அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம், சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவுக்குக் கிடைத்துள்ளதாகப் பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, சபாநாயகர் இத்தீர்மானத்தை பெரும்பாலும் நாளை (22) பாராளுமன்றத்திற்கு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் கடந்த மாதம் 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதேவேளை, 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான பாராளுமன்ற விவாதம் எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நடத்துவதற்குப் பாராளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழு அண்மையில் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
1










