கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை கிளிநொச்சி – இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
30 வருடகால கடும் யுத்தத்திற்கு பின்பு, மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் தாம் இங்கு மீண்டும் குடியேறியுள்ளதாகவும், இதுவரையில் இங்கு கொரோனா தொற்று ஏற்படவில்லையெனவும் தெரிவித்து அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு எதிராக இன்று (03) உள்ளூர் மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இரணைதீவில் இதுவரையில் 165 குடும்பங்கள் வசித்து வருவதுடன், அரசாங்கத்தின் இத்தீர்மானத்திற்கு எதிராக தாங்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்திடம் மனுவொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயத்தைச் சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாக எம்.ஏ. சுமந்திரன் “இது தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவுகளை முறிக்க அரசாங்கம் மேற்கொள்ளும் சதி.” என்றும் தெரிவித்துள்ளார்.










