6 ஆவது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவின் விருது வழங்கும் நிகழ்வு ஏப்ரல் 07 அன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.
இந்த திரைப்பட விழா யாழ்ப்பாண தீபகற்பத்தின் சினிமா வசந்தம் என்று அழைக்கப்படுகிறது.
விழாவில் விருதுகள் வழங்கும் நிகழ்வை முன்னிட்டு ஏப்ரல் 03 முதல் ஏப்ரல் 07 வரை கொழும்பில் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன சினிமா அரங்கில் ‘ட்ரவலிங் பெஸ்டிவல்’ என்ற திரைப்படத் திரையிடல் நடைபெறும் என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட 10 படங்கள் அங்கு திரையிடப்படும் என்றும் அனோமா ராஜகருணா தெரிவித்துள்ளார்.
” ட்ரவலிங் பெஸ்டிவல் என்பது ஒவ்வொரு வருடமும் கொழும்பில் இருந்து பலர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தருவதாகவும். இந்த ஆண்டு கொவிட் தொற்று காரணமாக நாங்கள் யாழ்ப்பாணத்திற்கு வர சொல்லி பெரிதும் யாரையும் ஊக்கப்படுத்தவில்லை. இவ்விழாவில் ஏறக்குறைய 60 திரைப்படங்கள் இருந்தன.
அதன்படி, சர்வதேச, உள்ளூர் மற்றும் அறிமுக திரைப்பட விழாவின் மூன்று பிரிவுகளில் போட்டியிட்டு வென்ற மூன்று படங்களும் ஏப்ரல் 7 ஆம் திகதி விருது வழங்கும் விழாவில் திரையிடப்படும்.
இருப்பினும், கொவிட் – 19 அச்சுறுத்தல் காரணமாக விருதுகள் வழங்கும் விழா சிறப்பு விருந்தினர்களுக்கு சுகாதாரத் துறை விதித்த விதிகளின்படி மட்டுமே திறக்கப்படும், மேலும் சினிமாவில் இருக்கைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். ” என்றும் அவர் குறிப்பிட்டார்.










