Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka

Unbiased, Unstoppable

  • முகப்பு
  • செய்திகள்
  • கொவிட்-19
  • உலகம்
  • ஆடுகளம்
  • கட்டுரைகள்
  • සිංහල
  • English

பிரதேச செயலகத்தில் மாணவர்களின் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும்

19/02/2021 Leave a Comment

இந்த முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தமக்கான தேசிய அடையாள அட்டைகளை இன்னும் பெறவில்லையென்றால், பாடசாலை அமைந்துள்ள பிரதேச செயலகத்தில் அது குறித்து விசாரிக்குமாறு ஆட்பதிவு திணைக்களம் அதிபர்களுக்கு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த காலங்களில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்த போது மாணவர்களின் தேசிய அடையாள அட்டைகளை, சம்பந்தப்பட்ட ஆவணங்களை பிரதேச செயலகங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்திருந்தார்.

அதற்கமைவாக பாடசாசை அதிபர்கள் பிரதேச செயலகத்திற்குச் சென்று மாணவர்களின் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையர் நாயகம் வியானி குணதிலக கேட்டுக்கொண்டார்.

சில மாணவர்களுக்கு, தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக ஆட்பதிவு திணைக்களம் வழங்கிய கடிதமும் க.பொ.த. சாதாரண தர தேர்வுக்கு தோற்றுவதற்கு செல்லுபடியாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Filed Under: செய்திகள்

தடையை மீறி P2P பேரணியில் பங்குபற்றியவர்கள் மீது வழக்கு!

19/02/2021 Leave a Comment

“பேரணி நடத்த நீதிமன்றத் தடை பெறப்பட்ட இடங்களில் பேரணியில் பங்கேற்றவர்கள் மீது வயது வித்தியாசம், தகுதி வேறுபாடு இன்றி நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணியில் கலந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில் பருத்தித்துறை இளைஞர் ஒருவர் நேற்று (18) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Filed Under: Uncategorized

தொற்று நோயியல் பிரிவில் இருக்கும் வளங்களை சரியாக பயன்படுத்துவதாகத் தெரியவில்லை – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு

19/02/2021 Leave a Comment

தொற்று நோயியல் பிரிவில் 09க்கும் மேற்பட்ட விசேட வைத்தியர்கள் பணி புரிகிறார்கள். இந்நிலையில் கொரோனா தொற்று தொடர்பாக இரண்டு மூன்று வைத்தியர் மாத்திரமே இணைந்து செயற்படுகிறார்கள். ஏனையவர்களிடம் சேவைகளைப் பெறுவதில்லை. இது மிகவும் வருந்த தக்க விடயமாகும். தொற்று நோயியல் பிரிவில் இருக்கும் வளங்களை சரியாக பயன்படுத்துவதாகத் தெரியவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் மேலதிகமாக ஏதாவது தேவை ஏற்படின் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுக்குமாறும், இந்நிலையில் தொற்று நோயியல் பிரிவின் தேவைகளை நிறைவேற்றுவது அரச மற்றும் சுகாதார சேவைகளின் பொறுப்பாகும் எனவும் அவர் சுட்டிக்காற்றினார்.

Filed Under: செய்திகள்

பதவி நீக்கப்பட்ட சமலுக்கு மீண்டும் பதவி… இரண்டு இராஜாங்க அமைச்சுக்கள் கொடுக்கப்பட்டன…

19/02/2021 Leave a Comment

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின்  கீழிருந்த மாவட்ட செயலாளர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகம் அனைத்தும்   கடந்த 16ஆம் திகதி   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்   சமல் ராஜபக்ஷவிடமிருந்து நீக்கப்பட்டு, காணி முகாமைத்துவ அலுவல்கள், அரச தொழில்முயற்சி காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடம் வழங்கப்பட்டிருந்தது. 

ஆனால், மீண்டும் ஏற்கனவே சமலிடம் இருந்த இராஜாங்க அமைச்சு இரண்டாக்கப்பட்டு, குறித்த இரண்டு அமைச்சுக்களுக்குமான  இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஷ நேற்றைய தினம் (18) கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார்.

Filed Under: செய்திகள்

மேற்கு முனையம் தொடர்பில் இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை – அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் கூறுகிறது

19/02/2021 Leave a Comment

மேற்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கும் தீர்மானத்தை கைவிடுமாறு ஜனாதிபதிக்கு விடுத்துள்ள கோரிக்கைக்கு இதுவரையில் சாதகமான பதில் கிடைக்கவில்லை என அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தின் பிரதான செயலாளர் நிரோஷன் கொரகாஹேன்ன தெரிவித்துள்ளார். 

கொழும்பு துறைமுகத்தின்  கிழக்கு முனையத்தைப் பாதுகாக்கின்ற போராட்டத்தில் வெற்றி பெற்றோம். துறைமுக தொழிற்சங்கங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகக் கூறிக்கொண்டு அரசாங்கம் முறையற்று செயற்படுகிறது. இந்திய நிறுவனத்துக்கு கிழக்கு முனையத்துக்கு பதிலாக மேற்கு முனையத்தை வழங்க வேண்டிய தேவை கிடையாது. மேற்கு முனையம் குறித்து தொழிற்சங்கத்துடன் நாளை (20) பேச்சு வார்த்தையை முன்னெடுக்கவொள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

Filed Under: செய்திகள்

அரசாங்கமே தன் முகத்தில் சேற்றை அள்ளிப் பூசிக்கொள்கிறது – ரவூப் ஹக்கீம்

19/02/2021 Leave a Comment

“அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படும் அரசியல் தலைவர்களை மௌனிக்க செய்வதற்கும் அவர்களது எதிர்ப்பை சமாளிப்பதற்காகவும் நீதியற்ற முறையில் செயற்பட்டு அரசாங்கமே அவர்களது முகங்களில் சேற்றைப் பூசிக்கொண்டுள்ளது.” என்று முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் இது குறித்து…

“அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவை பயன்படுத்தி அரசாங்கம் எனது குடியுரிமையை நீக்க முயற்சிக்கிறது.” என்றார்.

இதன்போது, “20 இற்கு ஆதரவாக வாக்களித்த உங்களது கட்சிக்காரர்கள் குறித்து என்ன சொல்கிறீர்கள்?” என்று ஊடகவியலாளர்கள் மத்தியில் இருந்து எழுப்பப்பட்டக் கேள்விக்கு அவர்…

“ஜனாஸா தொடர்பில் எங்களது வேண்டுகோளை நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை. 20 இற்கு வாக்களித்தவர்கள் எதிர்வரும் தேர்தலில் அனுபவிப்பார்கள்” என்று தெரிவித்தார். 

Filed Under: செய்திகள்

பெருந்தோட்டங்களில் பால் பண்ணைகள் : 4,500 கறவை பசுக்கள் இறக்குமதி செய்யப்படும்

18/02/2021 Leave a Comment

பாரிய அளவிலான பால் பண்ணைகளை உருவாக்க 03 பெருந்தோட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடப்பட்டதாகவும், அதன்படி 4500 கறவை பசுக்களை இறக்குமதி செய்வதற்கு  குறித்த நிறுவனங்கள் குறித்த நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பெருந்தோட்டங்களில் இவ்வாறான பால்பண்ணைகள் உருவாக்கப்பட்டுள்ள போதிலும், பால் மாவின் விலை முன்பிலும் அதிகமாகவே உள்ளத்துடன், வருடமொன்றுக்கு பால்மா இறக்குமதிக்கு 55 பில்லியன் ரூபா செலவழிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Filed Under: செய்திகள்

ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம் – சென்னையில் இன்று நடக்கிறது

18/02/2021 Leave a Comment

8 அணிகள் இடையிலான 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை ஏப்ரல், மே மாதங்களில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதையொட்டி ஒவ்வொரு அணி நிர்வாகமும், தக்கவைக்கப்பட்ட மற்றும் கழற்றிவிடப்பட்ட வீரர்களின் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டன. ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஆஸ்திரேலிய அதிரடி ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல்லை பஞ்சாப் அணியும், மற்றொரு ஆஸ்திரேலிய நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவன் சுமித்தை ராஜஸ்தான் அணியும், ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச், இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி ஆகியோரை பெங்களூரு அணியும் விடுவித்தன.

கேதர் ஜாதவ், ஹர்பஜன்சிங், முரளிவிஜய் உள்பட 6 பேரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேற்றியது. பரஸ்பர பரிமாற்றம் அடிப்படையில் ராஜஸ்தான் அணிக்காக ஆடிய ராபின் உத்தப்பாவை சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியது.

விடுவிக்கப்பட்ட வீரர்களில் பெரும்பாலானவர்கள் மீண்டும் ஏலத்திற்கு வருகிறார்கள். அத்துடன் நிறைய பேர் ஏலத்திற்கு புதிதாக தங்கள் பெயரை பதிவு செய்தனர். மொத்தம் 1,114 வீரர்கள் ஏலத்திற்கு விருப்பம் தெரிவித்து இருந்தனர். ஐ.பி.எல் நிர்வாகம், அணி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு 292 பேர் கொண்ட இறுதிப்பட்டியலை அறிவித்தது.

ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ள 292 வீரர்களில் 164 பேர் இந்தியர்கள் ஆவர். 65 வீரர்கள் சர்வதேச போட்டியில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்கள். வெளிநாட்டவர்களில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 35 பேர் இடம் பிடித்துள்ளனர். இங்கிலாந்து வீரர்கள் 17 பேரும் உள்ளனர்.

இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களின் ஏலம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று பிற்பகல் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடக்கும் இந்த ஏலம் நிகழ்ச்சியில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அணி நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

ஒவ்வொரு அணி நிர்வாகமும் வீரர்களை வாங்க மொத்தம் ரூ.85 கோடி செலவு செய்யலாம். இதில் ஏற்கனவே தக்க வைக்கப்பட்ட வீரர்களுக்குரிய ஊதியம் போக மீதி தொகையை கொண்டு தான் இந்த ஏலத்தில் வீரர்களை வாங்க முடியும். அந்த வகையில் அதிகபட்சமாக பெயர் மாற்றத்துடன் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் ரூ.53.2 கோடி கையிருப்பு வைத்துள்ளது. அந்த அணிக்கு மொத்தம் 9 வீரர்கள் தேவைப்படுகிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ரூ.19 கோடியே 90 லட்சம் இருப்பு வைத்திருக்கிறது. ஒரு வெளிநாட்டவர், 5 இந்தியர் என்று 6 பேரை சென்னை அணி எடுக்கலாம்.

ஒவ்வொரு அணியிலும் குறைந்தது 22 பேரும் அதிகபட்சமாக 25 வீரர்களையும் வைத்துக் கொள்ள முடியும். அதன் அடிப்படையில் பார்த்தால் ஒவ்வொரு அணியும் காலியான இடங்களை முழுமையாக நிரப்பினால் மொத்தம் 61 வீரர்கள் இன்றைய ஏலத்தில் எடுக்கப்படுவார்கள்.

ஏலப்பட்டியலில் மேக்ஸ்வெல், ஸ்டீவன் சுமித், ஷகிப் அல்-ஹசன், மொயீன் அலி, சாம் பில்லிங்ஸ், பிளங்கெட், ஜாசன் ராய், மார்க்வுட், கேதர் ஜாதவ், ஹர்பஜன்சிங் ஆகிய 10 பேரின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது இவர்களை ரூ.2 கோடியில் இருந்து ஏலத்தில் கேட்பார்கள். இதில் சுமித், மேக்ஸ்வெல், மொயீன் அலி, கேதர் ஜாதவ், ஹர்பஜன்சிங் ஆகியோர் அதிக விலை போவதற்கு வாய்ப்புள்ளது.

சென்னை அணியில் ஷேன் வாட்சன் ஓய்வு பெற்று விட்டதால் சரியான கலவைக்கு அதிரடியான வெளிநாட்டு வீரர் அவசியமாகும். அனேகமாக மேக்ஸ்வெல், மொயீன் அலி, மார்னஸ் லபுஸ்சேன் (தொடக்க விலை ரூ.1 கோடி) ஆகியோரில் ஒருவரை சென்னை அணி நிர்வாகம் குறி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் சுழற்பந்து வீச்சாளர் இடத்திற்கு கே.கவுதம், ஜலஜ் சக்சேனாவை கவனத்தில் கொண்டுள்ளனர்.

உலகின் ‘நம்பர் ஒன்’ பேட்ஸ்மேனான இங்கிலாந்தின் டேவிட் மலான், அலெக்ஸ் ஹாலஸ் (தொடக்க விலை தலா ரூ.1½ கோடி), ஆரோன் பிஞ்ச், ஹனுமா விஹாரி, உமேஷ் யாதவ் (தலா ரூ.1 கோடி), கைல் ஜாமிசன், கிறிஸ் மோரிஸ் (ரூ.75 லட்சம்), ஷிவம் துபே (ரூ.50 லட்சம்) ஆகியோர் மீதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தொடர்ந்து புறக்கணிக்கப்படும் இந்திய வீரர் புஜாரா (ரூ.50 லட்சம்) மீது இந்த தடவையாவது அணிகள் கரிசனம் காட்டுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஏலப்பட்டியலில் ஷாருக்கான், பெரியசாமி, முகமது, அருண்கார்த்திக், ஹரி நிஷாந்த் உள்பட 8 தமிழக வீரர்களும் அங்கம் வகிக்கிறார்கள். இவர்களில் சமீபத்தில் சையத் முஷ்டாக் அலி கோப்பை 20 ஓவர் தொடரில் அதிரடி காட்டி கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்த ஷாருக்கானை எடுக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது. இவரது ஆரம்ப விலை ரூ.20 லட்சம் ஆகும். தெண்டுல்கரின் மகன் அர்ஜூனும் ஏலப்பட்டியலில் இடம் பிடித்துள்ளது குறிப் பிடத்தக்கது.

ஏலம் நிகழ்ச்சியை பிற்பகல் 3 மணி முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Filed Under: ஆடுகளம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : செரீனா வில்லியம்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஒசாகா

18/02/2021 Leave a Comment

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

இன்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் அரை இறுதி ஆட்டம் ஒன்றில் 3-வது வரிசையில் உள்ள நவோமி ஒசாகா (ஜப்பான்)- 10-வது நிலையில் உள்ள செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா).

இதில் ஒசாகா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். 2019-ம் ஆண்டு சாம்பியன் ஆன அவர் 2-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார். செரீனா 9-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் வாய்ப்பை இழந்தார்.

2-வது அரை இறுதி ஆட்டத்தில் 22-வது வரிசையில் உள்ள ஜெனீபர் பிராடி (அமெரிக்கா)- 25-ம் நிலை வீராங்கனையான கரோலினா முச்கோவா மோதுகிறார்கள். இதில் வெற்றி பெறுபவர் இறுதி போட்டியில் ஒசாகாவுடன் மோதுவார்.

ஆண்கள் ஒற்றையர் அரை இறுதி ஆட்டம் நாளை நடக்கிறது. இதில் ஜோகோவிச் (செர்பியா), கராட்சேவ் (ரஷியா), மெட்வதேவ் (ரஷியா)- சிட்சிபாஸ் (கிரீஸ்) மோதுகிறார்கள்.

Filed Under: ஆடுகளம்

மலாலாவுக்கு மீண்டும் கொலை மிரட்டல்…

18/02/2021 Leave a Comment

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப்சாயைத் தலையில் சுட்ட தலிபான் தீவிரவாதி, அவருக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலிபான்கள் முன்னாள் செய்தித் தொடர்பாளர் இஹ்ஸானுல்லா இஹ்சன் தன் ட்விட்டர் பக்கத்தில், ”மலாலா. உங்களுக்கும் உங்கள் தந்தைக்கும் நாங்கள் கொடுக்க வேண்டியுள்ளது. நாங்கள் இரண்டாவது முறை உங்கள் வாழ்க்கையை எடுக்கும்போது அதில் எந்தத் தவறும் இருக்காது” என்று பதிவிட்டு இருந்தார்.

இந்தப் பதிவு சமூக வலைதளத்தில் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் ட்விட்டர் அப்பக்கத்தை முடக்கியது.

இதனைத் தொடர்ந்து மலாலா அந்தப் பதிவைக் குறிப்பிட்டு, “இவர் தலிபான்களின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் இஹ்ஸானுல்லா இஹ்சன் . நான் உட்பட பல அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்குக் காரணமானவர். இவர் எவ்வாறு சமூக வலைதளத்தில் மக்களை மிரட்ட முடியும். அவர் எவ்வாறு சிறையிலிருந்து தப்பித்தார்” என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானைக் குறிப்பிட்டுக் கேள்வி எழுப்பினார்.

Filed Under: உலகம்

  • « Previous Page
  • 1
  • …
  • 581
  • 582
  • 583
  • 584
  • 585
  • …
  • 590
  • Next Page »

Recent Posts

  • சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியைச் சந்தித்தனர்
  • நாட்டை விட்டுத் தப்பிய சிரந்திக்கு என்ன நடந்தது?
  • பெர்லின் சிவப்பாகிறது!
  • புகையிரதப் பயணிகள் புகையிரதத் திணைக்களத்திற்குச் செலுத்திய நன்றிக்கடன்… வேலைநிறுத்த நாளில் இலவசமாகப் பயணித்தவர்கள் இன்று இரண்டு பயணச்சீட்டுகளைப் பெறுகின்றனர்…
  • விமல் வீரவன்சவை உடனடியாகக் கைது செய்யுமாறு உத்தரவு

Recent Comments

  • Harani on பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு…
  • Aagash on செவ்வந்தியை கைது செய்த ரொஹான் ஒலுகலவிற்கு தொலைபேசியில் ஜனாதிபதி பாராட்டு…
  • P.GNANAPRAGASOM on குட்டித் தேர்தலை இப்போதே நடத்த வேண்டாம் – பயத்தில் பதறிய ரஞ்சித் மத்தும பண்டார
  • Thamil Selvan on பாடசாலை மாணவர்களுக்கு அஸ்வெசும திட்டத்தின் கீழ் 6000 ரூபா – அரசாங்கம் அறிவிப்பு
  • SARINIGAR on அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

English செய்தித்தாள்கள்

  • Sri Lanka Mirror
  • Daily Mirror
  • Lanka News Web
  • Lanka Business Online

பிற வலைத்தளங்கள்

  • Unions Lnaka
  • Left Library
  • Left Magazine
  • SYU Sri Lanka

தமிழ் செய்தித்தாள்

  • Virakesari
  • Thinakkural
  • Tamil Mirror
  • New Uthayan
  • Vidivelli
  • Ada Derana – Tamil

வீடியோ

  • வீடியோ
  • A5News Youtube Channel
  • JVP Newsroom

© Copyright 2002 - 2021 Lanka Truth - Most Reliable Latest News from Sri Lanka. All Rights Reserved.