Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka

Unbiased, Unstoppable

  • முகப்பு
  • செய்திகள்
  • கொவிட்-19
  • உலகம்
  • ஆடுகளம்
  • கட்டுரைகள்
  • සිංහල
  • English

கிளிநொச்சியில் போராட்டம்…

01/03/2021 Leave a Comment

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பமாகி, கிளிநொச்சி பழைய கச்சேரி வரை முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் பத்மநாதன் கருணாவதி தலைமையில் இடம்பெற்ற இந்தப் போராட்டமானது, பல்வேறு சிவில் அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த போராட்டத்தின்போது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கை அராங்கத்தை நிறுத்தக்கோரி கோசங்கள் எழுப்பப்பட்டிருந்ததுடன் சர்வதேச நாடுகள் அந்தப் பொறுப்பை ஏற்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

Filed Under: செய்திகள்

ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் இடம்: ஆட்சேபனை தெரிவிக்கும் சன்ரைசர்ஸ், ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள்

01/03/2021 Leave a Comment

ஐபிஎல் போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன. 8 அணிகளும் ஒவ்வொரு மைதானத்தை சொந்த மைதானமக கொண்டுள்ளது. சொந்த மைதானத்தில் ஏழு போட்டிகளிலும், வெளி மைதானத்தில் ஏழு போட்டிகளிலும் விளையாடும்.

கொரோனா காலம் என்பதால் கொல்கத்தால், சென்னை, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் ஆகிய ஐந்து இடங்களில் நடத்த முடிவு செய்துள்ளது. 

இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

‘‘நாங்கள் மூன்று அணிகள் மோசமாக பாதிக்கப்படுவோம். சொந்த மைதானத்தில் அணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. சொந்த மைதானத்தில் ஐந்து அல்லது ஆறில் வெற்றி பெற்று, வெளியில் சில போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும்.

ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு சொந்த மைதானம் கூடுதல் அனுகூலமாக இருக்கும். நாங்கள் அனைத்து போட்டிகளையும் வெளியில் சென்று விளையாட வேண்டியுள்ளது’’ என மூன்று அணிகளில் ஒரு அணியின் அதிகாரி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Filed Under: ஆடுகளம்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை குப்பைத்தொட்டிக்குள் போட்டு மறைக்க கோட்டாபாயவிற்கு உரிமையில்லை – அநுர குமார திஸாநாயக்க

01/03/2021 Leave a Comment

“2015 ஆம் ஆண்டில் அப்போது நிலவிய ராஜபக்ஷ ஆட்சி சீரழியக் காரணமாக அமைந்த இந்த தனித்துவமான விடயங்கள், அவை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றவியல் வழக்குகள், இலஞ்சம் அல்லது ஊழல் வழக்குகளை வாபஸ்பெற்றுக்கொள்ள  விதப்புரையை வழங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பற்றி மக்களுக்கு ஒன்றுமே தெரியாது. எனவே கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு  இந்த அறிக்கையை குப்பைத்தொட்டிக்குள் போட்டு மறைக்க உரிமையில்லை.” என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நேற்று (28) பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.

சனவரி 15 ஆந் திகதி சனாதிபதி கோட்டபய ராஜக்ஷவினால் அமைச்சரபை் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்படுகின்றது. ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மூலமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆட்கொலைகள் பற்றிய வழக்குகள், ஆட்கடத்தல்கள் பற்றிய வழக்குகள், நிதிசார் குற்றச்செயல்கள் பற்றிய வழக்குகள் என்பவற்றை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு சட்டத்துறை தலைமை அதிபதிக்கு அறிவிப்பதே அதன் நோக்கமாக அமைந்தது. உதயங்க வீரதுங்கவின் மிக் தாக்குதல் வானூர்திகள் வழக்கு, உதய கம்மன்பிலவின்  நிதி மோசடி வழக்கு, பசில் ராஜபக்ஷ திரு நடேசன் மல்வானை வீடு பற்றிய வழக்கு, சீ.எஸ்.என். அலை வரிசையை தொடங்க நிதி திரட்டல் பற்றிய யோஷித ராஜபக்ஷவின் வழக்கு, அமெரிக்காவில் தூதரகமொன்றை கொள்வனவு செய்தல் பற்றிய ஜாலிய விக்ரமசூரிய வழக்கு, செலாவணி ஆணைக்குழுவுக்குச் சொந்தமான பணத்தை தாருண்யயட்ட ஹெடக்  அமைப்பிற்கு வழங்குதல் பற்றிய நாலக்க கொடஹேவா வழக்கு, கப்பம் பெற்றுக்கொள்வதற்காக   11 பிள்ளைகளை கடத்திச்சென்று படுகொலை செய்தமை பற்றிய வழக்கு, ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை பற்றிய பிள்ளையான வழக்கு, பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை வழக்கு, லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்கு, போத்தல ஜயந்த, உபாலி தென்னக்கோன், கீத் நெயார்  போன்ற ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் மற்றும் ஆட்கடத்தல் பற்றிய வழக்கு,  அரச நிதி முறைகேடான பாவனை பற்றிய வழக்கு, அவன்காட் வழக்கு போன்ற பெருமளவிலான வழக்குகளை வாபஸ் பெறுதல் பற்றி சட்டத்துறை தலைமை அதிபதிக்கு அறிவிக்க   அமைச்சரவைத் தீர்மானம் மேற்கொள்ளப்படுகின்றது. அத்துடன் என்னை உள்ளிட்ட 2 பேருக்கு அரசியலமைப்பினை மீறியமை தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு  அவை பற்றி புலனாய்வு செய்வதற்காக மேலுமொரு விசேட சனாதிபதி ஆணைக்குழு  கடந்த சனவரி 29 ஆந் திகதி நிறுவப்படுகின்றது.  அந்த ஆணைக்குழுவிற்கு ஒருமாதம்  கழிந்துள்ளது.   

உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழு அறிக்கை  சனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதோடு  அதனையும் மறைத்துவைக்க முயற்சி எடுக்கப்பட்டதோடு கர்தினால் ஆண்டகையின், ஏனைய அரசியல் கட்சிகளின் மற்றும் ஊடகங்களின் அழுத்தம் காரணமாக அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டி நேரிட்டது.  அந்த அறிக்கையின் ஏறக்குறைய ஆறு தொகுதிகள்  உள்ளதோடு முதலாவது தொகுதி மாத்தரமே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 31 ஆந் திகதி சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை பற்றி இற்றைவரை எவ்விதமான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. பாரிய பிரயத்தனத்தின் பின்னரே சட்டத்துறை தலைமை அதிபதிக்கும் அதன் பிரதியொன்றைப் பெற்றுக்கொள்ள இயலுமாயிற்று. உயிர்த்த ஞாயிறு அறிக்கைக்கு அத்தகைய நிலை ஏற்பட்டுள்ளவேளையில் அரசியல் பழிவாங்கல் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை மறைத்து வைத்துக்கொண்டு அமைச்சரவைத் தீர்மானத்தை மேற்கொண்டு ஊழல்பேர்வழிகளை வழக்குகளிலிருந்து விடுதலை செய்விக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இந்த அறிக்கை என்னையும் பிரதிவாதியாக்கியுள்ள  அறிக்கையின் விதப்புரைகள் அமுலாக்கப்பட்டு வருகின்ற  இந்த நாட்டின் பெருந்தொகையான குற்றச்செயல்கள், ஆட்கடத்தல்கள், படுகொலை செய்தல்கள், கொள்ளையடித்தல்கள் பற்றிய வழக்குகளை வாபஸ் பெற்றுக்கொள்ளல்  பற்றிய விடயங்களை உள்ளடக்கிய விசேடமன அறிக்கையாகும். எனவே கடத்திச்சென்று படுகொலை செய்யப்பட்ட பிள்ளைகளின்  பெற்றோர்களுக்கு  அறிக்கையில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளதென்பதை அறிந்துகொள்வதற்கான  தார்மீக உரிமை கிடையாதா?  பொதுமக்களின் ஆதனங்களைத் திருடிய ஊழல்பேர்வழிகின் வழக்குகளை வாபஸ்பெற்றுக்கொள்ள விதப்புரை செய்யப்படுகின்ற அறிக்கை பற்றி அறிந்துகொள்ள பொதுமக்களுக்கு உரிமை கிடையாதா?   கீத் நெயார், போத்தல ஜயந்த, உபாலி தென்னக்கோன் போன்ற ஊடகவியலாளர்களைப் போன்றே ஏனைய ஊடகவியலாளர்களுக்கு அறிக்கையில் என்ன இருக்கின்றது என்பதை அறிந்துகொள்வதற்கான உரிமை கிடையாதா? எக்னெலிகொடவினை கடத்திச்சென்று காணாமல்போகச் செய்வித்தமை தொடர்பாக அந்த அறிக்கையில் உள்ள விடயங்கள் பற்றி அறிந்துகொள்ள  அவரது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும்  உரிமை கிடையாதா?

இனிமேலும் இந்த அறிக்கையை மறைத்துவைக்க கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எவ்விதமான தார்மீக உரிமையும் கிடையாது. ராஜபக்ஷவிற்கு நியாயமான உரிமை கிடையாது. அந்த அறிக்கையின் விதப்புரைகளை தமக்கு அவசியமானவகையில்  அமுலாக்கச் செய்விக்க  கோட்டாபய ராஜபக்ஷவிற்கு  உரிமை கிடையாது. சனாதிபதி  தனக்கு பரம்பரை வழியாக கிடைத்த அரச மணிமுடிக்கு உரித்தான ஒருவரல்ல என்பதையும் இந்த நாட்டுப் பிரசைகளின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த ஓர் ஆள் என்பதையும்  ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். 

எம்மீது தொடுக்கப்படுகின்ற பொய்க்  குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக நாங்கள் பயப்படத் தேவையில்லை. ஆனால் எமக்கு ஒரு நியாயமான உரிமை இருக்கின்றது இந்த குற்றச்சாட்டுகள் பற்றி அறிந்துகொள்ள.  அதைப்போலவே எங்களுக்கு இந்த அறிக்கை தொடர்பில் ஓர் ஆர்வமும் சந்தேகமும் உள்ளது. பொலீசார், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும்  நீதிமன்றம் ஆகிய  ஒழுங்கமைந்த நிறுவனம்சார் செயற்பாங்கிற்கு முகங்கொடுக்க நாங்கள் தயார். நாங்கள் குற்றஞ்செய்த, பொதுமக்களின் சொத்துக்களை கொள்ளையடித்தவர்கள் அல்ல.  நாங்கள் ஏனைய ஆட்களைப்போன்று வழக்குகளுக்குப் பயந்து சிங்கப்பூருக்கு தப்பியோடுபவர்கள் அல்ல. நோய்வாய்ப்படவும் மாட்டோம்.   உங்களுக்குத் தெரியும்  ஜனாதிபதி அதிகாரத்திற்கு வந்து தற்போது ஒன்றரை வருடங்கள் ஆகின்றது.  ஒருநாள்கூட சுகவீனமுற்றதாக நாங்கள் கேள்விப்படவில்லை. ஆனால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் வழக்குகளுக்குப் பயந்து ஒவ்வொருநாளும் நோய்வாய்ப்படுகிறார். நாங்கள் அதைப்போல நீதிமன்றத்தைத் தவிர்த்துக் கொள்பவர்கள் அல்ல.   கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணப்படி கட்டியெழுப்பிய விசித்திரமான ஆணைக்குழுக்களுக்கு கட்டுப்படப்போவதில்லை என்பதை  கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி மனதிற்கொள்ள வேண்டும். எனவே இந்த அறிக்கையை மக்கள்மயப்படுத்துமாறு நாங்கள் மீண்டும்மீண்டும் வலியுறுத்துகிறோம்.  

Filed Under: செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து மைத்திரிபால மௌனம்…

01/03/2021 Leave a Comment

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து எந்தவிதமான கருத்துகளையும் தான்  வெளியிடப்போவதில்லையென மைத்திரிப்பால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினசரி ஆங்கில செய்தித்தாள் ஒன்றிலேயே இவ்வாறு செய்தி வெளியாகியுள்ளது.

அச்செய்தியில் , “எவருக்கும் விரும்பியதைக் கூற இயலும். ஆனால், முன்னாள் ஜனாதிபதிமீது ஈஸ்டர் தாக்குத்தல் ஆணைக்குழு அறிக்கை சுமத்தியுள்ள குற்றசாட்டு தொடர்பில் இந்நேரம் எந்த பதிலையும் வழங்கமுடியாது.” எனக்கூறியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019 ஏப்ரல் 21 மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு பின்னால் இருக்கும் இரகசியம் என்ன என்பதுபற்றி அறிவதற்காக அந்நேரம் ஜனாதிபதியாக மைத்திரிப்பால சிறிசேனவினால்  இதுகுறித்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

கடந்த தினத்தில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, மைத்திரிப்பால சிறிசேன தாக்குதலை தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லையென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Filed Under: செய்திகள்

மியான்மரில் போராட்டக்காரர்கள் மீது இராணுவம் தாக்குதல்: 18 பேர் கொல்லப்பட்டனர்

01/03/2021 Leave a Comment

மியன்மாரில் நிலவிவரும் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 மியான்மரில் நேற்று (28) யாங்கூனில் பெரிய அளவிலான போராட்டத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்தினர்.

 இதில் போராட்டக்காரர்கள் இராணுவத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் இராணுவம் நடத்திய தாக்குதலில் 18 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

Filed Under: உலகம்

யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்டதற்கு ஒப்பானது மைத்திரியின் செயல் – குமார வெல்கம

01/03/2021 Leave a Comment

யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்டதற்கு ஒப்பானச் செயலே மைத்திரிப்பால சிறிசேன மேற்கொண்ட செயலாகும் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். 


“சுதந்திரக் கட்சியை அழிக்க சூழ்ச்சிகள் இடம்பெறுவதாகக் கூறுவது நகைப்புக்குரியது. அரசியல் இருப்பினைத் தக்கவைத்துக்கொள்வதற்காக இவர்கள் கட்சியின் கொள்கைக்கு முரணாக செயற்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியை அடகுவைத்து அரசியல் இலாபத்தை பெற்றுக்கொண்டதன் பயனை தற்போது அனுபவிக்கிறார்.” என்று அவர் மேலும் தெரிவித்தார். 

Filed Under: செய்திகள்

பொருட்களின் விலையை ஏற்றாதே… சம்மாந்துறையில் ம.வி.மு. ஆர்ப்பாட்டம்…

01/03/2021 Leave a Comment

“பொருட்களின் விலையை ஏற்றாதே, மக்களின் வயிற்றில் அடிக்காதே”, பொருட்களின் விலை விண்ணை நோக்கி பிள்ளைகள் பட்டினினையை நோக்கி”, “உலக சந்தையில் குறைவு சலுகையை மக்களுக்கு வழங்கு”, வாழ்க்கை செலவைக் குறை, மக்களுக்கு நிவாரணம் வழங்கு”, அரசே எரிபொருள், விவசாய கிருமிநாசினிகளின் விலைகளை குறை, நிவாரணம் கொடு”   போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியவாறு நேற்று (28) சம்மாந்துறையில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

மக்கள் விடுதலை முன்னணியின்  ஏற்பாட்டில்  சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியிலேயே இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான விலையேற்றத்தை கண்டித்து, மக்கள் விடுதலை முன்னணியின் சம்மாந்துறைத் தொகுதியின் பிரதான அமைப்பாளர் ஏ.எஸ்.எம்.புஹாரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்கள் விடுதலை முன்னணியின் திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ, மாவட்ட அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர். 

Filed Under: செய்திகள்

மொட்டு கட்சி உடன்படிக்கையை மீறிவிட்டது… கட்சித் தலைவரையும் தட்ட முயற்சி – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குற்றச்சாட்டு

01/03/2021 Leave a Comment

தேர்தலுக்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்முடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கை மீறப்பட்டுள்ளதுடன்,  ஸ்ரீலங்கா சுதந்திரக்  கட்சியின் தலைவர் மீது நீதிமன்ற வழக்கு சுமத்தி மேலும் கட்சியின் செயற்பாட்டை மழுங்கடிப்பு செய்யும் முயற்சிகளை மேற்கொள்வதாக அக்கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தங்களது கட்சியை இரண்டாகப் பிளவுபடுத்தி புதிய கட்சி தொடங்கினார் என்றும் தேர்தலுக்கு முன் வழங்கிய வாக்குறுதிகளை மீறி, கட்சியை மீண்டும் சரிவுக்கு இட்டுச் செல்லவும் வழிவகுக்கிறார் எனவும்,  அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், தேசிய பட்டியல், இதர பதவிகள் விடயத்தில், வாக்குறுதிகளில் நிறைவேற்றாமல் தான்தோன்றித் தனமாக செயற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். 

Filed Under: செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் வரப்போகிறது – ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

01/03/2021 Leave a Comment

மாகாண சபை தேர்தலை இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் நடாத்துவதற்கு எதிர்ப்பார்க்கப்பட்டுள்ள  நிலையில், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பிலான விசேட கலந்துரையாடல்  நாளை (02) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இடம்பெறவுள்ளது.

மாகாணசபை தேர்தலானது விகிதாசார  முறைமையின் அடிப்படையில்  நடாத்தப்பட வேண்டுமாயின்  அதற்கான திருத்தங்கள் நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட வேண்டும்   எனவும், அவ்வாறு  இல்லையெனில் கலப்பு முறைமையில் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Filed Under: செய்திகள்

சம்பள நிர்ணய சபை மீண்டும் கூடுகிறது – 1000 ரூபாவுக்கு தீர்வு கிடைக்குமா?

01/03/2021 Leave a Comment

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பாக சம்பள நிர்ணயசபை இன்று (01) மீண்டும் கூடி பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளது. 

தோட்ட முதலாளிமார் சம்மேளனம் 900 ரூபாவையும், அரசாங்கம் 100 ரூபாவையும் வழங்குவதன் மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கு மொத்தம் 1000 ரூபா சம்பளம் வழங்கப்படும் என்று கடந்த 08 ஆம் திகதி சம்பள நிர்ணய சபையில் தீர்மானிக்கப்பட்டது.  

அதனைத் தொடர்ந்து, இந்த தீர்மானத்திற்கு ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதில் 200க்கும் அதிகமான ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டன.

அதன் பின்னர், இந்த ஆட்சேபனைகளை விசாரணை செய்வதற்காக கடந்த 19ஆம் திகதி மீண்டும் சம்பள நிர்ணய சபை கூடியது.

எனினும் அன்றைய தினம் இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கத்தின் 8 பிரதிநிதிகள் பங்கேற்றிருந்த நிலையில், முதலாளிமார் சம்மேளனத்தின் சார்பில் ஒரு பிரதிநிதி மாத்திரமே பங்கேற்றிருந்தார்.

இதனால் கூட்டத்தை நடத்துவதற்கான குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை இல்லாமை காரணமாக குறித்த தினத்தில் கூட்டத்தை நடத்தாமல் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Filed Under: செய்திகள்

  • « Previous Page
  • 1
  • …
  • 589
  • 590
  • 591
  • 592
  • 593
  • …
  • 603
  • Next Page »

Recent Posts

  • வழக்கு முடியும் வரை ரோஹித போகொல்லாகம விளக்கமறியலில்!
  • ஷிரந்தி ராஜபக்ஷ விளக்கமறியலில்!
  • ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
  • முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவும் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!
  • சுகீஸ்வர பண்டார மீண்டும் விளக்கமறியலில்!

Recent Comments

  • Harani on பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு…
  • Aagash on செவ்வந்தியை கைது செய்த ரொஹான் ஒலுகலவிற்கு தொலைபேசியில் ஜனாதிபதி பாராட்டு…
  • P.GNANAPRAGASOM on குட்டித் தேர்தலை இப்போதே நடத்த வேண்டாம் – பயத்தில் பதறிய ரஞ்சித் மத்தும பண்டார
  • Thamil Selvan on பாடசாலை மாணவர்களுக்கு அஸ்வெசும திட்டத்தின் கீழ் 6000 ரூபா – அரசாங்கம் அறிவிப்பு
  • SARINIGAR on அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

English செய்தித்தாள்கள்

  • Sri Lanka Mirror
  • Daily Mirror
  • Lanka News Web
  • Lanka Business Online

பிற வலைத்தளங்கள்

  • Unions Lnaka
  • Left Library
  • Left Magazine
  • SYU Sri Lanka

தமிழ் செய்தித்தாள்

  • Virakesari
  • Thinakkural
  • Tamil Mirror
  • New Uthayan
  • Vidivelli
  • Ada Derana – Tamil

வீடியோ

  • வீடியோ
  • A5News Youtube Channel
  • JVP Newsroom

© Copyright 2002 - 2021 Lanka Truth - Most Reliable Latest News from Sri Lanka. All Rights Reserved.