முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியான சிரந்தி ராஜபக்ச கொழும்பு தேசிய மருத்துவமனையின் இருதயவியல் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை மருத்துவமனையின் மருத்துவப் பரிந்துரைக்கமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலதிகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியான சிரந்தி ராஜபக்ச, தேசிய சேமிப்பு வங்கியின் ஊடாக 10 மில்லியன் ரூபா தொகையை ‘சிறிலிய சவிய’ அமைப்பின் வங்கிக் கணக்கில் வரவு வைத்து ஊழல் குற்றச்சாட்டை இழைத்தமை, அதற்குத் தூண்டுதல் மற்றும் குற்றவியல் ரீதியில் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
4










