Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka

Unbiased, Unstoppable

  • முகப்பு
  • செய்திகள்
  • கொவிட்-19
  • உலகம்
  • ஆடுகளம்
  • கட்டுரைகள்
  • සිංහල
  • English

ஏப்ரல் போராட்டத்திற்கு 50 வருடம்…

05/04/2021 Leave a Comment

1971 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏப்ரல் போராட்டத்தின் 50ஆவது நினைவு தினம் இன்று (05) அனுஷ்டிக்கப்படுகின்றது.

“என்றென்றும் நினைவு கூருவோம் தோழர்களே… என்ற வாசகத்தை முன்னிறுத்தி ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் வீரர்கள் ஞாபகார்த்தம் மக்கள் விடுதலை முன்னணியினால் அனுஷ்டிக்கப்படுகிறது.

அந்தவகையில் ஹம்பந்தோட்டை கம்பாஹா, பொலனறுவை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் அந்த போராட்டத்தின் போது உயிரைத் தியாகம் செய்தவர்களை நினைவு கூறும் விதமாக பல நிகழ்வுகளை இவ்வருடத்தில் இன்று மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்துள்ளது

இதற்கமைய இன்று மாலை 3.30 மணியளவில் குறித்த மாவட்டங்களில், மக்கள் விடுதலை முன்னணியினை சார்ந்தவர்களின் ஆதரவின் கீழ் நினைவுச் சடங்குகள் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அக்கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, ஹிங்குரகொட பகுதியில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

இந்த போராட்டம் சுதந்திரத்துக்கு பிற்பட்ட காலத்தில் இடம்பெற்றபோதிலும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டமாகவே பார்க்கப்பட்டது.

மேலும் கிளர்ச்சியை மேற்கொண்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்தவர்கள் ஆகியோருக்கு எதிராக நிறுவப்பட்ட குற்றவியல் நீதி ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில், பிரிட்டிஷ் மகாராணிக்கு எதிராக சதி திட்டம் தீட்டி போர் புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

இதற்குக் காரணம் அப்போது மகா தேசாதிபதியாக இருந்தவர் மகாராணியினுடைய பிரதிநிதியாகவே காணப்பட்டமையே ஆகும்.

மேலும் குறித்த போராட்டம், இலங்கை வரலாற்றில் முக்கிய இடத்தினை வகித்துள்ளது. ஆகவேதான் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் விடுதலை முன்னணி, இந்த போராட்டத்தை நினைவு கூரும் வகையில் நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றது.

Filed Under: Uncategorized

குடிமக்கள் அதிகம் நீர் பருகவும் -வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் வேண்டுகோள்.

05/04/2021 Leave a Comment

எதிர்வரும் நாட்களிலம் நாடு முழுவதும் கடும் வெப்பமான காலநிலை நிலவுவதனால் பொது மக்கள் கட்டாயமாக அதிக நீர் அருந்த வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

வெளியிடங்களில் வேலை செய்யும் மக்கள் அதிகமாக நீர் அருந்த வேண்டும். நிழல் உள்ள பிரதேசங்களில் மாத்திரம் ஓய்வு எடுக்க வேண்டும். வீட்டில் உள்ள சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பில் அவதானம் எடுக்க வேண்டும். என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, பொலநறுவை, மட்டக்களப்பு, மொனராகலை ஆகிய பிரதேசங்களில் மக்களுக்கு உடலுக்கு உணரக்கூடிய கடுமையான வெப்பமான காலநிலை நிலவும். எனவும் கூறப்பட்டுள்ளது.

Filed Under: செய்திகள்

சீன பிரஜைகளுக்கு முன்னுரிமை…

05/04/2021 Leave a Comment

சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம்  கொரோனா தடுப்பூசி இலங்கையில் உள்ள சீன பிரஜைகளுக்கு முன்னுரிமை கொடுத்து இன்றைய தினம் (05) வழங்கப்படும்  என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இலங்கையர்களுக்குச் சீன தடுப்பூசிகள் செலுத்தும் நட வடிக்கை விசேட நிபுணர் குழுவொன்றினால் ஆராயப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளப்படும் என்று ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

சீனாவில் தயாரிக்கப்பட்ட 6 லட்சம் தடுப்பூசிகள் கடந்த 31 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தது. அத்துடன், இலங்கையில் 3 இலட்சம் சீன பிரஜைகள் வாழ்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

Filed Under: கொவிட்-19 செய்திகள், செய்திகள்

அறம் தவறிய தமிழ்நாடு பத்திரிகை ஊடகங்கள் (?)

04/04/2021 Leave a Comment

எதிர்வரும் ஏப்ரல் 06 ஆம் திகதி தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஊடகங்கள் அறம் தவறி செயற்பட்டுள்ளமையானது, இந்திய ஊடகத்துறையின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற தி.மு.க கூட்டணி ஆட்சியை கைப்பற்றும்.” என்று கருத்துக் கணிப்பு கூறுவதோடு, அச்சம் கொண்ட அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணி எதிர் பிரச்சாரத்தை மேற்கொள்ள ஊடகங்களை விலைக்கு வாங்கி விட்டது  போன்ற கருத்துக்களும் எழுந்துள்ளன. 

இதனை உறுதி செய்யும் விதமாக, தமிழ்நாட்டில் வெளிவரும் முக்கியமான பத்திரிகைகள் அனைத்திலும் ஒரே விதமாக தி.மு.க. விற்கு எதிராக பிரதானச் செய்திகள் பிரசுரிக்க பட்டிருந்தன. இதன் காரணத்தால் தமிழ்நாடு பத்திரிகை ஊடகங்கள் அறம் தவறி விட்டனவா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பத்திரிகை ஊடகங்களின் இவ்வாறான செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிகை வாசகர்கள் குறித்த பத்திரிகைகளை தீவைத்துக் கொளுத்தி உள்ளனர். 

Filed Under: உலகம்

தமிழ் மக்களுடன் நல்லெண்ணத்தை வளர்ப்பது என்பது ஜனாதிபதியின் அகராதியில் கிடையவே கிடையாது. -சுரேஷ் பிரேமச்சந்திரன்

03/04/2021 Leave a Comment

சிங்களக் குடியேற்றங்களை தமிழர் தாயகத்தில் ஊக்குவிப்பதற்கும், அவ்வாறு குடியேறியவர்களுக்கு அரசின் உதவி ஒத்தாசைகளை வழங்குவதுமே ஜனாதிபதி கோட்டாபயவின்   பயணத்தின் நோக்கமாக இருக்கின்றது. தமிழ் மக்களுடன் நல்லெண்ணத்தை வளர்ப்பது என்பது அவரது அகராதியில் கிடையவே கிடையாது. சிங்கள – தமிழ் மக்களுடன் ஓர் உறவை ஏற்படுத்தும் சிந்தனையும் அவருக்கு கிடையாது.என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணை ஊடகப் பேச்சாளரும் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வவுனியா மாடவட்டத்தின் சிங்களக் கிராமத்துக்கு இன்று வருகை தருவது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

Filed Under: செய்திகள்

யாழ் தீபகற்பத்தில் சினிமா வசந்தம்… கொழும்பில் விருது வழங்கும் விழா…

03/04/2021 Leave a Comment

6 ஆவது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவின் விருது வழங்கும் நிகழ்வு ஏப்ரல் 07 அன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.

இந்த திரைப்பட விழா யாழ்ப்பாண தீபகற்பத்தின் சினிமா வசந்தம் என்று அழைக்கப்படுகிறது.

விழாவில் விருதுகள் வழங்கும் நிகழ்வை முன்னிட்டு ஏப்ரல் 03 முதல் ஏப்ரல் 07 வரை கொழும்பில் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன சினிமா அரங்கில் ‘ட்ரவலிங் பெஸ்டிவல்’ என்ற திரைப்படத் திரையிடல் நடைபெறும் என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட 10 படங்கள் அங்கு திரையிடப்படும் என்றும் அனோமா ராஜகருணா தெரிவித்துள்ளார்.

” ட்ரவலிங் பெஸ்டிவல் என்பது ஒவ்வொரு வருடமும் கொழும்பில் இருந்து பலர்  யாழ்ப்பாணத்திற்கு வருகை தருவதாகவும். இந்த ஆண்டு கொவிட் தொற்று காரணமாக நாங்கள் யாழ்ப்பாணத்திற்கு வர சொல்லி பெரிதும்  யாரையும் ஊக்கப்படுத்தவில்லை. இவ்விழாவில் ஏறக்குறைய 60 திரைப்படங்கள் இருந்தன.

அதன்படி, சர்வதேச, உள்ளூர் மற்றும் அறிமுக திரைப்பட விழாவின் மூன்று பிரிவுகளில் போட்டியிட்டு வென்ற மூன்று படங்களும் ஏப்ரல் 7 ஆம் திகதி விருது வழங்கும் விழாவில் திரையிடப்படும்.

இருப்பினும், கொவிட் – 19 அச்சுறுத்தல் காரணமாக விருதுகள் வழங்கும் விழா சிறப்பு விருந்தினர்களுக்கு சுகாதாரத் துறை விதித்த விதிகளின்படி மட்டுமே திறக்கப்படும், மேலும் சினிமாவில் இருக்கைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். ” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Filed Under: செய்திகள்

குருந்தூர் மலையில் வரலாற்றைத் தேடுபவர்கள் சீகிரியாவை அழிய விடுகின்றனர்…

03/04/2021 Leave a Comment

வடக்கு-கிழக்கில் தமிழ்ப் பேசும் மக்களின் பிரதேசங்களில் தொல்பொருள் ஆய்வை மேற்கொள்வதாகக் கூறி காணி அபகரிப்பும், இன முரண்பாடும் தோற்றுவிக்கப்பட்டு கொண்டிருக்கின்ற சூழலில், சிகிரியாவை சுற்றியுள்ள தொல்பொருட் சின்னங்கள் அழிய விடப்பட்டுள்ள நிலை காணப்படுகிறது. 

யுனெஸ்கோவால் உலக மரபுரிமையாக அறிவிக்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க சிகிரியாவை சுற்றியுள்ள இயற்கை வளையத்திற்கே இவ்வாறு சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

இப்பகுதியில் நீச்சல் குளம் கொண்ட 108 அடுக்குமாடி குடியிருப்பை நிறுவுவதற்கு பாரிய கொங்கிரீற்று கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதனாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

வரலாற்றுக்கு முந்தைய எலும்புக்கூடுகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அகழ்வாராய்ச்சி செய்யும் ‘பொத்தன’ குகையின் பகுதியிலேயே  இப்பாரிய கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Filed Under: Uncategorized

அதிகாரத்தைப் பெறுவதற்குக் கூறிய கதைகளை இன்று மறந்துவிட்டார்கள்… அரசாங்கத்தைப் பாதுகாக்கப் பொய்யுரைக்கின்றார்கள்…

03/04/2021 Leave a Comment

நடப்பு அரசாங்கத்தின் அமைச்சர்கள் அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காகப் பொய்களை அடுக்குவதாகவும், மக்களுக்கு பொறுப்பு கூற தவறியுள்ளமை வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

எல்ட்ராக்சின் புற்றுநோய் காரணி அடங்கிய தேங்காய் எண்ணெய் கொண்டு வரப்பட்டது  முதல், இந்நாட்டு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மரக்கறி, பழங்கள், சில்லறை பொருட்கள் உட்பட அனைத்தும் விஷமேற்றப்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்தின் அமைச்சர்கள் அதனை பொறுப்பேற்காது தம் கைகளில் உள்ள பந்தினை மாறி மாறி எறிவது போன்று செயற்படுவதாகவும் குற்றம் சாட்டினார். 

Filed Under: செய்திகள்

கொரோனா தடுப்பூசி வழங்குதல் இடைநிறுத்தப்பட்டது…

02/04/2021 Leave a Comment

கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

ஆஸ்ட்ராஜென்கா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதில் காணப்படும் தாமத நிலைமை காரணமாக இவ்வாறு தற்காலிக அடிப்படையில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Filed Under: கொவிட்-19 செய்திகள், செய்திகள்

புற்றுநோய் காரணி அடங்கிய பருப்பு மாட்டுப்பட்டது…

02/04/2021 Leave a Comment

வெலிகம பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தில் காலாவதியான பருப்பில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய எல்ட்ராடொக்சீன் கண்டறியப்பட்டுள்ளது.

யோகட்டுகள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே, காலாவதியுமான பயன்படுத்தமுடியாத புற்றுநோய் காரணியடங்கிய 3150 கிலோகிராம் பருப்பு கண்டறியப்பட்டுள்ளது.    

பரிசோதனை அறிக்கையில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெலிகம தலைமை பொது சுகாதார ஆய்வாளர் எம்.எம்.எச். நிஹால் கூறியுள்ளார்.

Filed Under: செய்திகள்

  • « Previous Page
  • 1
  • …
  • 574
  • 575
  • 576
  • 577
  • 578
  • …
  • 606
  • Next Page »

Recent Posts

  • “எமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் – நாட்டிற்கு நல்வாழ்வு” நிகவெட்டிய பேரணியிலும் திரண்டது மக்கள் பெருங்கடல்!
  • சபாநாயகர் பதவியின் சலுகை நிர்வாகத்தில் மாற்றம்… ஒதுக்கீட்டிலும் பாரிய குறைவு!
  • மற்றொரு போராட்டத்திற்கு தயாராகுங்கள் – 325 பேர் கொண்ட பட்டியல் வெளியீடு!
  • நாமல் ராஜபக்ச அந்த விளையாட்டை சூப்பராக விளையாடினார்!
  • தேசிய நாமல் உய்னவின் 36வது ஆண்டு விழா; பெருந்திரளான மக்களுடன் முழங்குகிறது வணக்கத்திற்குரிய வனவாசி ராகுல தேரர் முன்னணி!

Recent Comments

  • Harani on பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு…
  • Aagash on செவ்வந்தியை கைது செய்த ரொஹான் ஒலுகலவிற்கு தொலைபேசியில் ஜனாதிபதி பாராட்டு…
  • P.GNANAPRAGASOM on குட்டித் தேர்தலை இப்போதே நடத்த வேண்டாம் – பயத்தில் பதறிய ரஞ்சித் மத்தும பண்டார
  • Thamil Selvan on பாடசாலை மாணவர்களுக்கு அஸ்வெசும திட்டத்தின் கீழ் 6000 ரூபா – அரசாங்கம் அறிவிப்பு
  • SARINIGAR on அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

English செய்தித்தாள்கள்

  • Sri Lanka Mirror
  • Daily Mirror
  • Lanka News Web
  • Lanka Business Online

பிற வலைத்தளங்கள்

  • Unions Lnaka
  • Left Library
  • Left Magazine
  • SYU Sri Lanka

தமிழ் செய்தித்தாள்

  • Virakesari
  • Thinakkural
  • Tamil Mirror
  • New Uthayan
  • Vidivelli
  • Ada Derana – Tamil

வீடியோ

  • வீடியோ
  • A5News Youtube Channel
  • JVP Newsroom

© Copyright 2002 - 2021 Lanka Truth - Most Reliable Latest News from Sri Lanka. All Rights Reserved.