கொழும்பு: நாட்டின் நீதித் துறையில் பல மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்காக அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் 2/3 (மூன்றில் இரண்டு) விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன், நீதிமன்ற அமைப்புச் சட்டமூலத் திருத்தத்தை நாடாளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, முன்மொழியப்பட்டுள்ள இந்த அரசியலமைப்புத் திருத்தங்களை நிறைவேற்றுவதற்குச் சர்வஜன வாக்கெடுப்பு (ஜனமத விசாரணை) தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.























