செய்தித்தாள்

  • Virakesari
  • Thinakkural
  • Tamil Mirror
  • New Uthayan
  • Vidivelli
  • Ada Derana – Tamil

வீடியோ

  • வீடியோ
  • A5News Youtube Channel
  • JVP Newsroom

© Copyright 2002 - 2021 Lanka Truth - Most Reliable Latest News from Sri Lanka. All Rights Reserved.